இந்த 5 ராசிக்காரங்க அனைவரையும் பாலியல் ரீதியாக மயக்கும் கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருப்பார்களாம்!

இயற்கையாகவே சிலர் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். பெரும்பலான மக்கள் கவர்ச்சியான ரீதியான ஈர்ப்பை வெளிப்படுத்துவதில்லை. ஆனால், கவர்ச்சியான தோற்றத்தை மற்றும் உணர்ச்சியை அவர்களும் விரும்புகிறார்கள். இயற்கையாக வசீகரமாக இருப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும்.

அவர்கள் தங்கள் தோற்றம், பேச்சு, கண்கள், செயல்கள், வார்த்தைகள் மற்றும் அதிர்வுகளால் யாரையும் கவர்ந்திழுக்க முடியும். மக்களுடன் பழகுவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில் அவர்கள் மிகவும் சமூக இயல்புடையவர்களாகவும் உள்ளனர். அவர்களை சுற்றி மக்கள் இருப்பதை எப்போதும் விரும்புகிறார்கள். அவர்களின் கவர்ச்சியான அதிர்வை மேலும், வெளிப்படுத்த முனைகிறார்கள்.

Which Zodiac Signs Are Seductive In Tamil?

ஜோதிடம் மக்கள் தங்கள் ஆளுமையின் நுணுக்கங்களை இராசி அறிகுறிகளின் உதவியுடன் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. எனவே, மிகவும் கவர்ச்சியான அதிர்வைக் கொண்டிருக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிகரமான ஆற்றலைக் கொண்டுள்ளதால், வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை மனதார பாராட்டுவார்கள். இவர்கள் மிகவும் கவர்ச்சியான காந்த ஆற்றலைக் கொண்டுள்ளனர்.

தங்கள் தோற்றத்தில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் இந்த ராசிக்காரர்கள், மற்றவர்களுக்கு மிகவும் கவர்ச்சியானவர்களாக தெரிகிறார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் இயற்கையான செக்ஸ் ஈர்ப்பைக் கொண்டுள்ளனர். இதை கட்டுப்படுத்துவது கடினம்.

சிம்மம்
நம்பிக்கை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் பெற்றவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடும் போக்கை கொண்டுள்ளதால், அது சிலருக்கு மிகவும் கவர்ச்சியாக தோன்றலாம். சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் மீதும், தங்கள் திறமைகள் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

இதை மற்றவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் மற்றவர்களை அவர்களிடம் ஈர்க்கும் இயல்பான பாலியல் தூண்டலைக் கொண்டுள்ளனர். மற்றவர்களுக்கு இந்த ராசிக்காரர்கள் மேல் ஓர் பயங்கரமான ஈர்ப்பு இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வசீகரமான தோற்றத்திற்காக பெயர் பெற்றவர்கள். அவர்கள் மற்றவர்களை வசதியாகவும் எளிதாகவும் உணர வைக்கும் இயல்பான திறனைக் கொண்டுள்ளனர். இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

மிகவும் ரொமான்டிக்காக இருக்கும் துலாம் ராசிக்காரர்கள், அதிக உணர்ச்சிவசப்படுவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இயற்கையான செக்ஸ் ஈர்ப்பைக் கொண்டுள்ளதால், மற்றவர்களை எளிதாக ஈர்க்கிறார்கள்.

விருச்சிகம்
பெரும்பாலும் அனைத்து ராசிக்காரர்களும் மிகவும் கவர்ச்சியானவர்களாக விருச்சிக ராசிக்காரர்கள் கருதுகிறார். அவர்களின் தீவிரமான மற்றும் கவர்ச்சியான தோற்றம் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

தங்களின் காந்த ஆளுமை கொண்ட தோற்றம் மற்றும் பண்புகள், ஆர்வம் மற்றும் ஆழமான மட்டத்தில் மற்றவர்களுடன் இணைக்கும் திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் இயற்கையாகவே வசீகரமானவர்களாக இருக்கிறார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் கனவு மற்றும் காதல் இயல்பு கொண்டவர்கள். அவர்கள் மென்மையானவர்களாகவும் இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இது மக்களை எளிதில் ஈர்க்கிறது. இந்த ராசிக்காரர்கள் உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சி ரீதியாக புத்திசாலிகளாக இருப்பதால், இது மற்றவர்களுடன் ஆழமான தொடர்பில் இணைய உதவுகிறது. அவர்கள் பெரும்பாலும் முயற்சி செய்யாமலே சிற்றின்ப மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆளுமையாக வருவது கடினம். ஏனெனில், அவர்கள் தங்கள் தோற்றத்தை வசீகரித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பதில்லை மற்றும் அதில் கவனம் செலுத்துவதும் இல்லை. இதர ராசிக்காரர்கள் காமம் மற்றும் ஆசையை விட ஒரு நபரின் உள் அழகை ஆதவாது நல்ல குணத்தை விரும்புகிறார்கள்.

Story first published: Monday, April 10, 2023, 16:50 [IST]
Desktop Bottom Promotion