Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
நீச்சல் குளம் மற்றும் ஹெலிபேட் உள்ள உலகின் மிகவும் நீளமான மற்றும் ஆடம்பரமான கார் எது தெரியுமா?
ஆடம்பர கார்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பொதுவாக ஆடம்பர கார்கள் என்றால் அவை உலகின் முன்னணி கார் நிறுவனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட அதிக செயல்திறன் கொண்ட புயலைப்போல வேகமாக செல்வதாக இருக்கும். ஆனால் உண்மையில் ஆடம்பர கார்கள் என்றால் அவை நம்ப முடியாத வசதிகளை வழங்குவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் உலகிலேயே இந்த கார்தான் மிகவும் ஆடம்பரமான காராகும்.
இந்த கார் மிகவும் தனித்துவமானது. இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த லிமோசின் கார்தான் உலகின் மிகவும் நீளமான காராகும், மேலும் இது கற்பனை செய்ய முடியாத நீளத்தில் பிரமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர வாகனத்தில் நீச்சல் குளம், ஜக்குஸி, ஹெலிபேட் மற்றும் மினி-கோல்ஃப் மைதானம் கூட உள்ளது. இது வெறும் வாகனம் அல்ல, மனிதர்களின் கற்பனையில் உருவாகிய நகரும் அரண்மனையாகும்.

இந்த கின்னஸ் சாதனை படைத்த காரை உருவாக்கியது யார்?
கிட்டதட்ட 30.54 மீட்டர் அதாவது 100 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான இந்த கார் 26 சக்கரங்களைக் கொண்டுள்ளது. இந்த சூப்பர் லிமோசின் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட கார் தயாரிப்பாளரான ஜெய் ஓர்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்டது. முதலில் காரை உருவாக்கிய போது, இந்த கார் 60 அடி நீளமாக இருந்தது, பின்னர் அது 100 அடியாக நீட்டிக்கப்பட்டது.
கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, " இந்த கார் கலிபோர்னியாவின் பர்பாங்கில் 1986 ஆம் ஆண்டு புகழ்பெற்ற கார் வடிவமைப்பாளர் ஜெய் ஓர்பெர்க்கால் கட்டப்பட்டது, "தி அமெரிக்கன் டிரீம்" என்று பெயரிடப்பட்ட இது முதலில் 18.28 மீட்டர் (60 அடி) அளவிடப்பட்டது, 26 சக்கரங்கள் கொண்டதாக இருந்தது, மேலும் முன் மற்றும் பின்புறத்தில் ஒரு ஜோடி V8 எஞ்சின்களைக் கொண்டிருந்தது." பின்னர், ஜெய் ஓர்பெர்க் லிமோவை வியக்க வைக்கும் வகையில் 100 அடி நீளத்திற்கு நீட்டித்தார்.
தி அமெரிக்கன் டிரீமின் மறுசீரமைப்பு
கின்னஸ் உலக சாதனைகளின்படி, "தி அமெரிக்கன் டிரீம்" கார் உலகின் மிக நீளமான கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த ஜே ஓர்பெர்க் 1986 ஆம் ஆண்டு வடிவமைத்த இந்த ஆடம்பர லிமோசின் ஆரம்பத்தில் 18.28 மீட்டர் நீளமும், 26 சக்கரங்களும் கொண்டதாக இருந்தது மற்றும் இரட்டை V8 எஞ்சின்களால் இயக்கப்பட்டது, இதில் ஒன்று முன்பக்கத்திலும் மற்றொன்று பின்புறத்திலும் பொருத்தப்பட்டது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கார் மீண்டும் மறுசீரமைப்புக்கு உட்பட்டது, அதன் ஆரம்ப கால அளவை விஞ்சி 30.54 மீட்டர் (100 அடி மற்றும் 1.5 அங்குலம்) நீளத்துடன் மறுசீரமறைக்கப்பட்டு புதிய சாதனையை படைத்தது.
காரின் சிறப்பு அம்சங்கள்
அமெரிக்கன் டிரீம் லிமோசின், அரண்மனையில் இருக்கும் வசதிகளை வழங்குகிறது. இதில் ஒரு பெரிய வாட்டர் பெட், நீச்சல் குளம், டைவிங் போர்டு, ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ஃப் மைதானம் மற்றும் ஒரு ஹெலிபேட் போன்ற ஆடம்பர வசதிகள் உள்ளது. அனைத்திற்கும் மேலாக, இந்த காரில் ஒரே நேரத்தில் 75 க்கும் மேற்பட்டவர்கள் வசதியாக பயணிக்கலாம்.



Click it and Unblock the Notifications

