இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களிடம் ஈஸியாக ஏமாறும் முட்டாளாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

தற்போதைய அவசர உலகில் புத்திசாலித்தனம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணமாகும். புத்திசாலிகள் எந் இடத்திற்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள், அதேசமயம் புத்திக்கூர்மை குறைவாக இருப்பவர்கள் அனைவராலும் ஏமாற்றப்படுவார்கள், வாழ்க்கையில் அதிக சிரமத்திற்கு ஆளாவார்கள்.

Which Zodiac Signs Can be Fooled in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே புத்திக்கூர்மை வரமாக கிடைத்திருக்கும், ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே புத்திக்கூர்மை குறைவாக இருக்கும், அவர்கள் மற்றவர்களிடம் எளிதில் ஏமாறுவார்கள், மேலும் அவர்களை அனைவரும் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே முட்டாளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மீனம்

முட்டாள்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மீன ராசிக்காரர்கள். அவர்களின் இரக்க குணமும், மற்றவர்களிடம் உள்ள சிறந்த குணங்களைக் காண வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பமும் பெரும்பாலும் மற்றவர்களிடம் இருக்கும் மோசமான குணங்களை கவனிக்காமல், மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பத் தூண்டுகிறது.

மீனம் அவர்களின் முட்ட்டாள்தனமான கற்பனைகளுக்கு பெயர் பெற்றவர்கள், இது சில சமயங்களில் அவர்களின் எண்ணங்களை தவறானதாக மாற்றி, மற்றவர்களுக்கு ஏமாற்றுவதற்கான எளிதான இலக்குகளாக இவர்களை மாற்றுகிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், எப்போதும் இணக்கமான சூழலை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்களின் இராஜதந்திரத் திறன்கள் போற்றத்தக்கவை என்றாலும், எப்போதும் மோதலைத் தவிர்க்கும் துலாம் ராசியினரின் போக்கு அவர்களை மற்றவர்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

நேர்மை மற்றும் சமநிலைக்கான அவர்களின் விருப்பம், அவர்களின் உள்ளுணர்வு எச்சரித்தாலும், மற்றவர்களை நம்புவதற்கு அவர்களைத் தூண்டும். இது இறுதியில் அவர்களுக்கு ஏமாற்றத்தையேக் கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அதிக தன்னம்பிக்கை மற்றும் சாகச மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களின் உற்சாகமும் திறந்த மனப்பான்மையும் அவர்களை மற்றவர்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

மற்றவர்களால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் உண்மையான நோக்கங்களை அவர்களால் புரிந்து கொள்ள இயலாது. மற்றவர்களின் வார்த்தை ஜாலத்தில் இவர்கள் எளிதில் ஏமாந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிகம்

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் நினைப்பது போல ஆபத்தானவர்களோ அல்லது புத்திசாலிகளோ அல்ல, உண்மையில் அவர்கள் வியக்கத்தக்க வகையில் மந்தமானவர்கள். அவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து விடுவார்கள். அவர்கள் பொதுவாக மக்களை நம்ப மாட்டார்கள், ஆனால் அவர்கள் நம்புபவர்கள், அவர்களை எளிதில் முட்டாளாக்குகிறார்கள்.

தங்களின் முடிவுகளை நினைத்து அவர்கள் மிகவும் வருந்துவார்கள், எனவே அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் நம்பிக்கை பிரச்சினை உருவாகிறது. அவர்கள் மற்றவர்களால் அலட்சியப்படுத்தப்படலாம் மற்றும் பெரும்பாலும் அவர்கள் மற்றவர்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, June 8, 2024, 8:10 [IST]
Desktop Bottom Promotion