Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
இந்த 5 ராசிக்காரங்க உங்களுக்கு நண்பர்களாக கிடைச்சா... நீங்க பெரிய அதிர்ஷ்டசாலியாம்...ஏன் தெரியுமா?
இவ்வுலகில் நண்பர்கள் இல்லாத நபர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவருக்கும் ஏரளமான நண்பர்கள் இருப்பார்கள், அதில் ஒருசில பேர் உயிர் நண்பர்களாக இருப்பார்கள். சில நண்பர்கள் நமக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கவும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவும் உதவுவார்கள்.
சிலர் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு, தூரத்தை கடைபிடிப்பார்கள் மற்றும் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கவும் தீய வழிக்கு செல்லவும் வழிவகுப்பார்கள். இப்படியும் சிலர் நண்பர்களாக இருப்பதால், நாம் யாருடன் பழகுகிறோம்? நண்பர்களாக இருக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

சிறந்த நண்பர்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள், உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள், உங்களை நல்வழிபடுத்துவார்கள். இவர்களை ஜோதிடத்தின் மூலம் நீங்கள் அடையாளம் காணலாம்.
எந்தெந்த ராசி அறிகுறிகள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாகவும் உணர்ச்சியுடனும் இருப்பதற்காக அறியப்படுகிறார்கள். இந்த குணங்கள் எப்போதும் சாகசத்தில் ஈடுபடும் சிறந்த நண்பர்களை உருவாக்குகிறது. இந்த ராசிக்காரர்கள் விசுவாசமாகவும் உங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பார்கள். மேலும் நீங்கள் என்ன செய்தாலும் இந்த ராசிக்கார நண்பர்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் தகவல்தொடர்பு திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் சிறந்த உரையாடல்காரர்களாகவும், நல்ல நண்பராகவும் இருக்கிறார்கள். எல்லாருடனும் எளிதில் பழகும் இந்த ராசிக்காரர்கள், நண்பர்களாக இருப்பது உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் இயற்கையான தலைவர்களாகவும் சிறந்த நண்பர்களாகவும் விளங்குவார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் நண்பருக்கு உதவ நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள். தாராள மனம் கொண்டவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருக்கும், இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் நண்பர்களை ஆதரிப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அவர்களின் வசீகரமான நடத்தைக்கும் இராஜதந்திர அறிவுக்கும் பெயர் பெற்றவர்கள். சமூக சூழ்நிலைகளை எளிதில் கையாளக்கூடிய சிறந்த நண்பர்களை இவர்கள் உருவாக்குகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் நியாயமானவர்கள் மற்றும் சமநிலையானவர்கள். மேலும் ஒரு வாதத்தின் இரு பக்கங்களையும் எப்போதும் கேட்டு முடிவெடுப்பார்கள். ஆதலால், இந்த ராசிக்காரர்கள் உங்களுக்கு சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.
தனுசு
உறுதியான தனுசு ராசிக்காரர்கள், பயணத்தின் மீதான காதலால் பெரிதும் அறியப்படுகிறார்கள். எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிக்கும் சிறந்த நண்பர்களை உருவாக்குகிறார்கள். மேலும், தனுசு ராசிக்காரர்கள் நேர்மையானவர்களாக இருப்பதால், எப்போதும் உங்களுக்கு உண்மையைச் சொல்வார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சிறந்த நண்பர்களை உருவாக்க முயல்வார்கள். விசுவாசமாகவும் ஆதரவாகவும் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள், எப்போதும் தங்கள் நண்பர்களுடன் இருப்பார்கள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதால் நல்ல நண்பர்களை உருவாக்க சிரமப்படலாம் அல்லது அவர்களுக்கு நல்ல நண்பர்களே இல்லாமல் போகலாம்.



Click it and Unblock the Notifications



