Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
பல்லிகள் எப்படி சுவரில் தலைகீழாக நடக்கும் போது கூட கீழே விழாமல் இருக்கின்றன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
பொதுவாகவே மனிதர்கள் உட்பட எந்த உயிரினத்தாலும் சுவரில் ஏற முடியாது. சில ஊர்வனவற்றால் கூட சுவற்றில் முழுவதும் ஏற முடியாது. ஆனால் பல்லிகள் சுவர், மரம், ஏன் நம் வீட்டின் கூரை பகுதி என அனைத்து இடங்களிலும் எளிதாக ஊறி செல்லும். இதை நாம் அனைவருமே எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏன்? எப்படி? என கூட பல முறை யோசித்திருப்போம். இது நமக்கு சில நேரத்தில் மாயாஜாலம் போலவும் தோன்றலாம். ஆனால் இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.
சுவர் ஏறும் திறனுக்குப் பெயர் பெற்றவையாக பல்லிகள் இருக்கின்றன. இதற்கு காரணமான ரகசியம் அவற்றின் கால்களில் உள்ள நுண்ணிய அமைப்புகளில் தான் இருக்கிறது. இந்த நுண்ணிய அமைப்பு தான் பல்லிகளுக்கு நம்மை ஆச்சர்யப்படுத்தும் அந்த பிடிமானத்தைக் கொடுக்கிறது. அவை சுவர்கள், கூரைகள், மற்றும் ஏன் கண்ணாடி பரப்பின் மீது கூட நகர்வதற்கு உதவுகின்றன. ஆனால் இத்தகைய திறன் அவை இறந்த பின் மறைந்து விடும். ஏன் என்று தெரியுமா உங்களுக்கு? பார்க்கலாம் வாங்க.

பல்லிகள் எப்படி சுவரில் ஒட்டி இருக்கிறது?
பல்லிகளின் காலின் அடிப்பகுதியில் சீட்டே எனப்படும் சிறிய முடி போன்ற அமைப்பு இருக்கும். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த சீட்டே பகுதி ஸ்பேட்டூலே எனப்படும் நூற்றிற்கும் மேற்பட்ட சிறிய முடிகளால் மூடப்பட்டிருக்கும் என பிரபல இணையதள ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மிக நுண்ணிய கட்டமைப்பு பல்லிகளின் கால்களில் பரப்பளவை அதிகரித்து அவை எளிதில் சுவர் மற்றும் கூரையில் எளிதாக ஒட்டிக்கொள்ள உதவுகின்றன.
பல்லிகளுக்கு வலுவான பிடியை இந்த தனித்துவமான வடிவமைப்புதான் கொடுக்கிறது. அதாவது ஸ்பேட்டூலேக்கள் மேற்பரப்புடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதால், அவை நழுவாமல் உறுதியாகப் பிடித்து கொள்கின்றன. அவை சுவரில் அல்லது கூரையில் என ஈர்ப்பு விசைக்கு எதிராக எளிதாக ஏற முடிகிறது.
வான் டெர் வால்ஸ் விசை
பல்லியின் கால்களில் இருக்கும் ஸ்பேட்டூலாக்கள் சுவரின் மேற்பரப்பில் படும் போது, அவை வான் டெர் வால்ஸ் விசை எனப்படும் ஒரு வகையான விசையை உருவாக்குகின்றன. இந்த விசை மூலக்கூறுகளுக்கு இடையேயான ஒரு பலவீனமான ஈர்ப்பை உண்டாக்குகிறது. இது மிகச் சிறிய அளவில் நிகழ்கிறது. நாம் அதைப் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு மிகச் சிறியது. இது ஈர்ப்பு விசையைப் போல சக்திவாய்ந்ததாக இல்லாவிட்டாலும், இந்த விசைகள் பல்லி செங்குத்து மேற்பரப்புகளில் ஒட்டிக்கொள்ள உதவுகின்றன.
பல்லிகள் உயிருடன் இருக்கும் போது மேற்பரப்புகளில் எளிதில் ஒட்டிக்கொள்ள முடியும் போது, அவை இறந்தால் ஏன் கீழே விழுகின்றன? எனும் சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். அதற்கான பதில் அவற்றின் உடல்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்பதில் தான் இருக்கிறது. உயிருடன் இருக்கும் போது, பல்லிகள் தங்கள் கால்களில் உள்ள தசைகளைக் கட்டுப்படுத்தும். அதன் விளைவாக வான் டெர் வால்ஸ் விசை உருவாகி சுவரில் ஓட்டும் தன்மையை பெறும் என முன்பே பார்த்தோம். ஆனால் அவை இறக்கும் போது, அவற்றின் தசை செயல்பாடுகள் நின்று விடும்.
இந்த தசை கட்டுப்பாட்டு இயக்கம் இல்லாமல், அவற்றின் கால்களில் உள்ள ஸ்பேட்டூலாக்கள் ஒட்டிப் பிடிக்கும் திறனை இழந்துவிடும். இதனால் பல்லி சுவரில் அதன் ஒட்டும் தன்மையை இழந்து கீழே விழுந்து விடுகிறது. பல்லிகள் சிறப்பாக சுவரில் ஏற உதவுவது, அவற்றின் கால்களில் உள்ள நுண்ணிய முடிகள் மட்டுமல்ல.
பல்லிகள் எந்த வகையான மேற்பரப்பில் இருந்தாலும் உறுதியாக பிடித்திருக்கும் படி உதவ கூடிய ஒரு தனித்துவமான வகையில் நடக்கும் முறையை கொண்டிருக்கும். அவற்றின் அசைவுகள் ஒவ்வொன்றும் கால்களை தொடர்ந்து தொடர்பில் வைத்திருக்கும் படி கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
இது சுவரில் ஒட்டிக் கொள்ளும் தன்மையை ஒருபோதும் இழக்காமல் பார்த்துக் கொள்கிறது. நாம் கற்பனை கூட செய்ய முடியாத வகையில் உயிர்வாழ்வியலில் பரிணாம வளர்ச்சி உயிரினங்களை எப்படி சிறப்பாக வடிவமைத்திருக்கிறது என்பதற்கு பல்லிகள் ஒரு சரியான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications

