Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
உலகின் சிறந்த உணவுகளில் 11-வது இடத்தை பிடித்திருக்கும் இந்தியா.... முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?
இந்திய உணவுகளுக்கென்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உணவைப் பொறுத்தவரை, இந்தியாவில் பல்வேறு வகையான உணவுகள் உள்ளன, அவை உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளன.
சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி, இந்தியர்கள் எப்போதும் ஒவ்வொரு இறைச்சியை அல்லது காய்கறியை, அதன் சிறப்பாந வடிவத்தில் சமைத்து அதன் உண்மையான சுவையை வெளிக்கொணர ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சுவைகள் மற்றும் மசாலாப் பொருட்களால் நிறைந்த, இந்திய உணவு வகைகள் பாரம்பரியம் நிறைந்த மற்றும் எப்போதும் வெவ்வேறு பரிமாணத்துடன் கூடிய சமையல் அனுபவத்தை வழங்குகிறது. குரோஷியன் அனுபவ பயண ஆன்லைன் வழிகாட்டியான டேஸ்ட்அட்லஸ், உணவு மற்றும் உணவுப் பொருட்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்திய உணவு வகைகளை உலகின் 11வது சிறந்த உணவு வகைகளாகத் தரவரிசைப்படுத்தியுள்ளது.
இந்தியா அதன் கலாச்சாரம் மற்றும் அற்புதமான சுவைக்கு ஒரு அதீத முக்கியத்துவம் கொடுத்தாலும், இந்த பட்டியலில் இத்தாலி முதலிடத்திலும், ஜப்பான் மற்றும் கிரீஸுக்கு அடுத்தபடியாகவும் இருந்தது.
டேஸ்ட்அட்லஸின் கூற்றுப்படி, இந்திய உணவு வகைகள் உலகின் 11-வது சிறந்த உணவு வகைகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உணவு அமெரிக்கா, தென் கொரியா, லெபனான் மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான நாடுகளை விட மேலான இடத்தைப் பிடித்தது.
4.54 புள்ளிகளுடன் பெரு 10வது இடத்தையும், பிரேசில் 12வது இடத்தையும் பிடித்துள்ளது. TasteAtlas கூறியுள்ள அறிக்கையில், "395,205 (271,819 சரியான வாக்குகள்) டிஷ் மதிப்பீடுகள் செய்து மற்றும் 115,660 (80,863 சரியான வாக்குகள்) உணவு தயாரிப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த உணவு வகைகள் அந்த முதல் 50 உயர்தர உணவுகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான சிறந்த சராசரி மதிப்பீடுகளைப் பதிவு செய்துள்ளன."
டேஸ்ட்அட்லஸ் பட்டியலில் முதல் 9 உணவு வகைகள் இத்தாலி, ஜப்பான், கிரீஸ், போர்ச்சுகல், சீனா, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளன. உலகின் 100 சிறந்த உணவுகளின் அடிப்படையில், வெண்ணெய் பூண்டு நான் 7வது இடத்தையும், முர்க் மக்கானி (பட்டர் சிக்கன்) 43வது இடத்தையும், சிக்கன் டிக்கா 47வது இடத்தையும், சிக்கன் தந்தூரி 48வது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள உணவுகள் பிரேசிலியன் மாட்டிறைச்சி கட் பிக்கன்ஹா, பிளாட்பிரெட் ரொட்டி கனாய், Stir-fried Phat kaphrao, பிஸ்ஸா நெப்போலிடெனா(Pizza Napoletena) மற்றும் Dumplings Guotie ஆகியவை உள்ளன. டேஸ்ட்அட்லஸ் அவர்களின் இணையதளத்தில், "395,205 பயனர் மதிப்பீடுகளின் (271,819 சரியான வாக்குகள்) அடிப்படையில் பட்டியலிடப்பட்ட 10,927 உணவுகளில், இந்த 100 உணவுகள் அதிக மதிப்பீடுகளைப் பெற்றன" என்று கூறியுள்ளது.
டேஸ்ட்அட்லஸின் 100 சிறந்த உணவு வகைகளில் 11வது இடத்தைப் பிடித்தது இந்திய உணவு வகைகளுக்குக் கிடைத்த பெருமை என்றாலும், அதன் திறனை உலகம் அங்கீகரிப்பது இது முதல்முறையல்ல. 2023 கேன்ஸ் திரைப்பட விழாவின் போது, இந்திய சமையல் கலைஞர் பிரதீக் சந்து, புகழ்பெற்ற திரைப்பட விழாவிற்கான தொடக்க விருந்தை உருவாக்கி, உலகப் பங்கேற்பாளர்களுக்கு தினை தோரன், மால்வானி பாணி சோல் மீன், உருளைக்கிழங்கு கோஷிம்பிர் பெங்காலி சந்தேஷ், மைசூர் பாக், காஷ்மீரி கஹ்வா போன்ற உணவுகளை வழங்கினார்.
டேஸ்ட்அட்லஸ் உலகின் சிறந்த சாலையோர தெரு உணவுகள் பட்டியலில் டிக்கா, தோசை, சோலே பத்தூர் மற்றும் அமிர்தசாரி குல்ச்சா போன்ற சாலையோர உணவுகளையும் பட்டியலிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
