Latest Updates
-
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசி பெண்களுக்கு ராணி மாதிரி வாழணும்னு ஆசை இருக்குமாம்... இவங்கள காதலிக்கிற ஆண்கள் ரொம்ப பாவம்...!
எல்லோரும் தங்களை குழந்தைப் போல அன்பாக மற்றும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும், சிலருக்கு வெறும் ஆடம்பர வாழ்க்கை மட்டும் போதாது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசி பெண்கள் குழந்தை என்பதையும் தாண்டி தங்களை அனைவரும் இளவரசி அல்லது ராணி போல நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
இவர்களின் அனைத்து ஆசைகளை நிறைவேற்றுவது என்பது மிகவும் கடினமானதாகும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத போது அவர்கள் மிகவும் எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் அனைவரும் தங்களை ராணி போல நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் வசதியையும் ஆடம்பரத்தையும் அதிகம் விரும்புவார்கள். அவர்கள் அனைத்து விஷயங்களிலும் உயர்தர மற்றும் தனித்துவமான ரசனையைக் கொண்டுள்ளனர். பட்டுத் துணிகள் முதல் நல்ல உணவுகள் வரை, ரிஷப ராசி பெண்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறந்ததாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
நீங்கள் ஒரு ரிஷப ராசி பெண்ணை காதலித்தால் உங்களின் இறுதி மூச்சு வரை அவர்களை ராணி போல நடத்துவததற்கு தயாராக இருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் பிரபலமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள் மற்றும் ராணியைப் போல நடத்தப்பட வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஒரு சிம்ம ராசி பெண்ணின் கவர்ச்சியான மற்றும் ஆடம்பரமான இயல்பு கவனத்தை சிரமமின்றி ஈர்க்கிறது. அவர்கள் பெரிய சைகைகள் மற்றும் ஆடம்பர பரிசுகளை விரும்புகிறார்கள்.
நீங்கள் ஒரு சிம்ம ராசியாக இருந்தால் அல்லது உங்கள் காதலி சிம்ம ராசிக்காரராக இருந்தால், அவர்கள் போற்றப்படுவதையும் நேசிப்பவர்களாகவும் உணருவது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அழகு மற்றும் சமநிலை மீது தீராத ஆசை கொண்டவர்கள், இது அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் தொடர்கிறது. ஒரு துலாம் ராசி பெண் சிந்தனை மற்றும் நல்ல ரசனையை பிரதிபலிக்கும் செயல்களை பாராட்டுகிறார்கள். அது ஒரு கச்சிதமாக திட்டமிடப்பட்ட மாலை நேரமாக இருந்தாலும் சரி அல்லது அழகாகக் கொடுக்கப்படும் பரிசாக இருந்தாலும் சரி, நல்லிணக்கத்தையும் அழகியலையும் மேம்படுத்தும் முயற்சியை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
மீனம்
மீன ராசி பெண்கள் தங்கள் விசித்திரமான மற்றும் கனவு இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ஒருவரைப் போல கவனித்துக் கொள்ளப்படுவதையும், நடத்தப்படுவதையும் அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். மீன ராசி பெண்கள் தங்கள் இதயத்தை தொடும் மற்றும் அவர்களின் உற்சாகத்தை உயர்த்தும் பரிசுகளையும், செயல்பாடுகளையும் விரும்புகிறார்கள்.
உங்களிடம் எப்போதும் அவர்களை இளவரசி போல பார்த்துக் கொள்ள முடியுமென்று நம்பினால் மட்டும் மீன ராசி பெண்களை காதலியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
