Latest Updates
-
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும்
பிறக்கும் போதே 32 பற்களுடன் பிறந்த குழந்தை - அதுக்கு இந்த நோய் தான் காரணமாம்...
New Born Baby Born With 32 Teeth: பொதுவாக பிறக்கும் குழந்தைக்கு பற்கள் இருக்காது. குழந்தை வளர வளர தான் பால் பற்கள் வளரவே தொடங்கும். இப்படி நன்கு வளர்ந்த ஒருவருக்கு சுமார் 32 பற்கள் இருக்கும். அதுவும் இவ்வளவு பற்களும் 21 வயதை எட்டும் போது தான் இருக்கும். ஒருவரது பற்களின் வளர்ச்சிக்கு பல்வேறு காரணிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதில் போதுமான ஊட்டச்சத்தைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது.
ஆனால் சமீபத்தில் இன்ஸ்டாவில் ஒரு பெண் வெளியிட்ட வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் அந்த பெண் தனது பிறந்த குழந்தை 32 பற்களுடன் பிறந்திருப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் இந்த பெண் தனது மகளின் அரிய வகை நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் தீயாய் பரவும் இந்த வீடியோவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 32 பற்களுடன் பிறந்த தனது குழந்தையின் பல்வேறு போட்டோக்கள் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பொதுவாக இப்படி பிறக்கும் போது பற்களைக் கொண்டிருப்பதை 'நேட்டல் டீத்' (Natal Teeth) என்று அழைப்பர். இந்த நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதே பற்களைக் கொண்டிருப்பார்கள். இப்படி பற்களைக் கொண்டிருப்பது அவ்வளவு பெரிய ஆபத்தானது இல்லை என்றாலும், தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில் குழந்தைகள் பால் குடிக்கும் போது கடிப்பார்கள். இப்படி கடித்தால், அது தாய்க்கு மிகுந்த வலியையும், காயங்களையும் ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, குழந்தை கடிக்கும் போது, அந்த பற்கள் ஒருவேளை உடைந்தால், அதை குழந்தை விழுங்கவும் வாய்ப்புள்ளது.
இன்ஸ்டாவில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவுடன், அந்த பெண் "என் மகள் முழு பற்களுடன் பிறந்தாள், மேலும் இந்த நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன் என்று நம்புகிறேன்" என்றும் எழுதியிருந்தார். இப்படி இந்த பெண் வீடியோவை வெளியிட்டதும், பலரும் உடனே கமெண்ட் பாக்ஸிற்கு சென்று தங்களின் விருப்பங்களை தெரிவித்தனர். அதில் சிலர் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் குழந்தையை பார்க்க பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு பயனர் "குழந்தை நலமாக இருக்கும் என நம்புகிறேன். குழந்தை வளரும் போது ஏதாவது பிரச்சனையை எதிர்கொண்டீர்களா?" என்று கேட்டுள்ளனர். மற்றொரு பயனர், "சொல்வதற்கு மன்னிக்கவும், ஆனால் குழந்தை பார்க்க பயமாக இருக்கிறது" என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
வேறொரு பயனர், "இது வேடிக்கையானது அல்ல. உண்மையில் அரிதான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களை சமூகம் விசித்திரமாக பார்ப்பதோடு, விலக்கியும் வைக்கக்கூடும். இந்த அரிய குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் நல்ல வாழ்க்கையைப் பெற தங்களின் முழு ஆதரவை வழங்க முயற்சிக்கிறார்கள். இது கேலி செய்ய வேண்டிய ஒன்று அல்ல; ஒரு தீவிரமான விஷயம்" என்று தெரிவித்திருந்தார்.



Click it and Unblock the Notifications