Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
அனைத்து லிஃப்ட்குள்ளும் ஏன் கண்ணாடி இருக்கிறது? அதுக்கு பின்னால் உள்ள ஆச்சரியமான காரணம் என்ன தெரியுமா?
மாடிப்படியில் ஏறுவது ஆரோக்கியமானதாக இருந்தாலும் உயரமான கட்டிடங்களில் ஏறும்போது லிப்ட்தான் மிகவும் உதவியானதாக இருக்கிறது. அவசரத்திற்கு வேகமாக மாடியில் ஏற லிப்ட்கள் மிகவும் முக்கியம். எந்தவொரு கட்டிடம் அல்லது மாலின் லிப்ட்டுக்குள் நீங்கள் நுழைந்தாலும், அதற்குள் கண்ணாடிகள் பொறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். குறைந்தபட்சம் லிப்ட் உள்ள பளபளப்பாக நம் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதத்திலாவது அமைக்கப்பட்டிருக்கும்.

இதனால் லிப்ட்க்குள் சென்றவுடனேயே மக்கள் தங்களைப் பார்க்கிறார்கள், தங்கள் தலைமுடியை சரிசெய்துகொள்கிறார்கள், தங்கள் ஆடைகளை சரிசெய்துகொள்கிறார்கள். ஆனால் லிப்டில் உள்ள கண்ணாடி மக்கள் முகத்தை பார்ப்பதற்கு மட்டும்தான் உள்ளதா? நிச்சயமாக இல்லை.
பல்வேறு அறிக்கைகளின்படி, லிஃப்ட் கண்ணாடிகள் அலங்காரத்திற்காக அல்லது மக்கள் தங்கள் தோற்றத்தை சரிபார்க்க ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக மட்டும் அல்ல. அவை உண்மையில் அழகியலுக்கு அப்பாற்பட்ட பல முக்கிய நோக்கங்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த பதிவில் லிஃப்ட் கண்ணாடிகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
சைக்கலாஜிக்கல் ஆறுதல்
லிஃப்ட் போன்ற மூடிய, காற்றில்லாத இடங்களில் கிளாஸ்ட்ரோஃபோபியா அல்லது பதட்டம் போன்ற உணர்வுகளை பலர் அனுபவிக்கின்றனர். கண்ணாடிகள் இந்த பிரச்சினையை சரி செய்ய, லிஃப்ட் பெரிய இடம் போன்ற மாயையை உருவாக்கி, லிஃப்ட் பெரிதாகவும், குறைவாக மூடப்பட்டதாகவும் உணர வைக்கும். இது பதட்டத்தைக் குறைத்து, லிஃப்ட்டில் செல்வதை வசதியானதாக மாற்றும், குறிப்பாக இறுக்கமான இடங்களைப் பற்றி பதட்டமாக இருப்பவர்களுக்கு இது மிகவும் உறுதியாக இருக்கும்.
பாதுகாப்பு
கண்ணாடிகள் லிஃப்ட்டில் பயணிப்பவர்களை தங்கள் சுற்றுப்புறத்தை இன்னும் தெளிவாக பார்க்க அனுமதிக்கின்றன, இதில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதும் அடங்கும். இது உடனிருப்பவர்கள் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களைப் பற்றி தெளிவாகள் காட்டுவதால், மக்கள் பாதுகாப்பாக உணர முடியும். இது லிஃப்ட் மிகவும் வெளிப்படையானது என்ற தோற்றத்தையும் தருகிறது, இது தவறான செயல்பாடுகளைத் தடுக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுகிறது
சக்கர நாற்காலிகளில் அல்லது நடப்பதில் சிக்கல்கள் உள்ள நபர்களை எளிதாக கையாள கண்ணாடிகள் உதவுகின்றன. சக்கர நாற்காலியில் இருப்பவர் லிஃப்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால், கண்ணாடி அவர்கள் பின்னால் என்ன இருக்கிறது என்பதைத் திரும்பி பார்க்காமலே தெரிந்து கொள்ள உதவும்.
கவனச்சிதறலுக்கு உதவுகிறது
லிஃப்ட் பயணம் முடிவடையும் வரை காத்திருக்கும் போது மக்கள் பெரும்பாலும் பொறுமையின்றி உணர்கிறார்கள், மேலும் கண்ணாடியில் அவர்கள் முகத்தைப் பார்ப்பது அவர்களை திசை திருப்ப உதவும். அவர்களின் பிரதிபலிப்பைப் பார்த்து முகம் உடைகளை சரிசெய்வது காத்திருப்பைக் குறுகியதாகவும், சலிப்பாக இல்லாமலும், ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும்.
நடைமுறை பயன்பாடு
லிஃப்ட் கண்ணாடிகள் இந்த பயன்கள் மட்டுமின்றி, பயணிகள் தங்கள் தோற்றத்தை விரைவாக சரிபார்க்க அனுமதிக்கிறது. அவர்களின் தலைமுடியை சரிசெய்தல், ஆடைகளை சரிசெய்தல் அல்லது அவர்கள் அழகாக இருப்பதை உறுதிசெய்வது என எதுவாக இருந்தாலும், அலுவலகங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களின் வேகமான சூழல்களில் இந்த வசதி மக்களால் விரும்பப்படுகிறது. அவசரமாக விழாக்களுக்கு செல்லும் போது, முக்கியமான நேர்காணலுக்கு செல்லும் போது, சமூக நிகழ்வுகளுக்கு செல்வதற்கு முன் கடைசி நிமிட டச்-அப்களுக்கு இந்த கண்ணாடிகள் உதவுகின்றன.
லிஃப்ட்களில் கண்ணாடிகளை கட்டாயமாக்கும் ஜப்பானின் எலிவேட்டர் அசோசியேஷன் வழிகாட்டுதல் இந்த நன்மைகள் பற்றி விளக்குகிறது, குறிப்பாக பயனர்களின் உளவியல் ஆறுதல் மற்றும் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. லிஃப்ட் கண்ணாடிகள் மனநலத்தை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பை அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
இந்த கட்டுரையில் போட்டோ, முன்னுரை, தலைப்பு மற்றும் Tags மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
