Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
இந்த 4 ராசி பெண்கள் அசாதாரண புத்திசாலிகளாம்... இவங்க நினைக்கிறதை முடிக்காம விடமாட்டாங்க... உங்க ராசி என்ன?
ஜோதிடம் ஒருவரின் ஆளுமையையும், அவர்களைப் பற்றிய ரகசியங்களையும் தெரிந்து கொள்ள பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சாஸ்திரமாகும். இதன்மூலம் ஒருவரின் பலத்தையும், பலவீனத்தையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பெண்கள் அவர்களின் தனித்துவமான மற்றும் அசாதாரணமான அறிவாற்றலுக்காக தனித்து நிற்கிறார்கள். இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் வெற்றியைக் குவிக்கக் கூடியவர்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் அசாதாரண அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் புதிய யோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு முன்னோடியாக இருக்கும் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர். சூழலுக்கு ஏற்ப மாறும் மற்றும் லட்சிய இயல்புடன், அவர்கள் ஆர்வத்துடன் தங்கள் வாழ்வை வழிநடத்துகிறார்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
மேஷ ராசி பெண்களின் மனம் கட்டிடக் கலைஞர்களைப் போன்றது, சிக்கல்களுக்கு எப்போதும் புதுமையான தீர்வுகளை உருவாக்குகிறது மற்றும் ஆராயப்படாத புதிய பாதைகளை திறக்கிறது. அவர்களின் தைரியமும் உறுதியும் அவர்களை இயற்கையாகவே சிறந்த தலைவர்களாக ஆக்குகின்றன, தொடர்ந்து தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே சென்று புதுப்புது உயரங்களை அடைய அவர்களால் முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் அவர்க்ளின் உறுதியான மற்றும் எதார்த்தமான அணுகுமுறைக்கு பெயர் பெற்ற பூமியின் அடையாளமாவர். ரிஷப ராசி பெண்கள், எப்போதும் நீண்ட கால வெற்றியை உறுதி செய்யும் ஒரு தந்திரமான மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள்.
செஸ் வீரர்களைப் போலவே, அவர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தில் கொண்டு தங்கள் நகர்வுகளை கவனமாக திட்டமிடுகிறார்கள். அவர்களின் ப்ராக்டிக்கல் அணுகுமுறை மற்றும் விவரம் பற்றிய கவனம் அவர்களை சிக்கலைத் தீர்ப்பதில் சிறந்தவர்களாக மாற்றுகிறது, அவர்களின் இலக்குகளை நோக்கி ஒரு நிலையான மற்றும் செழிப்பான பயணத்தை உறுதி செய்கிறது.
கன்னி
கன்னி பெண்கள் பகுப்பாய்வு செய்வதில் மேதைகள். அவர்களின் கூர்மையான மனம் தகவல்களைத் துல்லியமாகப் பிரித்து, அனைத்து விவரங்ககளையும் துல்லியமாக கவனிக்க உதவுகிறது. கன்னி ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வதோடு, அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு உன்னிப்பான அணுகுமுறையைக் வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த பகுப்பாய்வுத் திறன் தனிப்பட்ட விஷயங்களைத் தாண்டி, சிக்கலான விஷயங்களைப் பற்றிய ஆழமான புரிதலை உள்ளடக்கி, அவர்களை சிறந்த ஆலோசகர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆக்குகிறது.
விருச்சிகம்
இது தீவிரம் மற்றும் உள்ளுணர்வுடன் தொடர்புடைய ஒரு நீர் அறிகுறியாகும். விருச்சிக ராசிப் பெண்கள், குறிப்பாக சொல்லாதவற்றை தெரிந்து கொள்ளவும், பேசாதவற்றைப் புரிந்து கொள்ளவும் ஒரு உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் உள்ளுணர்வு, வலிமையான சிந்தனையுடன் இணைந்து, வாழ்க்கையின் சவால்களை வழிநடத்துவதில் அவர்களை வலிமைமிக்கவர்களாக மாற்றுகிறது. விருச்சிக ராசி பெண்கள் பெரும்பாலும் உளவியல், துப்பறியும் வேலை அல்லது மூலோபாய திட்டமிடல் போன்ற தொலைநோக்கு மற்றும் நுண்ணறிவு தேவைப்படும் தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

