Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இந்த 4 ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்றது அல்வா சாப்பிடற மாதிரியாம்... இவங்கள எப்பவும் நம்பிராதீங்க!
நம் வாழ்க்கையில் அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் நம்பிக்கைத் துரோகத்தை சந்தித்து இருப்போம். சிலர் ஏன் உங்கள் நம்பிக்கையைத் துரோகம் செய்கிறார்கள் என்று நீங்கள் அடிக்கடி யோசிக்கிறீர்களா? அதற்கான பதிலை ஜோதிட சாஸ்திரம் உங்களுக்கு வழங்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் எளிதில் மற்றவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் பழகுவது என்பது எப்போதும் உடனிருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எளிதில் மற்றவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களாக என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரம் மற்றும் பேரார்வத்திற்காக அறியப்பட்டவர்கள், சில நேரங்களில் அவர்கள் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம். அவர்களின் இரகசிய இயல்பு மற்றும் ஆதிக்கத்திற்கான விருப்பம் அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அல்லது அவர்களின் அதிகாரம் கேள்விக்கு உட்படுத்தப்படும் போது மற்றவர்களை காட்டிக்கொடுக்க வழிவகுக்கும்.
இருப்பினும், அனைத்து விருச்சிக ராசிக்காரர்களும் முதுகில் குத்துபவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர்கள் ஒருவரை முழுமையாக நம்பும் போதும், ஆழமான உறவை வளர்த்துக் கொள்ளும் போதும் அவர்களின் விசுவாசம் அசைக்க முடியாததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் இரட்டை இயல்புக்காக புகழ் பெற்றவர்கள், அவர்களின் சின்னமே இரட்டையர்களாகத்தான் இருக்கிறது. அவர்கள் வசீகரமாகவும் நேசமானவர்களாகவும் இருக்க முடியும் என்றாலும், அவர்களின் சூழலுக்கு ஏற்ப மாறும் தன்மை சில சமயங்களில் போலித்தனத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு விசுவாசமாக இருப்பதை விட தங்கள் சுயநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் சூழ்நிலைகளில் தேங்கி நிற்பார்கள், இது துரோகத்தின் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும். இவர்கள் தங்களின் துரோகங்களுக்காக ஒருபோதும் குற்ற உணர்ச்சி கொள்ள மாட்டார்கள்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் அவர்களின் ஆக்ரோஷமான மற்றும் மனக்கிளர்ச்சி இயல்புக்கு புகழ்பெற்றவர்கள், சில நேரங்களில் தங்கள் செயல்களின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் செயல்படலாம். சாகசத்திற்கான அவர்களின் ஆசை மற்றும் புதிய அனுபவங்கள் அவர்களை துரோகங்கள் செய்வதற்குத் தூண்டும், குறிப்பாக அவர்கள்வருப்புர்த்தப்படுவதாவோ அல்லது கட்டுப்படுத்தப்பட்டதாக உணரும்போது அவர்கள் துரோகத்தை தங்கள் ஆயுதமாக பயன்படுத்தலாம்.
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் நேர்மை மற்றும் தைரியத்திற்காக அறியப்பட்டவர்கள், எனவே துரோகம் அனைத்து மேஷ ராசிக்காரர்களுக்கும் பொதுவான பண்பாக இருக்காது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அனுதாபம் மற்றும் இரக்கமுள்ள ஆன்மாக்கள், ஆனால் அவர்களின் உணர்திறன் இயல்பு சில நேரங்களில் அவர்களை துரோகம் செய்வதற்குத் தூண்டலாம். அவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படும் போது அல்லது கடினமான முடிவுகளை எதிர்கொள்ளும் போது, மீன ராசிக்காரர்கள் தங்களையோ அல்லது தங்கள் அன்புக்குரியவர்களையோ பாதுகாக்க மற்றவர்களுக்கு துரோகம் செய்யலாம்.
அவர்களின் துரோகம் மற்றவர்களை பாதுகாப்பதற்காக இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் அவர்களை தீவிர குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












