Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த 4 ராசி பெண்கள் உங்களுக்கு மனைவியா வந்தா? உங்களுக்கு தெரியாம நிறைய ரகசியத்தை வைச்சிருப்பாங்களாம்!
மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்துகொள்ள நினைப்பது அல்லது கேட்பது என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் பிடித்தமான செயல். மற்றவர்களின் டைரி மற்றும் லவ் லெட்டரை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து ரகசியமாக படிக்கும் பழக்கத்தை பலர் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்.
ரசியங்களை தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம், ரகசியங்களை யாருக்கும் தெரியாமல் மறைப்பதிலும் இருக்கிறது. உங்களுக்கு மிகவும் பிடித்தவர் அல்லது உங்கள் வாழ்க்கை துணை உங்களிடமிருந்து ஏதேனும் ரகசியங்களை மறைந்து வைத்திருக்கிறார்களா என்று எப்போதாவது யோசித்து இருக்கிறார்களா?

உங்கள் காதல் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட அத்தியாயம் இருப்பதாக உணர்ந்தால், அதை தெரிந்துகொள்ள ஜோதிடம் உங்களுக்கு உதவும். உறவுகளில் ரகசியங்களை காப்பதில் வல்லுனர்களாக இருக்கும் பெண்களில் நான்கு ராசி பெண்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். அவை என்னென்ன ராசி அறிகுறிகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் எப்போதும் ரகசியங்களை தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கிறார்கள். இந்த ராசிக்கார பெண்கள் காதல் வாழ்க்கையில் துப்பறியும் நபர்களைப் போன்றவர்கள், அந்த மர்மமான கண்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று இவர்களால் யூகிக்க முடியும்.
விஷயங்களை அமைதியாக வைத்திருப்பதற்கும், உறவுகளை ஆச்சரியங்கள் நிறைந்த சிலிர்ப்பான சாகசங்களாக மாற்றுவதற்கும் இந்த ராசி பெண்களுக்கு ஒரு திறமை இருக்கிறது.
மீனம்
நெப்டியூனால் ஆளப்படும் மீன ராசி பெண்கள், தங்கள் எண்ணங்களை மறைத்து வைப்பதில் வல்லவர்கள். அவர்களின் இரக்கமுள்ள மனதிற்குள் ரகசியங்களின் புதையல் உள்ளது. இது காதல் உறவுக்கு ஓர் மகிழ்ச்சியான விஷயங்களை சேர்க்கிறது. உறவுக்குள் எந்த பிரச்சனையும் வராமல், இந்த ராசிக்கார பெண்கள் பார்த்துக்கொள்வார்கள்.
மிதுனம்
இரட்டையர்களால் குறிக்கப்படும் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை பிரச்சனைகளை கொண்டிருக்கிறார்கள். இந்த ராசி பெண்களின் அரட்டை இயல்பு மற்றவர்களை முட்டாளாக்கி, பல ரகசியங்களை தங்களுக்குள் வைத்திருக்க வைக்கும். இந்த பெண்கள் திறமையான ரகசிய காவலர்கள்.
ஒவ்வொரு மனநிலைக்கும் அவர்கள் இரட்டை இயல்புகளைப் பெற்றிருப்பதற்கு ஏற்ப, அவர்கள் நீங்கள் பார்க்க விரும்புவதை மட்டும் வெளிப்படுத்துகிறார்கள்.
மகரம்
மகர ராசி பெண்கள் காதல் விளையாட்டில் பல ரகசியங்களை மறைத்து வைத்திருப்பார்கள். மற்றவர்கள் முன்னிலையில் பொறுப்பாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொள்வார்கள். ஆனால், அவர்களின் ஆழ்மனத்திற்குள் பல இரகசியங்களை புதைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் கணிக்க முடியாத அற்புதங்களை உறவில் நிகழ்த்துகிறார்கள். மேலும், ஒவ்வொரு உறவையும் வசீகரிக்கும் சதுரங்கப் போட்டியாக மாற்றுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
