Latest Updates
-
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! -
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம்
இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் காதலுக்கு அடிமையாக இருப்பார்களாம்... இவங்களுக்கு காதல் மட்டும்தா முக்கியமாம்!
ஜோதிடம் நமது ஆளுமைகளை வடிவமைக்கும் தனித்துவமான பண்புகளையும் போக்குகளையும் வெளிப்படுத்துகிறது. அதன்படி ஒருவரின் காதல் வாழ்க்கைப் பற்றியும், அவர்கள் காதலில் எப்படி செயல்படுவார்கள் என்பதையும் அவர்களின் பிறந்த ராசியை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட கணிப்புகளின் படி நான்கு ராசி அறிகுறிகள் காதலின் மயக்கத்தை தவிர்க்க முடியாமல் அன்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் அனைத்தையும் விட காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் காதலுக்கு அடிமையாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் அவர்களின் உமிழும் ஆர்வம் மற்றும் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். காதல் விஷயங்களில், அவர்கள் பெரும்பாலும் முன்மொழிபவராக இருப்பார்கள், புதிய உறவுகளின் சிலிர்ப்பை அவர்கள் எப்போதும் விரும்புகிறார்கள். இருப்பினும், காதலுக்கான இந்த ஆர்வம் சில சமயங்களில் அவர்களுக்கு ஒரு போதைப்பொருளாக மாறலாம்.
மேஷ ராசி பெண்கள் தொடர்ந்து எப்போதும் அடுத்தடுத்த காதலை நோக்கி நகர்வார்கள். அவர்களின் காதல் பயணம் ஒருபோதும் நிற்காது.
கடகம்
கடக ராசி பெண்கள் தங்கள் உணர்ச்சிகளுடன் ஆழமான தொடர்பில் இருப்பார்கள். அவர்களின் அக்கறையான குணங்கள் அவர்களை மிகச்சிறந்த காதலியாக மாற்றும் அதே வேளையில், காதலுடனான அவர்களின் தீவிர உணர்ச்சிரீதியான தொடர்பு அவர்களை காதலுக்கு அடிமையாகவே மாற்றும்.
அவரக்ளின் வாழ்க்கையில் வெகுசில உறவுகளே இருந்தாலும் அவர்கள் அதில் எப்போதும் தீவிரமாகவும், ஆழமாகவும் இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த பெண்கள் இயற்கையான இராஜதந்திரிகள், காதல் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவர்கள் நல்லிணக்கத்தை நாடுகின்றனர். இருப்பினும், சமநிலைக்கான இந்த நாட்டம் சில நேரங்களில் ஒரு சரியான உறவைப் பற்றிய யோசனைக்கு அவர்களை அடிமையாக மாற்றும்.
நீங்கள் காதலில் சமநிலையை காண போராடும் துலாம் ராசி பெண்ணாக இருந்தால், உங்கள் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஒரே காதலில் தீவிரமாக இறங்க வேண்டும்.
மீனம்
மீன ராசியில் பிறந்த பெண்கள், பெரும்பாலும் காதலில் கனவு காண்பவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் கற்பனை மற்றும் பச்சாதாப குணம் அவர்களை காதலின் போதைக்கு அடிமையாக்கும்.
காதல் கற்பனைகள் நிறைந்த உலகில் நீங்கள் தொலைந்து போகாமல் இருக்க காதலில் எப்போதும் நிதானமாக இருக்க வேண்டும். எந்தவொரு உறவிலும் அவசரப்படாமல் இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
