Latest Updates
-
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க..
வீட்டில் இந்த அனுமன் படத்தை மட்டும் தெரியாம கூட வைச்சுராதீங்க... இல்லனா உங்க வாழ்க்கையே நரகமாகிரும்...!
கடவுள் மற்றும் தெய்வங்களின் படங்கள் இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாகவும் மங்களகரமானதாகவும் காணப்படுகின்றன. இந்து மதத்தில் அனுமன் வலிமையின் சின்னமாக கருதப்படுகிறார். அனுமனை வழிபடுவது தீய சக்திகளை விரட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
செவ்வாய் கிழமை அன்று அனுமனை வழிபடுவது அனைத்து நன்மைகளையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இந்து புராணங்களின்படி, இந்த நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகள் அனுமனைப் பிரியப்படுத்துகின்றன.

வீட்டில் அனுமனை வழிபடும் போது கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. நீங்கள் எந்த வகையான அனுமனை வழிபடுகிறீர்கள் மற்றும் எந்த இடத்தில் வைத்து வழிபடுகிறீர்கள் என்பது உங்களின் பலன்களை நிர்ணயிக்கும். வாஸ்து படி வீட்டில் அனுமனை எப்படி வழிபட வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்
பஞ்சமுக ஆஞ்சநேயர் வீட்டில் படத்தை வைத்திருப்பது தீய சக்திகளை விரட்டும் மற்றும் அந்த குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. இது லட்சுமி தேவியின் அருளைப் பெறவும் உதவுகிறது. உங்கள் வீட்டின் நுழைவாயிலில் பஞ்சமுக அனுமன் படத்தை வைப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
தெற்கு திசையில் வைப்பது நல்லது
வீட்டின் தெற்கு திசையில் அனுமன் படம் அல்லது திருவுருவத்தை மாட்டி வைப்பது நன்மை பயக்கும். இந்து புராணங்களின் படி, அனுமனின் செல்வாக்கு தெற்கில் மிகவும் வலுவானது, மேலும் இந்த திசையில் அவரின் புகைப்படத்தை வைப்பது வீட்டில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளையும் அகற்றும் என்று வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது.
ராமர் பாதம் அருகில் அமர்ந்திருக்கும் அனுமன்
அனைத்து சக்திகளும் இருந்தபோதிலும், அனுமன் எப்போதும் ராமரின் காலடியில் அமர்ந்திருப்பதைத் தேர்ந்தெடுத்தார். ராமர் பாதம் அருகில் அனுமன் அமர்ந்திருக்கும் படம் வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டால், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
சஞ்சீவி மலையை தூக்கியிருக்கும் அனுமன்
லக்ஷ்மணனின் உயிரைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு பறந்தார். அனுமன் மலையுடன் பறப்பது போன்ற புகைப்படத்தை, நம்பிக்கை மற்றும் தைரியம் குறைவாக இருப்பவர்களின் அறையில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.
வடக்கு திசை
தெற்கு திசையைத் தவிர்த்து அனுமனின் சிலை அல்லது படங்கள் வடக்கு திசை நோக்கி வைக்கப்படுவதும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், இந்த புகைப்படம் உண்மையில் அதிர்ஷ்டமானது. வீட்டில் உள்ளவர்கள் இந்த படத்தை மாட்டி வைப்பதன் மூலம் லட்சுமி தேவியை மகிழ்விக்க முடியும்.
வெள்ளை நிற அனுமன்
உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வெள்ளை நிற அனுமன் உருவப்படத்தை நீங்கள் தொங்கவிடலாம். இதன்மூலம் பணியிடத்தில் வெற்றி பெறுவது போல் வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம்.
பறக்கும் அனுமன்
சஞ்சீவி மலையின்றி பறக்கும் அனுமன் புகைப்படம் உங்கள் வீட்டில் இருப்பது உங்களுக்கு நீடித்த வலிமையையும், நிலையான அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். இந்த படம் உங்கள் இல்லத்தில் இருந்தால் முன்னேற்றத்தையும் வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. முன்னோக்கிச் செல்ல உங்களுக்கு உற்சாகமும் தைரியமும் இருக்கும்.
நெஞ்சை கிழித்துக் கொண்டிருக்கும் அனுமன்
அனுமன் தனது மார்பைக் கிழித்து, ராமர் மற்றும் சீதா தேவியின் உருவத்தைக் காட்டும் எந்தவொரு சிலை அல்லது புகைப்படத்தையும் வீட்டில் வைக்கக்கூடாது. அதேபோல அனுமன் இலங்கையை அழிக்கும் படம் அல்லது ஓவியத்தையும் வீட்டில் வைக்கக்கூடாது. இது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலையும், துரதிர்ஷ்டத்தையும் நிரப்பும்.



Click it and Unblock the Notifications

