உங்ககிட்ட இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருக்கா? அப்ப இந்த நாடுகளில் ஈஸியா வண்டி ஓட்டலாமாம்...உடனே கிளம்புங்க...!

வெளிநாடுகளின் அற்புதமான சாலைகளில் பயணம் செய்ய வேண்டுமென்பது அனைவரின் கனவாக இருக்கும். வெளிநாடுகளில் வாகனம் ஓட்டுவது என்பது சுவாரஸ்யமான சாகசமாக இருக்கும். ஆனால் அதற்கு தேவையான ஆவணங்கள் இருக்க வேண்டியது அவசியம், முக்கியமாக ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் செல்லும் நாடுகளுக்கெல்லாம் அந்த நாட்டுக்குரிய ஓட்டுநர் உரிமத்தை பெறுவது என்பது இயலாத காரியமாகும். அதிர்ஷ்டவசமாக இந்தியாவின் ஓட்டுநர் உரிமத்தை சில நாடுகள் தங்கள் நாடுகளில் அனுமதிக்கிறது.

Which Foreign Countries Accept Indian Driving License in Tamil

நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருந்து, வேறொரு நாட்டில் வாகனம் ஓட்ட திட்டமிட்டிருந்தால், உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை எந்த நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்திய ஓட்டுநர் உரிமத்தை அனுமதிக்கும் வெளிநாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா இந்தியர்கள் பலரும் வேலைக்காகவும், சுற்றுலாவுக்காகவும் செல்லும் பிரபல இடமாக இருக்கிறது. நீங்கள் விடுமுறைக்காக சென்றிருந்தாலும் அல்லது வேலை காரணமாக இருந்தாலும், அங்கு இந்திய ஓட்டுநர் உரிமம் சட்டப்பூர்வமாகவும், நாடு முழுவதும் செல்லுபடியாகும்.

நீங்கள் ஆஸ்திரேலியாவின் தலைநகர், நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா அல்லது குயின்ஸ்லாந்தில் வாகனம் ஓட்டினால், உங்கள் இந்திய உரிமம் ஒரு வருடம் வரை அங்கு செல்லுபடியாகும்.

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில், இந்திய ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அமெரிக்கா

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அமெரிக்க சாலைகளில் இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கிறது. இந்திய டிரைவிங் லைசென்ஸ் அமெரிக்காவிற்குள் நுழைந்த நாளிலிருந்து 1 வருடத்திற்கு செல்லுபடியாகும்.

இருப்பினும், ஓட்டுநர் உரிமம் இந்தியாவின் எந்த பிராந்திய மொழியிலும் இருக்கக்கூடாது, அது ஆங்கிலத்தில் இல்லையென்றால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதனுடன் அமெரிக்காவிற்குள் நீங்கள் சட்டப்பூர்வமாக நுழைந்ததற்கான சான்றாகச் செயல்படும் சான்றளிக்கப்பட்ட I-94 படிவத்தையும் நீங்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

நியூசிலாந்து

நியூசிலாந்து ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஒரு வருடத்திற்கு மேல் வாகனம் ஓட்டுவதற்கு நியூசிலாந்து ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவை.

மேலும் நீங்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், மேலும் உங்கள் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். உங்களிடம் அது இல்லையென்றால், நியூசிலாந்து போக்குவரத்து ஏஜென்சியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நகலைப் பெறலாம்.

இங்கிலாந்து

உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமம் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில், அந்த நாட்டிற்குள் நீங்கள் நுழைந்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். உங்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை வாகனங்களை மட்டுமே நீங்கள் ஓட்ட முடியும்.

அதிர்ஷ்டவசமாக, இவற்றில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் போன்ற சிறிய வாகனங்களும் அடங்கும். உங்களின் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும், மேலும் நீங்கள் சாலையின் இடது பக்கத்தில் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும்.

சுவிட்சர்லாந்து

பெரும்பாலான மக்களின் கனவு நாடான சுவிட்சர்லாந்து, இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் ஒரு வருடம் வரை அவர்களின் கண்கவர் சாலைகளில் பயணிக்க அனுமதிக்கிறது. மற்ற நாடுகளைப் போலவே ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். நீங்கள் சுவிட்சர்லாந்தின் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, சாலையின் வலதுபுறத்தில் ஓட்டினால், உங்கள் உரிமத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த வாகனத்தையும் வாடகைக்கு எடுக்கலாம்.

ஜெர்மனி

இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் மற்றொரு ஐரோப்பிய நாடு ஜெர்மனி, ஆனால் இங்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே. ஓட்டுநர் உரிமம் ஆங்கிலம் அல்லது ஜெர்மன் மொழியில் இருக்க வேண்டும். ஒருவேளை உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் அதை போலீஸ் அதிகாரிகள் அல்லது வாடகை ஏஜென்சிகள் மூலம் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, உங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதி அல்லது ஜெர்மன் ஓட்டுநர் உரிமம் தேவைப்படும்.

பிரான்ஸ்

இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் பிரான்சின் அழகிய வீதிகளில் நீங்கள் உலா வரலாம். இங்கு இந்திய ஓட்டுநர் உரிமம் 1 வருடம் வரை செல்லுபடியாகும், இருப்பினும், நீங்கள் ஓட்டுநர் உரிமத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க வேண்டும். பிரான்சில் கார்கள் இடதுபுறத்தில் ஸ்டீயரிங் கொண்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது, எனவே ஓட்டுவது சற்று கடினமாக இருக்கும்.

மலேசியா

மலேசியா இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இருப்பினும், உரிமம் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் இருக்க வேண்டும். வேறு எந்த மொழியிலாவது இருந்தால், இந்தியாவிலோ அல்லது மலேசியாவிலோ உள்ள இந்திய தூதரகத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். கூடுதல் பாதுகாப்புக்காக உங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தையும் நீங்கள் எடுத்துச் செல்லலாம்.

பூட்டான்

பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறந்த நல்லுறவு உள்ளது, எனவே இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் பூட்டானில் இந்தியர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அந்நாடு அனுமதிக்கிறது. ஓட்டுநர் உரிமத்துடன் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் ஐடி போன்ற பிற ஆவணங்களும் உங்களிடம் இருக்க வேண்டும். இருப்பினும், பூட்டானின் கரடுமுரடான மற்றும் குறுகலான நிலப்பரப்புகளில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர்

இந்திய ஓட்டுநர் உரிமம் சிங்கப்பூரில் 1 வருடத்திற்கு செல்லுபடியாகும். உங்கள் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் அல்லது இந்திய அல்லது சிங்கப்பூர் தூதரகத்தில் மொழிபெயர்க்க வேண்டும். ஒரு வருடம் கழித்து, நீங்கள் சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டும். நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

தென்னாப்பிரிக்கா

இந்திய ஓட்டுநர் உரிமம் தென்னாப்பிரிக்காவில் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். மற்ற நாடுகளைப் போலவே, ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இருப்பினும், கார்கள்/பைக்குகளை எளிதாகப் வாடகைக்கு எடுக்க சர்வதேச ஓட்டுநர் அனுமதியை எடுத்துச் செல்லுங்கள்.

கூடுதல் நன்மைக்கு மற்ற பயண ஆவணங்கள் மற்றும் கூடுதல் புகைப்படங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தென்னாப்பிரிக்கா சாலைகளும் பயணிக்க ஆபத்தானவையாகும், எனவே பொருத்தமான பயணக் காப்பீட்டை எடுத்துச் செல்வது சிறந்தது.

ஸ்பெயின்

உங்களிடம் ஓட்டுநர் உரிமம் இருந்தால், நீங்கள் வசிப்பிடத்திற்காக விண்ணப்பித்தப் பிறகு 6 மாதங்கள் வரை ஸ்பெயினின் சாலைகளில் வாகனம் ஓட்டலாம். மேலும், உங்கள் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளச் சான்றுடன் இருக்க வேண்டும்.

கனடா

கனடாவில் இந்தியாவில் வாகனம் ஓட்டுவதைப் போலல்லாமல், சாலையின் வலதுபுறத்தில் வாகனம் ஓட்ட வேண்டும். இந்திய ஓட்டுநர் உரிமம் கனடாவில் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும், அதன் பிறகு நீங்கள் கனடாவில் கார் ஓட்டுவதற்கு கனடா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

Desktop Bottom Promotion