2023 ஆம் ஆண்டில் தனது காதல் துணையை கரம் பிடித்த தமிழ் பிரபலங்கள்! உங்களுக்கு இதுல எந்த ஜோடி பிடிச்சிருக்கு?

Year Ender 2023: நாம் தற்போது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். எப்படியோ 2023 ஆம் ஆண்டை கடந்துவிட்டோம் என்று சந்தோஷப்பட்டாலும், இந்த ஆண்டில் மறக்க முடியாத பல விஷயங்கள் நடந்திருக்கும். ஏன் 2023 ஆம் ஆண்டில் ஏராளமான மாற்றங்களை பலர் தங்கள் வாழ்வில் சந்தித்திருக்கலாம்.

அப்படி தான் பல பிரபலங்களின் வாழ்க்கையும் இந்த 2023 ஆம் ஆண்டில் மாறியுள்ளது. சொல்லப்போனால், அந்த பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர் என்றே கூறலாம். அதாவது சிங்கிளாக இருந்த பல பிரபலங்கள் 2023 ஆம் ஆண்டில் மிங்கிளாகியுள்ளனர்.

Year Ender 2023: Kollywood Celebrities Who Got Married in 2023

இதில் சில பிரபலங்கள் பல ஆண்டுகளாக காதலித்த தனது துணையின் கரத்தைப் பிடித்துள்ளனர். இப்போது 2023 ஆம் ஆண்டில் திருமணமான தமிழ் பிரபலங்கள் யாரெல்லாம் என்பதைக் காண்போம்.

ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா பிரபு

சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தின் இயக்குநர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவரும் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 2023 டிசம்பர் 15 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா ஆதிக்கை விட 7 வயது மூத்தவர் மற்றும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகா நாயர் மற்றும் ரோஹித் மேனன்

நடிகை ராதாவின் மகளும், 'கோ' பட நடிகையுமான கார்த்திகா நாயருக்கும் இந்த ஆண்டில் தான் திருமணம் நடைபெற்றது. நடிகை கார்த்திகா நாயர் தொழிலதிபரான ரோஹித் மேனன் அவர்களை நவம்பர் மாதத்தில் கரம் பிடித்தார். மிகவும் பிரம்மாண்டமாக கேரளாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் தென்னிந்திய திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பலரும் வாயைப் பிளந்தனர். ஏனெனில் கார்த்திகா கிலோ கணக்கில் நகையைப் போட்டு ஜொலித்தார்.

ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா

காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி டிவி நடிகையான சங்கீதாவை 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தார். ரெடின் கிங்ஸ்லியும், சங்கீதாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதில் சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் மற்றும் இவருக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ரூபாலி பருவா

பழம்பெரும் நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தியும், பாடகியான ரூபாலியும் காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் 2023 ஆம் ஆண்டின் மே மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

கவின் மற்றும் மோனிகா டேவிட்

பிக்பாஸ் கவின் என்றதும் நினைவிற்கு முதலில் வருவது, லாஸ்லியாவாகவே இருக்கும். அந்த அளவில் அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் நடிகர் கவின் இந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் தனது நீண்டகால காதலியான மோனிகா டோவிட்டை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.

அமலா பால் மற்றும் ஜகத் தேசாய்

ஆம், ஒருவழியாக நடிகை அமலா பால் 2023 ஆம் ஆண்டில் தனது நீண்டகால காதலரான ஜகத் தேசாயை கேரளாவின் கொச்சியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கிராண்ட் ஹையாட் கொச்சி போல்காட்டியில் நடைபெற்றது. இச்செய்தியை வெளிப்படுத்தும் வகையில் திருமண செய்தியை தம்பதிகள் இருவரும் இன்ஸ்டாவில் தங்களின் திருமண போட்டோக்களை பகிர்ந்து கொண்டனர்.

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன்

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் ஒரு திறமையான ஜோடி. இவர்கள் இருவருக்கும் 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளின் திருமணம் நடந்த விதம் அனைவராலும் சிறப்பாக பேசப்பட்டது. தற்போது தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய ஜோடிகளில் ஒன்றாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.

Desktop Bottom Promotion