Latest Updates
-
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
இந்த 4 ராசிக்காரங்க மத்தவங்கள விட எப்பவும் ஒருபடி மேல இருப்பாங்களாம்...இவங்க புத்திசாலித்தனத்துக்கு அளவே இல்ல!
ஒருவரின் வெளித்தோற்றத்தை விட கவர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் அவர்களிடம் இருக்கும் புத்திசாலித்தனம்தான். புத்திசாலித்தனம் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு குணம் என்றாலும் சில ராசிக்காரர்களிடம் இது இயல்பை விட அதிகமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் புத்திசாலித்தனம் உட்பட வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்க முடியும் என்று பலர் நம்புகிறார்கள்.

IQ சோதனைகள் ஒருவரின் புத்திக்கூர்மையை அளவிடும் ஒரு அளவுகோலாக இருக்கிறது. சில இராசிகளுக்கும் உயர் புத்திசாலித்தனத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளது. இந்த பதிவில் மற்ற ராசிக்காரர்களை விட அதிக IQ கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் புதுமையான சிந்தனை மற்றும் அறிவார்ந்த ஆர்வத்திற்காக அறியப்படுகிறார்கள். இந்த ராசியின் கீழ் பிறந்த நபர்கள் பெரும்பாலும் அனைத்து விஷயங்களிலும் மற்றவர்களை விட ஒருபடி முன்னதாகவே இருப்பார்கள். அவர்களின் புத்திக்கூர்மை மற்றும் வழக்கத்திற்கு மாறான யோசனைகளுக்காக நண்பர்களிடையே பிரபலமானவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் பகுப்பாய்வு மனது மற்றும் முற்போக்கான கண்ணோட்டம் அவர்களின் உயர் IQ-க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கும்ப ராசிக்காரர்கள் இயற்கையாகவே பிரச்சனைகளை தீர்க்கும் குணம் கொண்டவர்கள் மற்றும் தொடர்ந்து அவர்களை சுற்றியுள்ள உலகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை தேடுவார்கள்.
விருச்சிகம்
தேளை அடையாளமாகக் கொண்ட விருச்சிக ராசியினர், தீவிரம் மற்றும் மனித இயல்பு பற்றிய ஆழமான புரிதலுடன் தொடர்புடையது. விருச்சிக ராசிக்காரர்கள் கூர்மையான அறிவுத்திறனையும், உண்மையை வெளிக்கொணரும் அயராத உறுதியையும் கொண்டுள்ளனர்.
அவர்களின் தந்திரமான சிந்தனை மற்றும் மற்றவர்கள் மனதிற்குள் ஊடுருவும் திறன் ஆகியவை அவர்களை வலிமைமிக்க புத்திசாலிகளாக மாற்றுகின்றன. உளவியல், ஆராய்ச்சி மற்றும் விசாரணை போன்ற தீவிர நுண்ணறிவு மற்றும் அசைக்க முடியாத கவனம் தேவைப்படும் துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்
இரட்டையர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மிதுன ராசிக்காரர்கள், அவர்களின் பல்துறை ஞானத்தால் அறியப்படுகிறார்கள். மிதுன ராசியினருக்கு அமைதியற்ற அறிவுத்திறன் உள்ளது, அவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யக்கூடியவர்கள். தகவல்களை விரைவாகச் செயலாக்குவதில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் மற்றும் வெவ்வேறு பணிகளை சிரமமின்றி அவர்கள் எளிதாக முடிக்கலாம்.
அவர்களின் உற்சாகமான ஆர்வம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் ஆகியவை அவர்களின் உயர் IQ க்கு காரணமாக இருக்கின்றன. எழுத்து, கற்பித்தல் அல்லது ஊடகம் போன்ற தங்கள் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறனை வெளிப்படுத்த அனுமதிக்கும் துறையில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
கன்னி
புத்திக்கூர்மை மற்றும் பகுப்பாய்வு திறன் ஆகியவற்றில் அதன் உன்னிப்பான கவனத்திற்கு புகழ்பெற்றவர்கள். கன்னி ராசிக்காரர்கள் சிக்கலைத் தீர்ப்பதற்கான முறையான அணுகுமுறை மற்றும் வலுவான தர்க்க உணர்வைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் விமர்சன சிந்தனை திறன் மற்றும் மற்றவர்கள் பார்க்க முடியாத கண்ணோட்டத்தில் ஒரு விஷயத்தை பார்க்கும் திறன் ஆகியவை அவர்களின் அதிபுத்திசாலித்தனத்திற்கு வழிவகுக்கிறது. கன்னி ராசிக்காரர்கள் அறிவியல், பொறியியல் அல்லது கணக்கியல் போன்ற புத்திக்கூர்மை தேவைப்படும் சூழல்களில் செழித்து வளர்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
