Latest Updates
-
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
ராமபிரான் அவதரித்த நாளே 'ராமநவமி' ஆக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராமநவமி இன்று அதாவது 17 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் அனேக இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா கல்யாண மகா உற்சவ விழா போன்று அரங்கேறும். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில்தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் 10 நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர்.

இந்து மதத்தில் மூன்று கோடி கடவுள்கள் உள்ளனர். விஷ்ணு மற்றும் சிவனை வழிபடுபவர்கள் அதிகம். ஸ்ரீராமன் விஷ்ணுவின் அவதாரம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் ராமர் வழிபடப்படுகிறார். ராமர் பிறந்த நாளை நாம் அனைவரும் ராம நவமி என்று கொண்டாடுகிறோம்.
ராம நவமி 2024 முகூர்த்தம்: ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று செவ்வாய்கிழமை மதியம் 1:23 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல் 17ஆம் தேதி புதன்கிழமை மாலை 3:15 மணிக்கு முடிவடையும். உதய திதியின் படி, ராம நவமியின் புனித திருவிழா முக்கியமாக ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று கொண்டாடப்படும்.
ராம நவமி பண்டிகையின் முக்கியத்துவம் என்ன?
விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லப்படும் ராமரின் பிறந்தநாளாக ராம நவமி கொண்டாடப்படுகிறது. புராணங்களின் படி, ராமர் பூமியில் உள்ள அயோத்தியில் தசரதர் மற்றும் ராணி கௌசல்யா ஆகியோரின் மகனாக பிறந்தார். அவர் திரேதா யுகத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. ராமர் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்று நம்பப்படுகிறது. மேலும் அவரை வணங்குவது தீய சக்திகளை விரட்டி, தெய்வீக சக்தியை பூமிக்கு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
ராம நவமி எப்படி கொண்டாடப்படுகிறது?
ராம நவமி இந்துக்களுக்கு மிகவும் புனிதமானது மற்றும் பலர் இந்த நாளில் நாள் முழுவதும் விரதம் உள்ளனர். இது இன்று காலையிலிருந்து மறுநாள் காலை வரை தொடங்குகிறது. இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் ராமரைப் பாடுகிறார்கள். ராம நவமி ஊர்வலத்தின் போது ராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடந்தது. ராம நவமியையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
ராம நவமி விரதம்
ராம நவமியின் போது விரதம் இருப்பவர்கள் மிகவும் கண்டிப்பான விரதத்தை கடைபிடிப்பார்கள். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பார்கள். சில பக்தர்கள் தண்ணீர் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வார்கள்.. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதால் ராம நவமி அயோத்தியில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ராம நவமியின் போது, பக்தர்கள் அயோத்திக்கு வந்து சரயு நதியில் நீராடி, ராமர் கோவிலுக்கு வந்து பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.
ராம நவமி நல்வாழ்த்துக்கள்
சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷ நவமி திதி ஏப்ரல் 16 அன்று மதியம் 01:23 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேதி ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று மாலை 03:14 மணிக்கு முடிவடைகிறது. உதய திதியின்படி, ராம நவமி விழா ஏப்ரல் 17 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. ராம நவமி சுப முஹூர்தம் - காலை 11:03 முதல் மதியம் 1:38 வரை. இந்து சந்திர நாட்காட்டியின் படி, இந்த புனித நாள் ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தின் (மார்ச்-ஏப்ரல்) ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது, ஸ்ரீ ராமச்சந்திரரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதோடு, இந்த நாள் ராமர் மற்றும் சீதையின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது..



Click it and Unblock the Notifications











