Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரங்க எல்லாரையும் கண்ண மூடிக்கிட்டு நம்பும் முட்டாளாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வாழ்க்கையில் யார் தலையிடுகிறார்கள் என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்போது, மற்றவர்கள் இயற்கையாகவே அனைவரையும் நம்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் மக்களின் உள்ளார்ந்த நற்குணத்தை நம்புகிறார்கள், இது பெரும்பாலும் மற்றவர்கள் மீது அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை வைக்க வழிவகுக்கிறது. மேலும் ஜோதிடம் மற்றவர்களின் இந்த குணநலன்களை அவர்களின் ராசிகளின் அடிப்படையில் புரிந்துகொள்ள உதவுகிறது.

எனவே சில சமயங்களில் தங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் மக்களைக் கண்மூடித்தனமாக நம்புவதற்குப் பெயர் பெற்ற சில முட்டாள்த்தனமான ராசிகள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
கனவுகள் மற்றும் மாயைகளின் கிரகமான நெப்டியூனால் ஆளப்படும் மீனம் ஆழ்ந்த பச்சாதாபம் மற்றும் இரக்கமுள்ள மனிதர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களிடம் உள்ள சிறந்ததைக் காணும் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர், இதனால் அவர்களுக்குள் இருக்கும் மோசமான குணங்களை கவனிக்கத் தவறுகிறார்கள்.
அவர்களின் உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மக்களை நம்புகிறார்கள். மீனம் மன்னிப்பு மற்றும் இரண்டாவது வாய்ப்புகளை நம்புகிறார்கள், இதனால் அவர்கள் மற்றவர்களால் எளிதில் பயன்படுத்திக் கொள்ளப்படவும், ஏமாற்றப்படவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
துலாம்
அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் கிரகமான சுக்கிரனால் நிர்வகிக்கப்படும், துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் அமைதி மற்றும் சமநிலையை மதிக்கிறார்கள். எல்லோரிடமும் உள்ள நல்லதைக் காண வேண்டும் என்ற இயல்பான ஆசை அவர்களுக்கு இருக்கிறது, இதனால் மற்றவர்களுடன் இணக்கமான தொடர்பைப் பேண முயற்சி செய்கிறார்கள்.
ஒருவர் அவர்களுக்கு எதிரான காரியங்களை செய்கிறார்கள் என்று தெரிந்தால் கூட அதற்கான வலுவான சான்றுகள் இல்லாத வரை அதனை நம்ப மாட்டார்கள், அவர்கள் மற்றவர்களை எளிதாக நம்புகிறார்கள் மற்றும் அனைவரிடம் இருந்தும் நல்ல முடிவை எதிர்பார்க்கிறார்கள்.
தனுசு
முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையின் கிரகமான வியாழனால் ஆளப்படும், தனுசு ராசிக்காரர்கள் சாகச மற்றும் திறந்த மனது கொண்டவர்கள். அவர்கள் இயல்பாகவே மனிதகுலத்தின் உள்ளார்ந்த நன்மையை நம்பும் ஆன்மாக்கள்.
தனுசு ராசிக்காரர்கள் புதிய அனுபவங்கள் மற்றும் பலதரப்பட்ட பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் மீது ஈர்க்கப்படுகிறார்கள், பெரும்பாலும் சாத்தியமான அபாயங்கள் அல்லது விளைவுகளை முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல் மற்றவர்கள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கிறார்கள்.
கடகம்
உணர்ச்சிகள் மற்றும் உள்ளுணர்வை வளர்க்கும் சந்திரனால் நிர்வகிக்கப்படும் கடக ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை ஆழ்ந்த பச்சாதாபத்துடன் பாதுகாக்கிறார்கள். அவர்கள் உணர்ச்சிப் பாதுகாப்பிற்கான வலுவான விருப்பத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் உள்ளுணர்வு அடிப்படையில் மக்களை நம்ப முனைகிறார்கள்.
கடக ராசிக்காரர்கள் மற்றவர்களை பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்குமான அவர்களின் தேடலில் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது கடந்தகால துரோகங்களை கவனிக்க மறந்து விடுவார்கள், அது பல சமயங்களில் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
