Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசி பெண்கள் கப்பலை வழிநடத்தும் கேப்டன் போல திருமண உறவில் பொறுப்பான மனைவியாக இருப்பார்களாம்...!
ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒருவரின் திருமண வாழ்க்கை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால்தான் இந்தியாவில் திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு ஜாதகம் பார்க்கப்படுகிறது.
திருமண உறவுகளை வடிவமைப்பதில் ராசிகள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? சில ராசி பெண்கள் திருமண உறவில் மிகவும் ஆதிக்கம் செலுத்துபவர்காளக இருப்பார்கள். அவர்களின் உறவில் அனைத்தும் அவர்கள் முடிவெடுப்பதாகவே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் மனைவியாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் தங்கள் தைரியமான மற்றும் உறுதியான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். திருமணத்தில், அவர்கள் தங்கள் அச்சமற்ற உறுதியுடன் முன்னிலை வகிக்கிறார்கள். திருமண உறவில் முடிவெடுப்பதற்கும் சிக்கலைத் தீர்ப்பதற்கும் அவர்கள் எப்போதும் தீவிரமாக முயற்சிக்கிறார்கள் மற்றும் அவர்களின் முடிவுகள் எப்போதும் சரியானதாக இருக்கும் தன்னம்பிக்கை அவர்களிடம் இருக்கும்.
நீங்கள் மேஷ ராசி பெண்ணை திருமணம் செய்துகொண்டால், சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் பொறுப்பேற்க பயப்படாத ஒரு மனைவியை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் வசீகரம் நிறைந்தவர்கள், இது அவர்களை இயற்கையாகவே ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற்றுகிறது. திருமண உறவில் சிம்ம ராசி பெண்கள் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள், அனைத்து விஷயங்களிலும் தங்கள் விருப்பம் நிறைவேறுவதை உறுதிசெய்கிறார்கள். உங்கள் மனைவி சிம்ம ராசிக்காரராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும், இது உறவுக்கு மகிழ்ச்சி மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைச் சேர்க்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க ஆளுமைகளுக்கு பெயர் பெற்றவர்கள். திருமண உறவில் அவர்கள் கடுமையான அர்ப்பணிப்புடன் முன்னணியில் இருப்பார்கள். உறவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது, மேலும் அவர்கள் பெரும்பாலும் தங்கள் துணையின் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர்.
ஒரு விருச்சிக ராசி மனைவி திருமண பந்தத்திற்கு விசுவாசத்தையும், சுவாரஸ்யத்தையும் கொண்டு வருகிறார். உங்கள் மனைவி விருச்சிக ராசிக்காரராக இருந்தால் உங்கள் திருமணம் த்ரில்லிங்காக இருக்கும்.
மகரம்
மகர ராசி பெண்கள் தங்கள் வலுவான பொறுப்புணர்வு மற்றும் உறுதியால் வகைப்படுத்தப்படுகிறார்கள். திருமணத்தில், அவர்கள் எப்போதும் சரியான முடிவெடுப்பவர்களாக இருப்பதன் மூலம் பொறுப்பேற்கிறார்கள்.
அவர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் இலக்கு சார்ந்த அணுகுமுறை திருமண உறவில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. நீங்கள் ஒரு மகர ராசி பெண்ணை மணந்திருந்தால், கப்பலை வழிநடத்தும் கேப்டன் போல உங்கள் திருமண உறவை வழிநடத்த நீங்கள் அவரை நம்பலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
