Latest Updates
-
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
மாம்பழ பானிப்பூரி முதல் பிஸ்கட் பக்கோடா வரை: 2023-ல் இணையத்தில் வைரலான விசித்திர உணவுகள்!
Year Ender 2023: சமீப காலமாக இணையத்தில் விசித்திரமான உணவுச் சேர்க்கைகள் வைரலாகி வருகின்றன. அதுவும் பாரம்பரியமாக சமைத்து சாப்பிடும் உணவுகளில் சில மாற்றங்களை செய்து, பல ரெசிபிக்கள் இணையத்தில் உலாவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
உதாரணமாக, சாக்லேட் நூடுல்ஸ், மயோனைஸ் கலந்த பிரியாணி போன்ற பல விசித்திரமான மற்றும் பலரது முகம் சுளிக்கக்கூடிய வகையில் ஏராளமான உணவுகள் சமூக இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

இப்படி ஒவ்வொரு வருடமும் ஒருசில விசித்திரமான உணவுச் சேர்க்கைகள் வைரலாகியிருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிலும் ஒருசில வினோதமான மற்றும் எதிர்பாராத பல உணவுச் சேர்க்கைகள் கண்டுபிடிக்கப்பட்டு, வைரலாகியுள்ளன.
அதில் பல உணவுச் சேர்க்கைகளைப் பார்க்கும் போது இப்படியுமா சாப்பிடுவார்கள் என்று தான் மனதில் தோன்றும். இப்போது 2023 ஆம் ஆண்டில் இணையத்தில் வைரலான விசித்திரமான உணவுச் சேர்க்கைகள் என்னவென்பதைக் காண்போம்.
தக்காளி ஐஸ்க்ரீம்
2023 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வைரலானது. அது என்னவென்றால், ஒரு வியாபாரி தக்காளி ஐஸ்க்ரீம்மை தயாரித்து கொடுக்கிறார். அந்த வீடியோவில் வாடிக்கையாளர் ஒரு தக்காளியை வியாபாரியிடம் கொடுக்கிறார். அந்த வியாபாரி அந்த தக்காளி நறுக்கி ஐஸ் ட்ரேயில் போட்டு, அதன் மேல் கேரமல், பால் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விடுகிறார். பின் அந்த ஐஸ்க்ரீமை ஒரு தட்டில் வைத்து, மேலே கேரமல் சாஸ் மற்றும் தக்காளியைத் தூவி பரிமாறுகிறார்.
சாக்லேட் ஆம்லெட்
2023-ஆம் ஆண்டு பிரபலமான மற்றொரு விசித்திரமான உணவுச் சேர்க்கை தான் சாக்லேட் ஆம்லெட். இந்த பிரபலமான சாக்லேட் ஆம்லெட் வீடியோவில், வியாபாரி 3-4 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீஸ், மசாலா பொடிகள், கொத்தமல்லி மற்றும் சாக்லேட்டை துருவிப் போட்டு, அதன் மேல் சீஸ் துண்டுகள் மற்றும் சாக்லேட் சாஸ் ஊற்றி கொடுக்கிறார். உங்களுக்கு இந்த ஆம்லேட்டை ட்ரை பண்ண ஆசையா?
குலாப் ஜாமூனுடன் தயிர்
குலாப் ஜாமூன் அனைவருக்குமே நிச்சயம் பிடித்த ஒரு ஸ்வீட். இப்படிப்பட்ட குலாப் ஜாமூனுடன் தயிர் சேர்த்து எப்போதாவது சாப்பிட்டுள்ளீர்களா? 2023 ஆம் ஆண்டில் இன்ஸ்டா ஒன்றில் வியாபாரி ஒருவர் ஒரு பௌலில் தயிரை ஊற்றி குலாப் ஜாமூனை வைத்து விற்கும் வீடியோ வைரலானது. இந்த ஒரு பௌல் தயிருடனான குலாப் ஜாமூனின் விலை 50 ரூபாயாம்.. பிடிச்சா, இந்த காம்பினேஷனை நீங்க ட்ரை பண்ணிப் பாருங்க...
பிஸ்கட் பக்கோடா
இந்தியாவில் பக்கோடா மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இந்த பிரபலமான பக்கோடாவைக் கொண்டு 2023 ஆம் ஆண்டு ஒரு புதிய டிஷ் கண்டுபிடிக்கப்பட்டது. அது தான் ஓரியோ பிஸ்கட் பக்கோடா. இன்ஸ்டாவில் வெளிவந்த இந்த வீடியோவில் ஒருவர் ஓரியோ பிஸ்கட் கொண்டு பக்கோடாவை செய்துள்ளார். உங்களுக்கு பிடிச்சா நீங்களும் ட்ரை பண்ணுங்க..
சீஸி மாம்பழ தோசை
2023 ஆம் ஆண்டில் வைரலான மற்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு விசித்திரமான உணவுக் கலவை தான் இந்த சீஸி மாம்பழ தோசை. இன்ஸ்டாவில் வைரலான இந்த வீடியோவில் ஒருவர் தோசைக்கல்லில் தோசையை சுட்டு, தன் மேல் மாம்பழக் கூழை ஊற்றி, அதன் மேல் பாதாம், முந்திரி, துருவிய சீஸ் ஆகியவற்றைத் தூவி, சுருட்டி சாம்பாருடன் பரிமாறினார்.
மாம்பழ பானிப்பூரி
மாம்பழ பிரியர்களுக்காகவே 2023 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு விசித்திரமான உணவு தான் மாம்பழ பானிப்பூரி. இந்த ரெசிபி இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உணவுகளிலேயே பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது என்றே கூறலாம். இன்ஸ்டா மூலம் வைரலான இந்த வீடியோவில், வியாபாரி மாம்பழக் கூழை பானிப்பூரியில் ஊற்றி பரிமாறினார். நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், இதை முயற்சித்துப் பாருங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் விசித்திரமான உணவுச் சேர்க்கைகளில் உங்களுக்கு பிடித்தது எந்த உணவு என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications