Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
இந்த 4 ராசி ஆண்கள் மிகவும் மோசமான கணவராக இருப்பார்களாம்...இவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
ஜோதிட சாஸ்திரம் பல நூற்றண்டுகளாக ஒருவரின் தனிப்பட்ட ஆளுமையை தெரிந்து கொள்வதற்கும், அவர்களின் எதிர்காலத்தை கணிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சாஸ்திரமாகும். தனிப்பட்ட ஆளுமை என்று வரும்போது அவர்கள் உறவுகளில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதும் இதிலடங்கும்.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் சிறந்த காதலராக இருக்கும் அளவிற்கு நல்ல கணவராக இருக்க மாட்டார்கள். இவர்களின் மனைவிகள் எப்போதும் சந்தேகத்துடனும், பயத்துடனுமே வாழ நேரிடும், இருப்பினும், ஒருவரின் தனிப்பட்ட சூழ்நிலை மற்றும் வளர்ப்பின் அடிப்படையில் இதில் மாறுதல்கள் இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மோசமான கணவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
இரட்டையர்களால் குறிப்பிடப்படும் மிதுன ராசிக்காரர்கள், அவர்களின் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்திலும் திருப்தி அடையாதவார்கள், திருமண உறவு உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் புதுமை மற்றும் உற்சாகத்தைத் தேடுகிறார்கள். அவர்களின் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் வசீகரம் அவர்களை கவர்ச்சிகரமான வாழ்க்கைத்துணையாக மாற்றுகிறது, ஆனால் அவர்களின் சீரற்ற தன்மை நிலையான மற்றும் உறுதியான உறவைப் பேணுவதில் பல சவால்களை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
மிதுன ராசி ஆண்கள் பலவிதமான ஆர்வங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் அனைத்து விஷயத்திலும் எளிதில் சலிப்படையலாம், இது நம்பகமான மற்றும் நேர்மையான கணவராக இருப்பதற்கான அவர்களின் திறனை பாதிக்கலாம். ஒரு நல்ல கணவராக இருப்பதற்கு, மிதுன ராசி ஆண்கள் பொறுமை, வெளிப்படையானத் தொடர்பு மற்றும் சவால்களை சமாளிக்க அர்ப்பணிப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் நேர்மையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகச மற்றும் சுதந்திரமான ஆளுமையைக் கொண்டவர்கள். இந்த ராசி ஆண்கள் சுதந்திரம் மற்றும் புதிய முயற்சிகளுக்கான ஆர்வத்திற்காக அறியப்பட்டவர்கள். இந்த பண்பு சுவாரஸ்யமானதாக இருக்கும் அதே வேளையில், அவர்கள் ஒரு நல்ல கணவராக இருப்பதை சிக்கலாக மாற்றலாம்.
புதிய அனுபவங்களுக்கான ஆசை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் தேவை ஆகியவை நீண்டகால உறவில் தேவைப்படும் பொறுப்புகள் மற்றும் அர்ப்பணிப்பை மிகவும் கடினமானதாக மாற்றலாம். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் மனைவிக்கு ஒரு நிலையான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க சுதந்திரத்திற்கான தேவையை சமநிலைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசி ஆண்கள் பெரும்பாலும் அறிவுசார் நோக்கங்கள், புதுமை மற்றும் சுதந்திரத்திற்கான ஆசை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கிறார்கள் மற்றும் தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக நேரத்தை செலவிடுகிறார்கள். இந்த குணம் அவர்களை மர்மமான கணவராக மாற்றும் அதே வேளையில், இது உணர்ச்சிப்பூர்வமான பற்றின்மை மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகளுடன் ஆழமான உறவை ஏற்படுத்துவதில் சிரமங்களுக்கு வழிவகுக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை விட தங்கள் அறிவார்ந்த முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம், இது அவர்களின் மனைவியுடன் வலுவான பிணைப்பை உருவாக்குவதில் சவால்களை உருவாக்கும். ஒரு நல்ல கணவனாக இருக்க, கும்ப ராசிக்காரர்கள் அதிக உணர்வுப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
மேஷம்
மேஷ ராசி ஆண்கள் அவர்களின் உறுதிப்பாடு, லட்சியம் மற்றும் அதிகாரத்திற்கான விருப்பத்திற்காக அறியப்பட்டவர்கள். இந்த குணாதிசயங்கள் போற்றத்தக்கதாக இருந்தாலும், திருமண உறவின் சூழலில் அவை சவால்களை ஏற்படுத்தலாம். மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் உறவை விட தனிப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் லட்சியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், இது அவர்களின் மனைவியின் தேவைகள் மற்றும் விருப்பங்களை புறக்கணிக்க வழிவகுக்கும்.
அவர்களின் மனக்கிளர்ச்சி தன்மை மற்றும் பொறுப்பை ஏற்கும் போக்கு ஆகியவை உறவுகளுக்குள் அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல்களை ஏற்படுத்தக்கூடும். ஒரு நல்ல கணவனாக இருக்க, மேஷ ராசிக்காரர்கள் சமரசம் செய்துகொள்வது மற்றும் இணக்கமான மற்றும் சமநிலையான உறவை வளர்ப்பதற்கு நல்ல புரிதலை கடைபிடிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
