2023-ல் பதிவான விசித்திரமான கின்னஸ் சாதனைகள்! இதுல நடிகர் அக்ஷய் குமாரும் இருக்காரு.. என்ன பண்ணாரு தெரியுமா?

Year Ender 2023: தற்போது 2023 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் நுழைந்துவிட்டோம். இன்னும் ஒரு வாரத்தில் 2024 ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஆர்வம் இருக்கும்.

இப்படி ஒரு ஆர்வத்தில் ஒரு விஷயத்தை செய்யும் போது, அதில் ஒருவித சந்தோஷம் நமக்கு கிடைக்கும். இப்படி ஆர்வத்தில் செய்யும் பல விஷயங்கள் ஒரு கட்டத்தில் சாதனைகளாக மாறி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன.

Year Ender 2023: Top 7 Weirdest Records Made In 2023 In Tamil

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருப்பதால், இந்த ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவான சில விசித்திரமான சாதனைகளை சற்று நினைவுகூர்வோம். முக்கியமாக இந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் அவர்களும் இந்த ஆண்டில் இடம் பிடித்துள்ளார். இப்போது 2023-ல் பதிவான வினோதமான கின்னஸ் சாதனைகள் என்னவென்பதைக் காண்போம்.

1. ஹெலிகாப்டரில் புல்-அப்ஸ்

பொதுவாக தரையில் புல்-அப்ஸ் செய்ய சொன்னாலே கஷ்டமாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட புல்-அப்பை ஹெலிகாப்டரில் செய்ய சொன்னால் எப்டி இருக்கும்? நிச்சயம் இப்படி யாராவது கேட்டால், பலரும் பைத்தியம் பிடித்துவிட்டது என்று தான் கூறுவோம். ஆனால் ஆர்மீனியாவின் ஹமாசாஸ்ப் ஹ்லோயன், ஒரு நிமிடத்தில் ஹெலிகாப்டரில் இருந்து 32 புல்-அப்களை செய்து உலக சாதனையை புரிந்துள்ளார்.

2. நீருக்கு அடியில் நீண்ட நேரம் லிப்கிஸ்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெத் நீல் மற்றும் கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் க்ளூட்டியர் இன்ஃபினிட்டி குளத்தில் மூழ்கி, நீருக்கடியில் சுமார் 4 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகள் வரை முத்தத்தைப் பகிர்ந்து கொண்டு, கின்னஸ் உலக சாதனையைப் புரிந்துள்ளனர். எப்படியெல்லாம் ஜோடியா கின்னஸ் சாதனை படைக்கிறாங்கன்னு பாருங்க...

3. 3 நிமிடத்தில் அதிக செல்ஃபி

நடிகர் அக்ஷய் குமாரும் 2023 ஆம் ஆண்டில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது தெரியுமா? அதுவும் செல்ஃபிக்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் 3 நிமிடங்களில் 168 செல்பி சாதனை புரிந்திருந்தார். இந்நிலையில் அக்ஷய் குமார் 3 நிமிடங்களில் சுமார் 184 செல்ஃபிக்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

4. தக்காளி சாஸ்

உங்களுக்கு தக்காளி சாஸ் பிடிக்காது என்றால், நிச்சயம் இந்த சாதனை உங்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் 2023 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 13 ஆம் தேதி பவேரியாவைச் சேர்ந்த ஆண்ட்ரே ஆர்டோல்ஃப் ஒரு சாதனை படைத்தார். அது என்னவெனில் ஒரு லிட்டர் தக்காளி சாஸை ஒரு நிமிடம் கூட இல்லை, வெறும் 55.21 வினாடிகளிலேயே குடித்து சாதனை புரிந்துள்ளார்.

5. நாக்கைப் பயன்படுத்தி குறுகிய நேரத்தில் ஜெங்காவை அகற்றுவது

நீங்கள் இதுவரை ஜெங்காவை விளையாடியுள்ளீர்களா? இந்த ஜெங்கா விளையாட்டை ஒரு புதிய நிலைக்கு ஒருவர் கொண்டு சென்று உலக சாதனை புரிந்துள்ளார். அது என்னவெனில், பொதுவாக ஜெங்காவை கைகளில் தான் விளையாடுவார்கள். ஆனால் நாக்கில் விளையாடி உலக சாதனை படைத்துள்ளார்.

உலகின் மிக நீளமான நாக்கைக் கொண்ட மனிதரான நிக் ஸ்டோபெர்ல், தனது நாக்கால் ஐந்து ஜெங்கா தொகுதிகளை மிக வேகமாக அகற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நிக் 55.526 வினாடிகளில் அடுக்கில் இருந்து 5 ஜெங்கா தொகுதிகளை நீக்கியுள்ளார். இவர் ஏற்கனவே உலகிலேயே நீளமான நாக்கைக் கொண்டவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். இவரது நாக்கின் நீளம் சுமார் 3.97 இன்ச் ஆகும்.

6. நீளமான கண் இமை கொண்ட நாய்

மனிதர்களால் மட்டும் தான் சாதனைகளை புரிய முடியும் என்று யார் சொன்னார்கள். 2023 ஆம் ஆண்டில் கோகோகோகோ என்ற நியூஃபைபூ நாய் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. 6 வயதான இந்த நாயின் கண் இணை 17.8 செ.மீ நீளத்தில் உள்ளது. இதனால் இது உலகிலேயே நீளமான கண் இமை கொண்ட நாய் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

7. 3,388 லிப் பாம்கள்

நீங்கள் மேக்கப் விரும்பியாக அல்லது மேக்கப் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், இதுவரை நீங்கள் எத்தனை லிப் பாம்களை வைத்திருப்பீர்கள். அதிகபட்சமாக 10 வைத்திருக்கலாம். ஆனால் 7 வயதான ஸ்கார்லெட் செங், லிப் பாம்களின் மீதான ஆர்வத்தால், ஏகப்பட்ட லிப் பாம்களை சேகரித்து வைத்துள்ளார். தற்போது இவரிடம் மொத்தம் 3,388 லிப் பாம்கள் உள்ளன. இந்த லிப் பாம்களை இச்சிறுமி 3 வயதில் இருந்து சேகரிக்க ஆரம்பித்துள்ளாராம்.

Story first published: Saturday, December 23, 2023, 14:46 [IST]
Desktop Bottom Promotion