Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம்
உங்களுக்கு சந்தோஷமான காதல் வாழ்க்கை வேணுமா? அப்ப இந்த 5 ராசிக்காரங்கள தெரியாமகூட காதலிச்சுராதீங்க...!
காதல் உறவைப் பொறுத்தவரை இருவருக்குள்ளும் இணக்கத்தன்மை இல்லையென்றால் அந்த உறவு நரகத்தை விட மோசமாக இருக்கும். காதலர்களிடையே இணக்கமின்மை இருப்பது முடிவில்லாத விரக்தி, வலி மற்றும் இறுதியில் மனம் உடைந்து போகவும் வழிவகுக்கும்.
ஒரு உறவில் அமைதியை பாதுகாப்பதற்கும், சண்டைகளிலிருந்து தப்பிப்பதற்கும் தனிப்பட்ட குணங்கள் காரணமாக இருந்தாலும், அவர்களின் பிறந்த ராசியும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

உங்கள் உறவுகளில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் சில ராசிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் உறவில் எப்போதும் நல்லிணக்கத்தை பராமரிக்க விரும்ப மாட்டார்கள், மேலும் சிக்கல்களை உருவாக்குவார்கள். நீங்கள் அமைதியான காதல் உறவை விரும்பினால் இவர்களைத் தவிர்க்க வேண்டும்.
மேஷம்
கலகக்கார மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் விதிகளை மீறும் பண்புக்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் இயற்கையாகவே மிகவும் சுறுசுறுப்பானவர்கள் மட்டுமல்ல, எல்லாவற்றையும் ஒரு போட்டியாக நினைக்கிறார்கள், காதலிலும் போட்டிச்சூழலை உருவாக்குகிறார்கள்.
அவர்களின்துணை எதைச் செய்தாலும், அவர்கள் அதில் குறை கண்டுபிடிப்பார்கள், அதுவே அவர்களின் துணையின் மனஅமைதியைக் கெடுக்கும். அவர்களுடனான காதல் உறவில் நீங்கள் இருந்தால் நீங்கள் எப்போதும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்
காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், ரிஷப ராசிக்காரர்களுடன் பழகுவது எளிது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எதிர்பார்ப்புகள் முற்றிலும் தவறானதாகும். அவர்களின் விசித்திரமான ரொமான்டிக் எண்ணங்களும், பிடிவாதமும் அவர்களை மோசமான காதலர்களில் ஒருவராக மாற்றுகிறது.
அவர்கள் மிகவும் பொறாமை கொண்டவர்களாகவும், பொஸசிவ் எண்ணம் கொண்டவராக இருப்பதாலும், இவர்களை காதலிப்பவர்கள் எப்போது ஒரு கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அது மட்டுமின்றி, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போதும் தங்கள் துணையை செயல்பட மூளைச்சலவை செய்வார்கள். அதுமட்டுமின்றி, அவர்களே தவறு செய்திருந்தாலும் நீங்கள் அவர்களின் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையை கேட்க முடியாது.
விருச்சிகம்
இந்த நீர் அடையாளம் மிகவும் ரகசியமானது. விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தனிப்பட்ட மற்றும் உள்முக சிந்தனைக்கு நன்கு அறியப்பட்டவர்கள். அவர்களை புரிந்துகொள்வதற்கும் அவர்களின் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அவர்கள் எப்போதும் உங்கள் நகர்வுகளைக் கண்காணித்து, ஒரு ஆசிரியரைப் போல உங்களைக் கேள்வி கேட்கிறார்கள் மற்றும் சந்தேகத்திற்குரியவர்களாக இருப்பார்கள். மேலும், அவர்களின் சமூக வட்டம் மிகவும் சிறியது மற்றும் அவர்கள் தங்கள் காதலரை சார்ந்தே எப்போதும் இருக்கலாம், இது சில சமயங்களில் சண்டைகளை அதிகரிக்கும் மற்றும் சிறிய பிரச்சினைகளைக் கூட பெரிதாக்குவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அவர்களின் அன்பான மற்றும் அக்கறையான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் அவர்களின் இனிமையான மனப்பான்மையுடன் சில இன்னல்களும் இலவச இணைப்பாக வரும். ஒரு கடக ராசிக்காரர்களுடன் இருப்பது கொஞ்சம் சவாலாகவே உணர வைக்கும், ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் பாராட்டுக்களை விரும்புகிறார்கள்.
நீங்கள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், அவர்கள் உங்கள் வாழ்க்கையை நரகமாக்கலாம். கடக ராசிக்காரர்கள் தங்கள் சொந்த உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், தங்கள் துணையின் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
தனுசு
தனுசு ராசியினரின் சாகச மனப்பான்மை ஆரம்பத்தில் உற்சாகமூட்டுவதாக இருக்கலாம், ஆனால் அமைதியான வாழ்க்கைக்கான அவர்களின் துணையின் முயற்சியுடன் அது மோதலாம். ஆய்வு மற்றும் சுதந்திரத்திற்கான அவர்களின் அன்பு, நீங்கள் விரும்பும் நிலையான, அமைதியான வழக்கத்தை நிறுவுவதற்கு சவாலாக இருக்கலாம். அவர்களின் துணையின் அமைதிக்கான தேடல் அவர்களுடைய சாகச தேடலில் தொலைந்து போகலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
