Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
40 பேர் மட்டுமே வருஷத்துக்கு வருகை தரும் உலகின் மோசமான நாடு இதுதான்... இங்க அப்படி என்னதான் பிரச்சினை...!
உலகில் உள்ள வெகுசில நாடுகளைத் தவிர கிட்டதட்ட அனைத்து நாடுகளுக்கும் பயணிகள் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். மக்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணிக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்த நாட்டின் சூழல், பொருளாதார பிரச்சினை, சர்வாதிகார போக்கு என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். உலகிலேயே மக்கள் மிகவும் குறைவாக வருகைதரும் நாடு எதுவாக இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?
வட கொரியாதான் உலகிலேயே மிகவும் குறைவான மக்கள் வருகைதரும் நாடு என்று நாம் நினைத்திருப்போம், ஆனால் அதை விட மக்கள் அதிகம் வெறுக்கும் நாடு ஒன்று உள்ளது. உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்படும் நாடு என்பது பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டதே இல்லாத ஒரு நாடாகும். அந்த இடம் பசிபிக் பெருங்கடலின் நடுவில் உள்ளது, அது துவாலு என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டிற்கு ஏன் சுற்றுலா பயணிகள் யாருமே வருவதில்லை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எவ்வளவு பயணிகள் வந்துள்ளனர்?
ஒன்பது தீவுகளைக் கொண்ட ஒரு சிறிய தீவு நாடான துவாலு, ஆஸ்திரேலியாவிற்கும் ஹவாய்க்கும் இடையில் அமைதியாக அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்த நாட்டுக்கு 40 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர், மேலும் சமீபத்திய ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் 200 க்கும் குறைவான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இங்கு வருகை தருகின்றனர்.
துவாலு உண்மையில் ஒரு அழகான நாடாகும். அதன் அழகிய கடற்கரைகள், பிரமிக்க வைக்கும் பவளப்பாறைகள் மற்றும் துடிப்பான கடல்வாழ் உயிரினங்கள் என இயற்கையான சூழலை விரும்பும் பயணிகளுக்கு இது ஏற்ற இடமாகும். ஆனால் அதன் தொலைதூர இடம், வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் அடிக்கடி உயரும் கடல் மட்டங்கள் பெரும்பாலான மக்களிள் இங்கு வருகைத் தருவதை தவிர்க்க வைக்கிறது.
துவாலு எங்கு உள்ளது?
துவாலு, பிஜி தீவின் வடகிழக்கில் தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. இது பாலினேசிய துணைப் பகுதியின் ஒரு பகுதியாகும், மேலும் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடலால் சூழப்பட்டுள்ளது. இந்த தீவு கூட்டங்களின் முக்கிய தீவு ஃபுனாஃபுட்டி ஆகும், அங்கு ஒரு சர்வதேச விமான நிலையம் ஒரு குறுகிய நிலப்பகுதியில் அமைந்துள்ளது.
இது வெறும் 26 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே உள்ள நாடாக இருந்த போதிலும், காலநிலை பற்றிய விவாதங்களில் துவாலு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6.5 அடி உயரத்தில் உள்ள தீவு காலநிலை மாற்றம் மற்றும் கடல் உயர்வு ஆகியவற்றால் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும்.
ஏன் மக்கள் துவாலுக்கு வருவதில்லை?
இதற்கு எளிதான பதில், இங்கு செல்வது மிகவும் கடினமாகும். ஒவ்வொரு வாரமும் பிஜி ஏர்வேஸிலிருந்து ஒரு சில விமானங்கள் மட்டுமே இங்கு தரையிறங்குகின்றன. ஒருவேளை இந்த நாட்டுக்கு சென்று விட்டாலும் அங்கு தங்குவதற்கு ஆடம்பர ஹோட்டல்கள் எதுவுமில்லை, மிகவும் சாதாரண ஹோட்டல்கள் மட்டுமே உள்ளது. மேலும் முக்கிய தீவான ஃபனாஃபுட்டியில் ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது, அதில் போக்குவரத்து விளக்குகளும் இல்லை. சுற்றுலா மேம்பாட்டின் பற்றாக்குறை மற்றும் பொதுவான விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் துவாலு மக்கள் பார்வையிடப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சுற்றுலா குறைவாக உள்ள மற்ற நாடுகள்
துவாலு உலகின் சுற்றுலா மோசமாக உள்ள நாடுகளில் கடைசி இடத்தில் இருந்தாலும், அது தனியாக இல்லை. மார்ஷல் தீவுகள், சாலமன் தீவுகள் மற்றும் மைக்ரோனேஷியா கூட்டாட்சி நாடுகள் ஆகியவை உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்படும் நாடுகளில் இடம் பெற்றுள்ளன. அரசியல் ஸ்திரமின்மை, அணுசக்தி சோதனை மற்றும் புவியியல் தனிமைப்படுத்தல் போன்றவை இதற்கு காரணிகளாக இருக்கிறது. 'பூலோக நரகம்' என்று அழைக்கப்படும் வட கொரியா கூட, அதன் மோசமான எல்லைக்குட்பட்ட விலக்கு மண்டலத்தைக் கொண்டிருப்பதால், துவாலுவை விட ஆண்டுதோறும் அதிக சுற்றுலாப் பயணிகளைப் ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications
