Latest Updates
-
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா?
இந்த 4 ராசி பெண்கள் கண்டதும் காதலில் விழுவார்களாம்... இவங்க காதல் இவங்களுக்கு சந்தோஷத்தைத்தான் கொடுக்குமாம்...
காதல் அனைவரின் வாழ்க்கையிலுமே தவிர்க்க முடியாத ஒரு அனுபவமாகும். சிலர் கண்டதும் காதலில் விழுபவர்களாக இருப்பார்கள், சிலர் காதலில் விழுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் எவ்வ்ளவு விரைவாக காதலில் விழுகிறீர்கள் என்பதை நிர்ணயிப்பதில் உங்களின் ராசி நிர்ணயிக்கக்கூடும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் கண்டதும் காதலில் விழுபவர்களாக இருப்பார்கள். சில ராசி பெண்கள் காதலில் விழுவுவதற்கு முன் நீண்ட ஆராய்ச்சியே நடத்துவார்கள். ஒவ்வொரு ராசிக்கும் காதலில் ஒரு தனிப்பட்ட அணுகுமுறை உள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் விரைவில் காதலில் விழுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் பிறந்த பெண்கள், அவர்களின் ஆக்ரோஷமான மற்றும் தூண்டுதல் இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். பேரார்வம் மற்றும் ஆசையின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசி பெண்கள் ரிஸ்க் எடுப்பதற்கு ஒருபோதும் பயமோ, வெட்கமோ கொள்ளமாட்டார்கள், குறிப்பாக காதல் விஷயங்களில்.
அவர்கள் காதல் தரும் மகிழ்ச்சியை விரும்புகிறார்கள் மற்றும் தயக்கமின்றி புதிய உறவுகளில் விரைவாக குதிக்கின்றனர். அவர்களின் தன்னிச்சையான குணம் மற்றும் அச்சமின்மை அவர்களை விரைவில் காதலில் விழும் ராசியாக மாற்றுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமான ஆளுமைகள் மற்றும் காதல் மீதான அவர்களின் திறமைக்கு பெயர் பெற்றவர்கள். சூரிய மண்டலத்தின் மையமான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து கவனத்தையும் போற்றுதலையும் விரும்புகிறார்கள்.
அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்ள் மீது காதலைப் பொழிவதை விரும்புகிறார்கள் மற்றும் பெரும் காதல் செயல்களால் எப்போதும் தங்கள் காதலரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயலுகிறார்கள். சிம்ம ராசி விரைவில் காதலில் விழுகிறார்கள், அவர்கள் தங்கள் உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த பயப்படுவதில்லை.
துலாம்
காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள் இயல்பிலேயே காதலில் அதிக விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் தேடும் இயற்கையான வசீகரர்கள்.
துலாம் ராசி பெண்கள் விரைவில் காதலில் விழுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் சரியான துணையைக் கண்டறியும் இலட்சியத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு உறவை உருவாக்க முயற்சியில் ஈடுபடத் தயாராக உள்ளனர், மேலும் அவர்கள் சரியானவர் என்று நம்பும் ஒருவருடன் காதலில் ஈடுபட ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்.
மீனம்
மீனம் ராசி பெண்கள், அவர்களின் ஆழ்ந்த பச்சாதாபத்திற்கும் இரக்கத்திற்கும் பெயர் பெற்றவர்கள். கற்பனை மற்றும் ஆன்மீகத்தின் கிரகமான நெப்டியூன் ஆளப்படுகிறார்கள், மீன ராசி பெண்கள் மிகவும் உணர்திறன் கொண்ட ஆன்மாக்கள், அவர்கள் எப்போதும் தங்கம் மூளை சொல்வதை கேட்பதற்குப் பதில் இதயம் சொல்வதை கேட்டு செயல்படுவார்கள்.
அவர்கள் காதலின் சக்தியை நம்பும் இயற்கையான ரொமாண்டிக் ஆன்மாக்கள் மற்றும் தங்கள் இதயத்தைக்த் கவரும் ஆண் மீது உடனுக்குடன் காதலில் விழுவார்கள். மீன ராசி பெண்கள் விரைவில் காதலில் விழுவதற்கான காரணம், ஏனென்றால் அவர்கள் மற்றவர்களின் சிறந்த குணத்தைத்தான் பார்க்கிறார்கள் மற்றும் அர்த்தமுள்ள இணைப்பை உருவாக்க ஆர்வமாக உள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
