இந்த 4 ராசிக்காரங்க தங்கள் காதலரை கண்ட்ரோலில் வைக்க என்ன வேணாலும் செய்வாங்களாம்... ஜாக்கிரதை...!

காதல் எப்பொழுதும் சுயநலமில்லாத உணர்வு என்பது பொதுவான நம்பிக்கை, ஆனால் உறவில் இருக்கும் அனைவருக்கும் இது உண்மையில்லை என்பது நன்றாகவே தெரியும். மற்றொருவரின் கையாளுதலை யாருமே விரும்ப மாட்டார்கள், குறிப்பாக காதல் உறவுகளில் துணையை கையாளுவது என்பது மிகவும் தவறான ஒரு விஷயமாகும்.

தங்கள் துணையை கையாளுவது என்பது உறவில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான வழியாக பார்க்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ஆபத்தான காதல் துணையாக கருதப்படுகிறார்கள். அவர்கள் உறவுகளில் தாங்கள் விரும்பியதை நிறைவேற்ற தங்கள் துணையை கையாளுவார்கள். தங்கள் கூட்டாளியின் பலவீனங்களை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் உறவில் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.

Which Zodiac Signs Use Their Partners Weaknesses to Manipulate Them in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் தங்கள் துணை மீது இரக்கம் இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் நடத்தையின் விளைவுகளைப் பற்றி அறியாமலோ அல்லது கவலைப்படாமலோ இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையின் குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று கருதுகிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் உறவில் தங்கள் கையில் அதிகாரம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள். அவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் ஆதிக்கத்தை கைப்பற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி தங்கள் துணையை உணர்ச்சிரீதியாக கையாளுவதற்கும் பெரும்பாலும் தங்கள் பேச்சாற்றல் என்னும் இரகசிய வலிமையைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் மீது தவறு இருந்தாலும் தங்கள் தொடர்ச்சியான தூண்டுதல்கள் மூலம் அவர்களின் துணையை தாங்கள்தான் தவறு செய்தோம் என்று ஒப்புக்கொள்ள வைப்பார்கள். தங்கள் துணைக்கு குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் தாங்கள் நினைத்ததை செய்வார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்காக தங்கள் மனதை கட்டுப்படுத்துவதில் திறமையானவர்கள் என்பதால், அவர்கள் உறவுகளில் கையாளக்கூடியவர்களாகவும், தங்கள் துணையின் பலவீனத்தை அளவில்லாமல் பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஒரு உறவில் இருக்கும்போது, அவர்கள் தங்கள் துணைக்கு அதிக அன்பையும் அக்கறையையும் வழங்குகிறார்கள். ஆனால் தங்களுக்கான நோக்கங்களை நிறைவேற்ற தேவைப்படும் போது, கடக ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளியின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடக ராசிக்காரர்களின் வஞ்சகமான தந்திரங்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் துணை எவ்வளவு முயற்சி செய்தாலும், தப்பிக்க முடியாது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளிலும் சூழ்நிலைகளிலும் எப்போது முன்னணியில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அவர்களின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்கு எதையும் செய்வார்கள், மேலும் தங்கள் துணையின் கருத்தை ஒருபோதும் பொருட்படுத்தமாட்டார்கள். அவர்கள் எப்போதும் இனிமையாக பேசுபவர்களாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். உறவுகளில் அவர்கள் எப்போதும் கோரிக்கைகள் நிறைந்தவர்களாக இருப்பார்கள், மேலும் அவர்களின் துணை அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், அவர்கள் உறவை முறித்துக் கொள்வதாக அச்சுறுத்தலாம். சில சிம்ம ராசிக்காரர்கள் உருவாக்கும் எதிர்மறையான சூழல்கள், அவர்கள் சந்திக்கும் நபர்களை நீண்ட காலம் மகிழ்ச்சியற்றவராக உணர வைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தந்திரசாலிகள். அவர்கள் பெரும்பாலும் அவர்கள் பெரும்பாலும் அதிக பொய் செல்பவர்களாக இருக்கிறார்கள், எனவே உறவில் பாதிக்கப்படக்கூடிய தருணங்களைத் தவிர்க்கிறார்கள். உறவில் எதையும் சமாளிக்க அவர்கள் பொய்யை பயன்படுத்துவார்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்க முடியாத அளவிற்கு கையாளுவார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளர்களை ஏமாற்றலாம், அவர்களை பைத்தியமாக உணரச் செய்யலாம் அல்லது தங்கள் கூட்டாளியின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களின் தன்னம்பிக்கையை அழிக்கலாம். அதன்மூலம் உறவில் அதிகாரத்தை கைப்பற்றலாம்.

Desktop Bottom Promotion