Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்களின் பிறந்த ராசி உங்களின் ஆளுமையையும், எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதில் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இன்றைய உலகில் அனைவருமே படிப்பு, வேலை, குடியேற்றம், பயணம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெளிநாடு செல்வதை விரும்புகிறார்கள்.
வெளிநாடு செல்வதற்கான காரணங்கள் தனிப்பட்ட அல்லது தொழில்ரீதியாக இருக்கலாம். ஆனால் உங்கள் கிரக அமைப்பு மற்றும் பிறப்பு கிரக நிலைகள் காரணமாக இது நீங்கள் விரும்பியபடி நடக்காமல் போகலாம். ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் சாதகமாக இருக்கும் போது வாழ்க்கையில் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

சில ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு எப்போதும் கிடைக்காது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நிச்சயம் வெளிநாடு செல்வார்கள் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தைரியமாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். கல்வி மற்றும் வேலை நோக்கங்களுக்காக அவர்கள் வாழ்க்கையில் சில நாடுகளுக்குச் செல்ல அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் வெளிநாட்டு வேலைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் துரிதமாக முடிவெடுக்கக் கூடியவர்கள். அவர்களைப் பொறுத்தவரை கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் மிக அதிகம். இளம் வயதிலேயே அவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. கிரக நிலைகள் கூடி வந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே செட்டிலாவதற்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் இணக்கமாக இருக்கக்கூடியவர்கள். அவர்கள் தங்கள் வேலையின் மூலம் வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். பதவி உயர்வு மூலமாகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ அவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அவர்கள் வெளிநாட்டில் செட்டிலாவதற்கான வாய்ப்புகள் இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே படைப்பாற்றல் மிக்கவர்கள். அவர்கள் ஒரு இடத்தின் மொழிகள், வரலாறு, ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கு எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையில் சில நாடுகளையாவது சுற்றிப்பார்க்க வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்களின் ஆசைகளின் படி அவர்கள் சில வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் வெளிநாட்டில் ஒருபோதும் செட்டிலாக மாட்டார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே சாகசத்தை விரும்புவார்கள். தங்கள் சாகசத்தின் ஒரு பகுதியாக பயணம் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் அவர்கள் சிறந்த கலாச்சாரம் மற்றும் சுதந்திரமான சூழ்நிலையுடன் ஒரு இடத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். எனவே பணத்தை சேமித்து அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செல்வதை அவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள்.



Click it and Unblock the Notifications

