Latest Updates
-
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த 5 ராசி பெண்கள் அவங்க கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாம்... உங்க மனைவி ராசி என்ன?
உங்கள் உறவு என்பது உங்கள் வாழ்க்கையில் அன்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும். சில சமயங்களில் உங்கள் விதி உங்களுக்கு சாதகமாக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
உங்கள் உறவின் விதியை வடிவமைப்பதில் உங்கள் துணையின் ராசிக்கும் ஒரு பங்கு இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஜோதிடத்தின் மாய உலகில், சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் துணையின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் நேர்மறையையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வருபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
உங்கள் மனைவி மேஷ ராசிக்காரராக இருந்தால் இருந்தால் நீங்கள் ஜாக்பாட் அடித்திருப்பதாக அர்த்தம். மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே ஆர்வமானவர்கள், எப்போதும் ஒரு புதிய சாகசத்தை மேற்கொள்வார்கள். அவர்களின் அளவில்லா ஆற்றல் உங்கள் வாழ்க்கையை உற்சாகத்தால் நிரப்பும்.
நீங்கள் ஒரு குழப்பத்தில் சிக்கிக்கொண்டதாக உணரும்போது, அவர்கள் உங்களை உங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேற்றி அதிர்ஷ்ட உலகிற்குத் தள்ளுவார்கள். உங்கள் மனைவி மேஷ ராசியினராக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்போதும் நிறைந்திருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி சூரியனால் ஆளப்படுகிறது, மேலும் சூரியன் உலகிற்கு ஒளியைக் கொண்டு வருவது போல, சிம்ம ராசி பெண்கள் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் இயல்பான கவர்ச்சி மற்றும் தலைமைத்துவ திறன்கள் நீங்கள் அறிந்திருக்காத கதவுகளைத் திறக்கும்.
உங்கள் சிம்ம ராசி மனைவியின் காந்த ஆளுமை மற்றவர்களின் இதயங்களை வெல்வது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை ஈர்க்கும், ஏனெனில் நீங்கள் சரியான நபரை மணந்திருக்கிறீர்கள்.
துலாம்
குழப்பம் நிறைந்த உலகில், நல்லிணக்கத்தையும் சமநிலையையும் உருவாக்க துலாம் ராசி பெண்கள் ஒரு தனித்துவமான திறனைக் கொண்டுள்ளார்கள். ஒரு துலாம் ராசி மனைவி உங்கள் புயல் நிறைந்த வாழ்க்கையில் நங்கூரமாக செயல்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள்.
வேலையில் ஒரு சவாலான சூழ்நிலை அல்லது குடும்ப தகராறு ஏற்படும் போது, உங்கள் துலாம் ராசி மனைவியின் முரண்பாடுகளை மத்தியஸ்தம் செய்து தீர்க்கும் திறன் தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில்ரீதியாக எதிர்பாராத நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் ஆழ்ந்த உள்ளுணர்வு மற்றும் மர்மமான கவர்ச்சிக்காக அறியப்படுகிறார்கள். அவர்களின் அசைக்க முடியாத உறுதியானது உங்கள் மறைக்கப்பட்ட திறனைத் திறக்க உதவும்.
ஒரு முக்கிய வாழ்க்கை முடிவை எதிர்கொள்ளும் போது, உங்கள் விருச்சிக ராசி மனைவியின் வழிகாட்டுதல் உங்களை சரியான பாதையை நோக்கி வழிநடத்தும். அவர்களின் உள்ளுணர்வு ஒரு திசைகாட்டி போன்றது, அவர்கள் உங்களை அதிர்ஷ்டத்தின் திசையில் அழைத்துச் செல்வார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சிறந்த நம்பிக்கையாளர்கள், எந்த சூழ்நிலையிலும் அதிலிருக்கும் நல்லதைப் பார்க்கிறார்கள். இந்த நேர்மறையான கண்ணோட்டம் அவர்களின் துணைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கலாம் மற்றும் நம்பமுடியாத வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும்.
இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருப்பதை கற்பனை செய்து பாருங்கள், ஆனால் உங்கள் தனுசு ராசி மனைவியின் இடைவிடாத நம்பிக்கை மற்றும் வழிகாட்டல் உங்களை சிக்கல்களில் இருந்து காப்பாற்றி அதிர்ஷ்டத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
