இந்த நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு ரொம்ப அதிகமாம்..இங்க சுற்றுலா போனா பட்ஜெட்டில் ராஜா மாதிரி சுத்தலாமாம்!

வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டுமென்பது அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். ஆனால் அதற்கான செலவை கணக்கிடும் போது அந்த ஆசையே காணாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ள அழகிய நாடுகளுக்கு பயணிப்பது என்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் என்பதையும் தாண்டி இந்த நாடுகள் அவற்றின் பல்வேறு கலாச்சாரங்கள், இயற்கைக்காட்சிகள் மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளன. இவை உங்கள் பட்ஜெட்டுக்குள்ளேயே உங்களின் சுற்றுலா திட்டத்தை முடிக்க உதவும். இந்த பதிவில் இந்திய ரூபாயை விட குறைவான மதிப்பை கொண்ட அழகிய நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

Which Countries Has the Indian Rupees Highest Value
Photo Credit:

இந்தோனேசியா

இந்தோனேசியா இந்தியர்களால் மிகவும் விரும்பப்படும் பயண இடங்களில் ஒன்றாகும், மேலும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது இந்தோனேசிய ரூபாயின் (IDR) மதிப்பு கணிசமாகக் குறைவாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம் 1 ரூபாய் என்பது சுமார் 180 IDRக்கு சமம், இது இந்தியப் பயணிகள் செல்வதற்கு மிகவும் எளிதான நாடாகும்.

இங்குள்ள பாலி உலகளவில் மிகவும் பிரபலமான தீவாகும். பாலி அதன் அற்புதமான கடற்கரைகள், இரவு வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருப்பதால், ஆடம்பரமான விடுதிகள், நீர் விளையாட்டுகள், பாரம்பரிய ஸ்பா சிகிச்சைகள் மற்றும் அயல்நாட்டு உணவுகள் போன்றவற்றை அதிக செலவில்லாமல் அனுபவிக்கலாம்.

வியட்நாம்

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் மற்றொரு ஆசிய நாடு வியட்நாம். 1 INR தோராயமாக 290 வியட்நாமிய டாங் மதிப்பைக் கொண்டுள்ளது. ஹனோயின் பரபரப்பான தெருக்களில் இருந்து ஹா லாங் பேயின் அமைதியான நிலப்பரப்புகள் வரை, வியட்நாம் ஒரு கலாச்சார பொக்கிஷமாக விளங்குகிறது. வியட்நாமின் புகழ்பெற்ற தெரு உணவுகள், பாரம்பரிய சந்தைகள் மற்றும் இயற்கை அதிசயங்களை உங்கள் பட்ஜெட்டிற்குள் நீங்கள் அனுபவிக்கலாம்.

This image is AI generated
Photo Credit:

இலங்கை

நம் அண்டை நாடான இலங்கை, இந்திய ரூபாயின் அதிக மதிப்பை வழங்குகிறது. 1 INR என்பது சுமார் 3 இலங்கை ரூபாய்க்கு (LKR) சமம். அழகிய கடற்கரைகள், பிரமாண்டமான மலைகள் மற்றும் பழங்கால கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளுடன், இலங்கை ஓய்வு மற்றும் சாகசத்திற்கு சிறந்த இடமாக உள்ளது. வனவிலங்கு சஃபாரிகள், இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணங்கள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளை மற்ற சர்வதேச இடங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த செலவில் இங்கு பெறலாம்.

நேபால்

பிரமாண்டமான மலைத்தொடர்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற நேபாளம், இந்திய பயணிகளுக்கு சிறந்த மதிப்பை வழங்குகிறது. இன்று 1 INR மதிப்பு தோராயமாக 1.60 நேபாள ரூபாய் (NPR) ஆகும். இமயமலை வழியாக மலையேற்றம் செய்வது, காத்மாண்டுவில் உள்ள பழங்கால கோவில்களை ஆராய்வது அல்லது போகாராவில் இயற்கை எழில் கொஞ்சும் ஏரி காட்சிகளை பட்ஜெட்டிற்க்குள் பெறலாம். மேலும், அண்டை நாடான நேபாளம் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதில் அணுகக்கூடியது.

கம்போடியா

கம்போடியாவில் உள்ள அற்புதமான அங்கோர் வாட் கோவில் வளாகம் உள்ளது. இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய்க்கு 50 KHR வரை உள்ளது. இங்கே, நீங்கள் பழங்கால இடிபாடுகள், பாரம்பரிய சந்தைகள் மற்றும் பழமையான கடற்கரைகள் போன்றவற்றை அதிக செலவின்றி ஆராயலாம். இங்கு தரமான ஹோட்டல்களில் தங்குவதற்கும், சிறந்த உணவகங்களில் உணவருந்துவதற்கும், வரலாற்றுத் தளங்களில் சுற்றுப்பயணம் செல்வதற்கும் நீங்கள் குறைவாக செலவு செய்தாலே போதும்.

லாவோஸ்

லாவோஸ் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும். இங்கு 1 இந்திய ரூபாயின் மதிப்பு 240 Laotian Kip (LAK)ஆகும், இந்திய நாணயத்தின் அதிகபட்ச மதிப்பை வழங்கக்கூடிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். லாவோஸ் அதன் அமைதியான நிலப்பரப்புகள், ஆற்றங்கரை நகரங்கள் மற்றும் புத்த கோவில்களுக்கு பெயர் பெற்றது.

ஜிம்பாவே

ஜிம்பாவே ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும், அங்கு இந்திய பயணிகள் பட்ஜெட்டிற்குள் ஆடம்பர வசதிகளை அனுபவிக்க முடியும். 1 INR என்பது 5.47 ஜிம்பாப்வே டாலர்களுக்கு (ZWD) சமம். விக்டோரியா நீர்வீழ்ச்சி மற்றும் பரந்த தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட அற்புதமான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற ஜிம்பாப்வே, பயணிகளுக்கு தனித்துவமான அனுபவங்களை வழங்குகிறது. ஜிம்பாப்வேயில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருப்பது உங்கள் பட்ஜெட்டிற்குள் வனவிலங்குகளை ஆராயவும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களைப் பார்வையிடவும் வழிவகுக்கிறது.

Story first published: Thursday, November 7, 2024, 17:06 [IST]
Desktop Bottom Promotion