இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பரை முதுகில் குத்த அதிக வாய்ப்புள்ளதாம்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...

நட்பு என்பது நமக்கு கிடைக்கும் மிகவும் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள உறவாகும். ஆனால் அது எவ்வளவு உண்மையான உறவாக இருக்கிறது என்பது நமக்கு கிடைக்கும் நண்பர்களைப் பொறுத்துதான் இருக்கிறது. அனைத்து நண்பர்களும் உண்மையில் விசுவாசமானவர்களாகவோ அல்லது அக்கறையுள்ளவர்களாகவோ இருப்பதில்லை.

சில சமயங்களில் நாம் நெருக்கமான நண்பர்கள் என்று நினைப்பவர்கள் கூட நமக்கு துரோகம் செய்யலாம். மற்றவர்கள் செய்யும் துரோகங்களை விட நெருங்கிய நண்பர்கள் செய்யும் துரோகம் மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

Which Zodiac Signs Are Most Likely To Betray Their Friends

துரோகம் செய்வது அனைவருக்கும் பொதுவான குணமில்லை என்றாலும் ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களுக்கு துரோகம் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலும் இரட்டை ஆளுமைக் கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் சிறந்த நண்பர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லையென்றாலும், அவர்களின் இருமை எப்போதாவது ஒரு துரோகமான பாதையில் அவர்களை வழிநடத்தும்.

மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் இரண்டு உலகங்களுக்கு இடையில் அடிக்கடி சிக்கிக் கொள்வதாக உணர்வார்கள், அவர்களின் விசுவாசம் உண்மையில் எங்கே இருக்கிறது என்பதை தீர்மானிக்க போராடுவார்கள். அவர்களுக்குள் நடக்கும் இந்த மோதல் தடுக்கப்படாவிட்டால், அவர்கள் தங்கள் நண்பர்களின் நம்பிக்கையைத் துரோகம் செய்ய வழிவகுக்கும்.

அவர்களின் துரோகங்கள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இல்லாவிட்டாலும் நிச்சயம் அவர்கள் நண்பர்களின் மனதையும், உறவையும் நிச்சயம் உடைப்பதாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கவர்ச்சியான நபர்கள், அவர்கள் பெரும்பாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் மற்றும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் கவனத்திற்கான இந்த ஆசை அவர்களை தங்கள் நண்பர்களுக்கு துரோகம் செய்யவும், மற்றவர்களின் நம்பிக்கையை காட்டிக் கொடுக்கவும் வழிவகுக்கும்.

அவர்கள் ஒருவருடனான உறவில் உண்மையான விசுவாசத்தை வளர்த்துக் கொண்டால் அவர்கள் இறுதிவரை அதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் இதனை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் சாகச மனப்பான்மை மற்றும் புதிய அனுபவத்தின் மீதான விருப்பத்திற்காக அறியப்பட்டவர்கள். இந்தப் பண்பு மறுக்க முடியாத உற்சாகமளிக்கும் அதே வேளையில், நெருங்கிய நட்பைப் வளர்க்கும்போது அது அவர்களை கணிக்க முடியாதவர்களாக மாற்றுகிறது.

தனுசு ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தை அதிகளவு மதிக்கிறார்கள், இது கவனக்குறைவாக தங்கள் நண்பர்களின் உணர்வுகளை விட தங்கள் சொந்த ஆசைகளுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகுக்கும். புதிய அனுபவங்களுக்கான அவர்களின் ஏக்கம், அவர்களை அன்பானவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் சூழலுக்கு அவர்களைத் தள்ளக்கூடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை கொண்டவர்கள், அவர்களின் முற்போக்கான சிந்தனை மற்றும் வாழ்க்கை மீதான தனித்துவமான அணுகுமுறை அவர்களை மிகவும் சுவாரஸ்யமானவர்களாக மாற்றுகிறது. இருப்பினும், அவர்களின் இலட்சியவாத உலகக் கண்ணோட்டம் சில நேரங்களில் வலுவான நட்பைப் பேணுவதற்கான நடைமுறைகளை சிதைக்கலாம்.

கும்ப ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களின் உணர்ச்சித் தேவைகளை கவனக்குறைவாகப் புறக்கணித்து, தொலைநோக்குப் பார்வையில் தொலைந்து போகும் போக்கைக் கொண்டுள்ளனர். அவர்களின் இதயங்கள் சரியான இடத்தில் இருக்கும்போது, ​​வழக்கமான விதிமுறைகள் மீதான அவர்களின் வெறுப்பு அவர்களை நட்பைக் காட்டிக் கொடுக்க வழிவகுக்கும். கும்ப ராசி நண்பரின் முன்னுரிமைகள் எப்போதும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, March 5, 2024, 10:51 [IST]
Desktop Bottom Promotion