Latest Updates
-
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
இந்த 5 ராசிக்காரங்க தோக்கவே மாட்டாங்களாம்...ஜெயிக்கிறதுக்காக இவங்க என்ன வேணாலும் செய்வாங்களாம்!
ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு குணநலன்கள் மற்றும் ஆளுமை பண்புகள் இருக்கும். அதன்படி, அவர்கள் நடந்துகொள்வதால், வாழ்க்கையில் மகிழ்ச்சி அல்லது துன்பத்தையும், வெற்றி அல்லது தோல்வியையும் சந்திப்பார்கள். பொதுவாக மக்களிடையே போட்டி, வாக்குவாதம் என்று வரும்போது, சிலர் அமைதியாக இருப்பார்கள், சிலர் வெறித்தனமாக கத்துவார்கள்.
சிலர் எந்த போட்டியும் இல்லையென்றாலும் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்வார்கள். போட்டி மற்றும் தோல்வியை மக்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் அவர்களின் வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு ராசிக்கும் உள்ள அதன் சொந்த குணாதிசயங்களை ஜோதிடத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
போட்டித்தன்மை மற்றும் தோல்வியை வெறுக்கும் ராசிக்காரர்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
அதிக போட்டி குணம் கொண்டவர்களாக மேஷம் ராசிக்காரர்கள் அறியப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் தோல்வி என்ற சொல்லுக்கே இடமில்லை, வெற்றியை மட்டுமே விரும்பும் தலைவர்களாக இருப்பார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெறுவதற்கு அல்லது வாழ்க்கையில் மேலே வருவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
இவர்கள் தோல்வி அடையும்போது மிகவும் விரக்தியாகவும் கோபமாகவும் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு விஷயத்தில் தோல்வி அடைவதை தங்கள் உயிர் பிரிவது போன்று கருதுகிறார்கள்.
சிம்மம்
தோல்வியை விரும்பாத மற்றொரு ராசி அடையாளம் சிம்மம். இந்த இராசிக்காரர்கள் பெருமை, நம்பிக்கை மற்றும் கட்டுப்பாட்டில் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்களை எப்போதும் வெற்றியாளர்களாகப் பார்க்கிறார்கள். இதனால், தோல்வி அடைவதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சூழ்நிலைகள் சரியாக இல்லாதபோது, மிகவும் போட்டித்தன்மையுடன் இருப்பார்கள். தோல்வியை நோக்கி செல்லும்போது, அவர்களின் ஈகோ மற்றும் சுயமரியாதை அவர்களை தோல்வியை நோக்கி செல்ல விடாது. எனவே அவர்கள் தோல்வி அடைவதைத் தவிர்க்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் போட்டியை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால், இவர்கள் வெற்றி பெறுவதற்காக எப்படி வேண்டுமானாலும் செயல்பட பயப்பட மாட்டார்கள்.
தோல்வி என்பது அவர்களின் வாழ்க்கையிலே இல்லை என்று நம்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தோல்வி அடையும்போது மிகவும் கோபமாகவும் பழிவாங்கும் குணமுடையவர்களாக மாறலாம். ஏனெனில் அவர்கள் அதை தனிப்பட்ட பாதிப்பாக பார்க்கிறார்கள்.
மகரம்
லட்சியம் மற்றும் கடின உழைப்பாளியாக இருக்கும் மகர ராசிக்காரர்கள், தங்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்கான ஒரு வழியாக போட்டியைப் பார்க்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க தயங்க மாட்டார்கள். தோல்வி அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த ராசிக்காரர்கள் தோல்வியடையும் போது மிகவும் விரக்தியடைந்து மனச்சோர்வடையக்கூடும். ஏனெனில் அவர்கள் வெற்றியை மட்டுமே எப்போதும் விரும்புவார்கள், தோல்வியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றியை மட்டுமே பெற விரும்புகிறார்கள். சாகச மற்றும் போட்டித்தன்மை குணம் கொண்டவர்களான இவர்கள், மேலே வருவதற்கு எந்தவிதமான ஆபத்துக்களை எடுக்கவும் பயப்பட மாட்டார்கள். தோல்வி என்பது அவர்களின் நம்பிக்கையை முற்றிலும் அழித்துவிடும். எனவே தோல்வியைத் தவிர்க்க அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்வார்கள்.
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் பயணம், விவாதம், போராட்டம் போன்ற பல விஷயங்களை பார்க்கிறார்கள். தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் குணம் இவர்களுக்கு உள்ளது. வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என இரண்டும் இருக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications


