Latest Updates
-
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்!
World Violin Day 2023: மனதை வருடும் சில வயலின் இசையுடன் கூடிய தமிழ் பாடல்கள்! இதுல உங்களுக்கு எது பிடிக்கும்?
World Violin Day 2023: வயலின் என்ற இசைக்கருவி மேலைநாடுகளில் இருந்து வந்தது. இது கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது. இந்த வயலின் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் இருந்து கர்நாடக இசையில் ஒரு முக்கிய இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வயலின் குரலுக்கு இணையாக ராகங்களையும், மெட்டுகளையும் இசைக்கக்கூடிய கருவி.
உலக வயலின் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வயலின் இசையின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கவும், வயலின் கலைஞர்களின் கலையை பாராட்டவும் வாய்ப்பளிக்கும் ஒரு சர்வதேச விழா தான் இது. இந்த வயலின் உலகளவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்நாளில் இசை ஆசிரியர்கள், இசையைக் கற்பவர்கள், வயலின் இசை கலைஞர்களால் பல்வேறு வயலின் இசைக் கச்சேரிகள் நடத்தப்படும்.

உலக வயதின் தினமான இன்று இனிமையான மெல்லிசையை வழங்கும் வயலினைக் கொண்டு தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த மற்றும் பலரது மனதை கவர்ந்த ஒருசில பாடல்களை கீழே கொடுத்துள்ளோம். இவற்றில் உங்களுக்கு பிடித்தமான பாட்டு எதுவென்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* நியூயார்க் நகரம் - 'ஜில்லுன்னு ஒரு காதல்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான ஒரு பாடல் தான் "நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்". இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் இதில் வயலின் வாசித்தவர் பினேஷ் பாபு என்பவர்.
* வசீகரா - நடிகர் மாதவன் நடித்த "மின்னலே" என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தான் "வசீகரா". இந்த பாடலின் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அவர்கள் மற்றும் இதில் வயலின் வாசித்தவர் கார்த்திக் ஐயர் என்பவர்.
* சிநேகிதனே - நடிகர் மாதவன் நடித்த "அலைப்பாயுதே" என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தான் "சிநேகிதனே". இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் இதில் வயலின் வாசித்தவர் ரூபா ரேவதி என்பவர்.
* முன்பே வா என் அன்பே வா - 'ஜில்லுன்னு ஒரு காதல்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான ஒரு பாடல் தான் "முன்பே வா என் அன்பே வா". இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் இதில் வயலின் வாசித்தவர் கார்த்திக் ஐயர் என்பவர்.
* காற்றின் மொழி - நடிகை ஜோதிகா நடித்த "மொழி" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் தான் காற்றின் மொழி. இந்த பாடலின் இசையமைப்பாளர் வித்யாசாகர் மற்றும் இதில் வயலின் வாசித்தவர் கல்யாண் என்பவர்.
* கன்னத்தில் முத்தமிட்டால் - "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் தான் "கன்னத்தில் முத்தமிட்டால்". இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் இதில் வயலின் வாசித்தவர் சபரீஷ் பிரபாகர் என்பவர்.
* புது வெள்ளை மழை - "ரோஜா" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் தான் "புது வெள்ளை மழை". இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் இதில் வயலின் வாசித்தவர் பினேஷ் பாபு என்பவர்.
* அழகியே - நடிகர் கார்த்தி "காற்று வெளியிடை" என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் தான் "அழகியே". இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மற்றும் இதில் வயலின் வாசித்தவர் மனோஜ் குமார் என்பவர்.
இவைகளைத் தவிர, இசைஞானி இளையராஜா அவர்களின் மெல்லிசை பாடல்கள் அனைத்திலுமே வயலின் இசைக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல்களைத் தவிர, உங்களுக்கு வேறு எந்த பாடல்கள் பிடிக்கும் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications