Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...!
இந்த 5 ராசி ஆண்கள் அளவில்லாத ரகசியத்தை மனதில் புதைச்சு வைச்சிருப்பாங்களாம்... பாவம் இவங்க மனைவி...!
கணவன் மனைவி உறவிற்குள் எப்போதும் உறவுகளில் வெளிப்படைத்தன்மை எப்போதும் மிகவும் அவசியமானதாகும். தம்பதிகளில் ஒருவர் சில விஷயங்களை மறைக்கும் போது அது உறவில் சந்தேகத்தை உருவாக்கும். உறவுகளின் சிக்கலான பயணத்தில், உங்கள் துணையின் நுட்பமான செயல்பாடுகள் மற்றும் மறைக்கப்பட்ட உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது முக்கியமானது.
ஒருவரின் ஆளுமையை புரிந்து கொள்வதற்கு ஜோதிட சாஸ்திரம் ஒரு தனித்துவமான வழியை வழங்குகிறது, இதன் மூலம் ஒருவரின் ரகசியங்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும். சில ஆண்கள் தங்கள் மனைவியிடமிருந்து தங்கள் உண்மையான உணர்வுகளை மறைப்பதில் திறமையானவர்களாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் தங்கள் மனைவியிடமிருந்து ரகசியங்களை வைத்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், அவர்களின் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான இயல்பு கொண்டவர்கள், எனவே அவர்கள் தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்துவதை பெரும் சவாலாக உணர்கிறார்கள். அச்சமில்லாதவராக தோன்ற வேண்டும் என்ற அவர்களின் ஆசை, அவர்களின் உண்மையான உணர்ச்சிகளை மனைவியிடமிருந்து மறைக்க வழிவகுக்கும்.
உங்கள் கணவரின் ராசி மேஷமாக இருந்தால் நீங்கள் அவர்களின் பலவீனத்தை அறிந்து கொள்வது மிகவும் கடினமாகும். அவர்களின் உணர்வுகளை நீங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்
இரட்டை இயல்பு கொண்ட மிதுன ராசி ஆண்கள் தங்கள் உள் எண்ணங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்கலாம். பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப உடனடியாக மாற்றிக்கொள்ளும் அவர்களின் திறன் அவர்களின் திறன் அவர்களின் மனைவிகளுக்கு அவர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது.
மிதுன ராசி ஆண்களை மணந்த பெண்கள் அவர்கள் கணவரின் எண்ண ஓட்டத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இறுதிவரை திகில் படம் பார்ப்பது போன்ற உணர்விலேயே வாழ வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி ஆண்கள், உணர்ச்சி மற்றும் தீவிரமான மனநிலையில் கொண்டவர்கள், அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மறைப்பதில் நிபுணர்களாக இருக்கலாம். அவர்களின் மர்மமான இயல்பு அவர்களின் அடிமனதில் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களின் மனைவியை குழப்பத்திலேயே வைத்திருக்கலாம்.
உண்மையில் எவ்வ்ளவுதான் முயற்சித்தாலும் விருச்சிக ராசிக்காரர்களின் மனதில் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் என்னவென்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது.
மகரம்
மகர ராசி ஆண்கள், நடைமுறை மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை அணுகுமுறையைக் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை தங்களின் புன்னைக்கு பின்னால் மறைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள்.
அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் இந்த தடையை உடைப்பதற்கு அவர்களின் உள் உலகத்தைப் பற்றிய நுணுக்கமான புரிதல் தேவைப்படும். அவர்களுடன் நீண்ட காலம் நெருங்கி பழகினால் மட்டுமே அவர்கள் புன்னகைக்கு பின்னால் இருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும்.
கும்பம்
அறிவார்ந்த திறமைக்கும், சாகச மனநிலைக்கும் பெயர் பெற்ற கும்ப ராசிக்காரர்கள், சில சமயங்களில் உணர்ச்சிப்பூர்வமாக மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பவர்களாகத் தோன்றலாம். உணர்ச்சிகளை விட எதார்த்தத்திற்கும், சிந்தனைக்கும் முன்னுரிமை கொடுக்கும் அவர்களின் போக்கு ரகசியங்களை மிகவும் தந்திரமாக மறைக்க வழிவகுக்கும்.
அவர்களின் மனதிலிருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடுமையான காரியமாகும். அவர்களின் மனதிலிருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்ள அவர்களுடைய மனைவியும் அவர்களின் போக்கிலேயே செல்ல வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












