Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இந்த 5 ராசி பெண்கள் அவங்கள விட வயது குறைந்த ஆண்களை காதலிக்க அதிக வாய்ப்பிருக்காம்... உங்க ராசி என்ன?
பழமைவாதமும், மூடநம்பிக்கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகிக் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக காதல் உறவுகளில் கடந்த காலங்களில் இருந்த பல விதிமுறைகள் தற்போது தகர்க்கப்பட்டு விட்டன. காதலைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் வயது முக்கியப்பங்கு வகித்தது. ஆனால் வயது வெறும் எண்ணாகவே பார்க்கப்படுகிறது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தங்களை விட வயது குறைவான அல்லது அதிகமான நபரை காதலிக்க அதிக வாய்ப்புகளை தற்போதைய வேகமான காலத்தில் பெறுகிறார்கள். குறிப்பாக கடந்த களங்களில் வயது குறைவான ஆண்களை காதலிக்க பெண்களுக்கு இருந்த தடை தற்போது இல்லை.

தங்களை விட இளமையாகவும், சுறுசுறுப்பாகவும், ஆற்றல் நிறைந்து காணப்படும் ஆண்களிடம் சில பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இதற்கு அவர்களின் ராசி முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் தங்களை விட வயதில் குறைந்த ஆண்களிடம் எளிதில் ஈர்க்கப்படுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசி பெண்களின் வளர்ப்பு ஆளுமை அவர்களை இளைய ஆண்களுடன் டேட்டிங் செய்ய அனுமதிக்கிறது. கடக ராசிக்காரர்கள் தங்கள் துணையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் விரும்புகிறார்கள், எனவே இந்த பெண்கள் ராசி தங்களை விட இளையவர்களிடம் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.
மற்றொரு காரணம் என்னவென்றால், கடக ராசி பெண்கள் அத்தகைய உறவுகளில் தங்கள் தவறுகளை மறைக்க விரும்புகிறார்கள், ஏனென்றால் இளையவரின் தவறுகளை அவர்கள் கவனித்துக் கொள்வதால், அவர்கள் தங்களை ஒருபோதும் குற்றம் சாட்ட முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
மேஷம்
மேஷ ராசி பெண்களும் வயதில் இளையவர்களை விரும்புகிறார்கள், அதனால் அவர்களின் ஆற்றல் தங்களுக்குள்ளும் எதிரொலிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மீண்டும் இளமையுடன் இருப்பதற்கான தேடலில், தன்னிச்சையான மற்றும் மனக்கிளர்ச்சியான நடத்தையைக்க கொண்டதங்கள் வயதை விட வயதில் குறைந்த ஆண்களை தேர்வு செய்கிறார்கள்.
மனதளவில் மேஷ ராசி பெண்கள் முதிர்ச்சியடைந்தவர்களாக இருப்பதால், வயதில் இளையவர்கள் இவர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் அதிக பாதுகாப்பு உணர்வு கொண்டவர்கள், எனவே ஒருவரை பாதுகாப்பதற்கான அவர்களின் அடிப்படை குணம் அவர்களின் உறவுகளுக்கும் நீள்கிறது. எனவே இந்த ராசி பெண்கள் இந்த ராசி பெண்கள் தங்களை விட வயது குறைவான ஆண்களிடம் அதிக ஆர்வம் கொள்கிறார்கள்.
இவர்கள் உறவில் ஆதிக்கம் செலுத்தவும், அறிவுரை வழங்கவும் விரும்புகிறார்கள். அதற்கு வயதில் குறைவானவர்களே பொருத்தமாக இருப்பார்கள். எனவே இயற்கையாகவே வயதில் இளையவர்கள் பக்கம் சாய்கிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்கள், எனவே அவர்கள் எப்போதும் மனதளவில் இளமையாக இருப்பார்கள். காதல் துணை என்று வரும்போது தங்களைப் போலவே மனநிலையில் இருக்கும் ஒருவரை விரும்புகிறார்கள்.
எப்போதும் வேடிக்கையாக இருக்கும் மிதுன ராசி பெண்கள் வயது அதிகாரிக்கு போது வேடிக்கையும், உற்சாகமும் குறைந்து விடும் என்று நம்புகிறார்கள். எனவே தங்களின் இளமையான ஆளுமைக்கு ஏற்ப தங்களை விட வயதில் குறைவானவர்களுடன் தங்கள் வாழ்வை கழிக்க விரும்புகிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் உணர்ச்சிகள் நிறைந்த மற்றும் நெருக்கமான உறவுகளை விரும்புகிறார்கள். இளைஞர்களே இந்த குணங்களைக் கொண்டுள்ளனர், எனவே இந்த ராசி பெண்கள் வயதில் இளைய துணையைத் தேடுவதில் ஆச்சரியமில்லை.
வயது முதிர்ந்த ஆணுடன் டேட்டிங் செய்வது சலிப்பாக இருக்கும் என்று இந்தப் பெண்கள் நினைக்கிறார்கள், அதனால் தங்கள் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துவதற்காக, இளைய ஆண்களுடனான உறவை விரும்புகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












