இந்த 4 ராசி ஆண்கள் காதலை அவங்க வாழ்க்கையோட சாபமாக நினைப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

பொதுவாக காதலைப் பொறுத்தவரை ஆண்கள்தான் எப்போதும் முன்மொழிபவராக இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் விதிவிலக்காக இருப்பதை நீங்கள் கவனித்து உள்ளீர்களா? பெரும்பாலான ஆண்கள் ஓடி ஓடி காதலிக்கும் போது அவர்கள் மட்டும் காதலென்றாலே ஓடுபவர்களாக இருப்பார்கள்.

சில ஆண்களின் இந்த வினோதமான குணத்துக்கு அவர்க்ளின் பிறந்த ராசி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு காதல் தவிர பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

Which Men Zodiac Signs Are Hard To Fall In Love in Tamil

இதனால் அவர்கள் காதலில் விழும் அதிசயம் மிகவும் அரிதாகவே நடக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் காதலில் மிகவும் அரிதாகவே விழுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசி ஆண்கள் தங்கள் சுதந்திரமான மற்றும் விதிமுறைகளை மீறும் தனித்துவமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் அறிவார்ந்த நோக்கங்கள் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான இணைப்புகளை விட முன்னுரிமை பெறுகின்றன.

இதனால் அவர்கள் ஆழமான, காதல் உறவில் இணைவதை அவர்கள் சவாலாக உணர்கிறார்கள். நீங்கள் ஒரு கும்ப ராசி ஆணிடம் ஈர்க்கப்பட்டால், பொறுமை மற்றும் உற்சாகமான உரையாடல்கள் அவரது கவனத்தை உங்களை நோக்கி திருப்ப உதவும்.

மகரம்

மகர ராசி ஆண்கள் லட்சியம் மற்றும் எதார்த்த வாழ்க்கை முறையால் இயக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் காதல் வாழ்க்கையை பெரும்பாலும் இரண்டாம் நிலையாகக் கருதுவார்கள். இதனாலேயே அவர்கள் எப்போதும் தனிமையில் இருப்பவராகவும், உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள் மிகவும் கடினமானவராகவும் மாற்றும்.

ஒரு மகர ராசி ஆண் இதயத்தை கைப்பற்ற, அவரது லட்சியங்களுக்கு உங்கள் ஆதரவை நிரூபிக்கவும், உங்கள் சொந்த பொறுப்புணர்வு உணர்வை வெளிப்படுத்தவும்.

கன்னி

கன்னி ராசி ஆண்கள் புத்திசாலிகள் மற்றும் எதையும் பகுப்பாய்வு செய்து பார்க்கும் வழக்கம் கொண்டவர்கள். இது அவர்களை நம்பகமான துணையாக மாற்றும் அதே வேளையில், காதலால் ஏற்படும் சிக்கல்களில் மூழ்குவதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கச் செய்யலாம், அதனாலேயே அவர்கள் காதல் உறவை புறக்கணிக்கலாம்.

நம்பிக்கையை வளர்ப்பதும் உங்கள் நம்பகத்தன்மையை நிரூபிப்பதும் கன்னி ராசி ஆணின் நம்பிக்கையை வெல்வதில் முக்கியமான படிகளாகும்.

தனுசு

தனுசு ராசி ஆண்கள் சுதந்திரம் மற்றும் சாகசத்தை விரும்புவதற்கு பெயர் பெற்றவர்கள். காதல் உறவு அவர்களின் துடிப்பான ஆன்மாக்களுக்கு ஒரு தடைகல்லாக அவர்கள் உணரலாம், இதனால் அவர்கள் காதலில் ஈடுபடத் தயங்குவார்கள்.

தனுசு ராசி ஆணின் இதயத்தைக் கவர, அவர்களின் சாகசத்திற்கான ஆர்வத்தை ஆதரித்து, காதல் ஒரு அற்புதமான சாகசப் பயணமாக இருக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, December 13, 2023, 11:34 [IST]
Desktop Bottom Promotion