Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
இந்த 4 ராசி ஆண்கள் இரக்கமில்லாதவர்களாக இருப்பார்களாம்... இவங்க சைக்கோனு இவங்களுக்கே தெரியாது...உங்க ராசி என்ன?
ஒவ்வொரு மனிதரும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்ளாக இருப்பார்கள், சிலர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவராக இருக்கும் சூழலில், சிலர் பாறை போல மிகவும் கடுமையானவர்களாக இருப்பார்கள். நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், உங்களால் அவர்களுடன் சகஜமாக பழக முடியாது.
அவர்கள் எங்கு சென்றாலும் குழப்பம் மற்றும் பிரச்சனைகளை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்களை கையாள்வது கடினம் மட்டுமல்ல, அவர்களுடன் இருப்பது எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும். அவர்கள் இப்படி கடுமையானவர்களாக இருக்க அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம்.

ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் கடினமானவராக இருக்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் மிகவும் கடினமானவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
யாரேனும் அவர்களின் வழியில் நின்றால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் கடுமையானவர்கள் மற்றும் கையாள மிகவும் கடினமானவர்கள், அவர்கள் எந்த சூழ்நிலையிலும் பயனடையாதவரை யாருடன் ஒத்துப்போக மாட்டார்கள்.
அவர்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார்கள், மற்றவர்களுக்கு நிறைய சிரமங்களை ஏற்படுத்துகிறார்கள். மேலும் அவர்களின் சின்னமான தேளைப் போலவே வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்துவார்கள், அவர்கள் ஒருவரை பழிவாங்க முடிவெடுத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு மிகவும் நட்பாகவும், கையாள எளிதானவராகவும் தோன்றலாம் ஆனால் உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் எளிதில் உணர்ச்சிவசபடக் கூடியவர்கள் என்பதால் அவர்களுடன் இருப்பது அனைவருக்கும் கடினம்.
அவர்களுக்கு இரக்க குணம் இல்லாததால் மற்றவர்களை சிரமப்படுத்துவார்கள். இந்த ராசிக்காரர்கள் மனதில் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மற்றவர்களால் அறிய முடியாது. இவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்ற அச்சத்திலேயே இவர்களுடன் இருப்பவர்கள் வாழ வேண்டியிருக்கும்.
கன்னி
மக்களை மோசமாக வார்த்தைகளால் விமர்சிப்பதன் மூலம் அவர்களின் இதயத்தை உடைக்கும் அளவுக்கு கன்னி ராசி ஆண்கள் கடுமையாக நடந்து கொள்ளலாம். அவர்கள் சுயநலவாதிகளாகவும், பிறருக்கு உதவாதவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
அவர்களிடம் மற்றவர்கள் உதவி கேட்கும் போது அவர்களை கடுமையாக விமர்சிக்கலாம். அவர்கள் ஒருவரின் நம்பிக்கையை உடைத்து அவர்களைத் தாழ்வாக உணர வைப்பார்கள், அதன்மூலம் அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவார்கள்.
மேஷம்
மேஷ ராசி ஆண்கள் எப்போதுமே சண்டைகள், வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களில் ஈடுபட எப்போதும் தயாராக இருப்பார்கள் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் நலன்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் நலனையே முதன்மையாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு பொறுமை இல்லை, தங்கள் தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தங்கள் தவறை மறைக்க பிறர் மீது பழி விரைவில் பழி சுமத்துகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
