Latest Updates
-
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க அவங்க காதலன்/காதலி மேல எப்பவும் சந்தேகப்பட்டுக்கிட்டே இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?
உங்கள் துணை உங்களை ஏமாற்றிவிடக்கூடும் என்ற எண்ணம் உங்களுக்குள் எப்போதாவது ஏற்பட்டுள்ளதா? நாம் அனைவரும் நம் உறவுகளில் சந்தேகத்திற்குரிய தருணங்களைக் கடந்து செல்கிறோம், ஆனால் உங்கள் துணை மீதான உங்களின் தொடர்ச்சியான சந்தேகத்திற்கு உங்களின் பிறந்த ராசி காரணமாக இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்துள்ளீர்களா?
உண்மைதான், ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் துணை மீது சந்தேகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த பதிவில், எப்போதும் தங்கள் துணை தங்களை ஏமாற்றுவதாக சந்தேகிக்கும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்க இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவுகளில் அன்பு மற்றும் விசுவாசத்திற்கான வலுவான விருப்பத்தைக் கொண்டவர்கள். இருப்பினும், இந்த ஆர்வம் சில சமயங்களில் அவர்களை சந்தேகத்திற்கு இடமளிக்கும், குறிப்பாக அவர்கள் தங்கள் துணை தங்களைப் போல் அர்ப்பணிப்புடன் இல்லை என்று உணர்ந்தால். மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை உறுதியான ஆதாரம் இல்லாவிட்டாலும், உங்கள் தீவிர உணர்ச்சிகள் உங்களை சந்தேகத்திற்கு ஆளாக்கக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஸ்திரத்தன்மை மற்றும் காதலில் பாதுகாப்பிற்கான ஆழ்ந்த விருப்பத்திற்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் துணை மீது மிகவும் பொஸசிவ் எண்ணத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் வழக்கமான நடத்தையில் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தால் அவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக மாறலாம்.
நீங்கள் ஒரு ரிஷப ராசிக்காரர் என்றால், உங்கள் அசைக்க முடியாத விசுவாசம், துரோகம் நடக்காவிட்டாலும், ஏமாற்றுவதாக சந்தேகிக்க வழிவகுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சிகளில் தீவிரமானவர்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவுகளில் ஆழ்ந்த உணர்ச்சித் தொடர்புகளை நாடுகிறார்கள். இந்த ஆழமான உணர்வு சில சமயங்களில் அவர்களின் துணையின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வழிவகுக்கும், குறிப்பாக அவர்களின் துணை அவர்களுடைய உணர்ச்சிகளைப் பற்றி வெளிப்படையாக இல்லை என்றால் இது அதிகரிக்கும்.
நீங்கள் ஒரு விருச்சிக ராசிக்காரர் என்றால், தீவிரமான காதலை நோக்கிய உங்களின் இயல்பான சாய்வு உங்களை சந்தேகத்திற்கு ஆளாக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரம் மற்றும் சாகசத்தை விரும்புவதற்கு பெயர் பெற்றவர்கள். அவர்களது துணை அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றாலோ அல்லது உறவில் சுதந்திரம் இல்லாததை உணர்ந்தாலோ அவர்கள் சந்தேகிக்கக்கூடும். நீங்கள் தனுசு ராசிக்காரர் என்றால், சாகசத்திற்கான உங்கள் தேடலானது சில சமயங்களில் ஆதாரமற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் உள்ளுணர்வு மற்றும் பச்சாதாபம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் துணையின் நடத்தையில் நுட்பமான மாற்றங்களைக் கூட கவனிக்கலாம் மற்றும் அவர்கள் உணர்ச்சிரீதியான தூரத்தை உணர்ந்தால் சந்தேகத்திற்குரியவர்களாக மாறலாம். நீங்கள் மீனம் ராசியாக இருந்தால், உங்கள் ஆழ்ந்த உணர்திறன் சில சமயங்களில் துரோகத்தை சந்தேகிக்க வைக்கலாம், அது அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட அது உங்களைத் தூண்டலாம்.



Click it and Unblock the Notifications

