Latest Updates
-
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க
பெண்கள் உடலில் இந்த இடங்களில் மச்சம் இருந்தா அவங்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தானாம்... உங்களுக்கு இருக்கா?
நம் உடலில் உள்ள மச்சங்கள் வெறும் அழகுக்கான அறிகுறியாக இருப்பதில்லை. காலம் காலமாக மச்சங்கள் ஒருவரின் அதிர்ஷ்டம் மற்றும் ஆளுமையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. நம் உடலில் உள்ள மச்சங்கள் அவை அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. மச்சங்களின் அர்த்தங்கள் வெவ்வேறு கலாச்சாரங்களில் மாறுபடுகின்றன.
சிலர் தங்கள் கலாச்சாரத்தின்படி வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர், நம் நாட்டைப் பொறுத்தவரை வரை மச்சங்கள் ஒருவரின் ஆளுமையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறார்கள் மற்றும் உடலில் அவை இருக்குமிடத்தை பொறுத்து அவை ஒருவரின் விதியை நிர்ணயிக்கிறது. அதன்படி பெண்களின் உடலில் சில இடங்களில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாம்.

கண்களில் மச்சம்
உங்களுக்கு வலது கண்ணிலோ அல்லது அருகிலோ மச்சம் இருந்தால், நீங்கள் எளிதில் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள், மேலும் அதிர்ஷ்டத்தையும் விரைவில் அடைவீர்கள். உங்களுடைய சொந்த விருப்பப்படி ஒரு பையனை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள், மேலும் உங்கள் உறவில் தீவிர கவனம் செலுத்தி வலுவான மற்றும் உறுதியான திருமண உறவைப் பெறுவீர்கள். உங்கள் திருமண உறவில் கவனம் செலுத்தவில்லை என்றால் விரைவில் உங்கள் கணவர் வேறு உறவை தேடுவதற்கு வாய்ப்புள்ளது.
காதில் மச்சம்
உங்கள் காதில் மச்சம் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் ஆணுடன் நீங்கள் நல்ல நட்பை உருவாக்குவீர்கள், பின்னர் அசைக்க முடியாத காதல் மற்றும் திருமண உறவில் ஈடுபடுவீர்கள். நீங்கள் நிச்சயமாக காதல் திருமணம் செய்துகொள்வீர்கள், ஆனால் அந்த நபரை நிச்சயிக்கப்பட்ட திருமணமாக செய்து கொள்ள விரும்புவீர்கள், இது ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக கருதப்படும்.
கன்னத்தில் மச்சம்
கன்னத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், நீங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலித்து, அதே நபரை திருமணம் செய்து கொள்வீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதையும் உங்கள் கணவருக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் நபராக நீங்கள் இருக்கிறீர்கள், ஆனால் ஆழ்மனதில் நீங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்புவீர்கள். உங்கள் நட்பான குணம் மூலம் நீங்கள் எண்ணற்ற நண்பர்களையும் மற்றவர்கள் மீது நேர்மறையான கண்ணோட்டத்தையும் உருவாக்குவீர்கள்.
உதட்டின் மேல் மச்சம்
உங்கள் உதடுகளில் மச்சம் இருந்தால், நீங்கள் ஒரு திறந்த மனதுடையவர் மற்றும் யாரையும் விரைவாக உங்களின் புன்னகை மூலம் கவர்ந்திக்கக் கூடியவர், இதனால் எளிதில் உங்களுக்கு பிடித்த நபருடன் உறவுகளை எளிதில் உருவாக்கக்கூடியவர், இதனால் மக்கள் உங்கள் வசீகரத்தின் மீது காதல் கொள்கிறார்கள். உங்களுக்கு காதல் மிகவும் முக்கியம் ஆனால் உங்கள் சுதந்திரம் மிக முக்கியமானது, உங்கள் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நபர் உங்களுக்கு கிடைத்தால், உங்கள் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள்.
கையில் மச்சம்
உங்கள் கையிலோ அல்லது உங்கள் உள்ளங்கையிலோ மச்சம் இருந்தால், உங்களின் திருமணத்தை நீங்களே முடிவு செய்யும் நபராக இருப்பீர்கள். நீங்கள் ஆண்களிடம் எளிதில் ஈர்க்கப்படுவீர்கள், மேலும் உங்களை விட வயதான ஆண்களை விரும்புவீர்கள். வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் உங்களுக்காக காத்திருக்கிறது, ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் எதார்த்தமான மற்றும் அர்ப்பணிப்புள்ள தனிநபராக இருக்கிறார்கள்.
கால்கள் மற்றும் பாதத்தில் மச்சம்
உங்கள் வலது காலில் மச்சம் இருந்தால், நீங்கள் ஆராய்ந்து பயணிக்க விரும்புகிறீர்கள் என்பதை இது குறிக்கலாம். மறுபுறம், உங்கள் இடது காலில் மச்சம் இருந்தால், அது உடலில் காதல் திருமணத்தின் நல்ல அறிகுறிகளில் ஒன்றாகும். அதாவது காதல் திருமணத்தில் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும், ஆனால் நீங்கள் அவற்றை சமாளித்து இறுதியில் காதல் திருமணத்தை செய்வீர்கள்.



Click it and Unblock the Notifications
