Latest Updates
-
5500 பணக்காரர்கள் மரணமிலா வாழ்க்கைக்காக அவங்க உடலை உறைய வைக்கப்போறாங்களாம்..மரணத்தை எப்டி ஜெயிப்பாங்க தெரியுமா -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இந்தியர்கள் கூகுளில் 2024-ல் அதிகம் தேடிய டாப் 10 பிரபலங்கள் இவர்கள்தான்... இதிலுள்ள ஒரே நடிகர் யார் தெரியுமா?
Year Ender 2024: நமக்கு பிடித்தவர்களையோ அல்லது நாம் தெரிந்து கொள்ள விரும்புபவர்களைப் பற்றியோ நாம் பொதுவாக கூகுளில்தான் தேடுவோம். நாம் ஒவ்வொரு முறை கூகுளில் ஒருவரைப் பற்றி தேடும் போதும் அது அவர்கள் எவ்வளவு பிரபலமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நிர்ணயிக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் Google நிறுவனம் அந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் சில பிரபலமான மல்யுத்த வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

2024 ஆம் ஆண்டில், கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் ஆவார். 100 கிராம் அதிக எடை கொண்டதால் அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார், இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது அவர் அரசியலில் பங்கேற்பது பொதுமக்களின் ஆர்வத்தையும் அதிகரித்தது. எனவே லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பற்றி கூகுளில் தேடியுள்ளனர்.
இந்த வரிசையில் அடுத்தடுத்த இடத்தில் யார் இருக்கிறார்கள், அவர்கள் எதற்காக தேடப்பட்டார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வினேஷ் போகட்
2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வினேஷ் போகட். அவர் ஒரு பிரபலமான மல்யுத்த வீராங்கனை ஆவார், அவர் 100 கிராம் எடை பிரச்சினையால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததன் மூலம் அதிக கவனத்தை ஈர்த்தார். ஹரியானா சட்டமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதீஷ் குமார்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். 2024 மக்களவைத் தேர்தலின் போது அவரது சாதுரியமான அரசியல் நகர்வுகள் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அவரைப் பற்றி மக்கள் அதிகம் தேடுவதற்கு வழிவகுத்தது.
சிராக் பாஸ்வான்
தீவிர அரசியல்வாதி மற்றும் பீகாரைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சித் தலைவரான சிராக் பாஸ்வான் இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு இளைஞர்கள் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டியதால் அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருப்பவர் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. 2024 ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அவர் தனது அதிரடி ஆட்டத்திற்காக பல நாட்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
பவன் கல்யாண்
ஆந்திராவில் பிரபல நடிகராக இருந்த பவன் கல்யாண் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பவன் கல்யாண் தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராகப் பதவியேறுள்ளார். திருப்பதி லட்டு விவகாரத்தில் அவரது செயல்பாடுகளும், சர்ச்சைகளும் அவரை இந்த பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது.
ஷஷாங்க் சிங்
இந்திய கிரிக்கெட் ஷஷாங்க் சிங் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். 2024-ல் நடந்த ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸுடன் 14 போட்டிகளில் 354 ரன்கள் குவித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
பூனம் பாண்டே
பூனம் பாண்டே இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். நடிகை மற்றும் மாடலான இவர் தனது விளம்பர ஸ்டண்ட்களுக்காக ஊடகங்களில் கவனம் செலுத்துபவர் மற்றும் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.
ராதிகா மெர்ச்சண்ட்
முகேஷ் அம்பானியின் மருமகளான ராதிகா மெர்ச்சண்ட் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். 2024-ல் நடந்த மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்தான். அவர் அனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ஆன பிறகு பிரபலமடைந்தார். அவர்களின் ஆடம்பர திருமணம் அவரை இந்தியாவில் மிகவும் பிரபலமான நபராக மாற்றியது.
அபிஷேக் ஷர்மா
மீண்டும் ஒரு கிரிக்கெட் வீரர் இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இணைந்துள்ளார். அவர் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது பங்களிப்புகளுக்காக பிரபலமாகி வருகிறார், சமீபத்திய போட்டிகளில் முக்கிய வீரர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.
லக்ஷ்யா சென்
பத்தாவது இடத்தில் மற்றொரு விளாயாட்டு வீரர் இடம்பிடித்துள்ளார். இந்த பேட்மிண்டன் வீரரான இவர் சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தன் மூலம் இத பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.



Click it and Unblock the Notifications












