Latest Updates
-
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும்
இந்த 7 வடிவத்தில் உங்க நகம் எந்த வடிவத்தில் இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்!
நம் உடலில் நாம் பெரிதாக கவனிக்காத ஒரு பாகம் எதுவென்றால் அது நகம்தான். நகத்தை வெட்டும் போது மட்டும்தான் நாம் அதனை கவனிக்கிறோம், மற்ற சமயங்களில் அதனை நாம் கவனிப்பதே இல்லை. ஆனால் உண்மையில் நகம் நம்மைப் பற்றிய பல ஆரோக்கிய ரகசியங்களை வெளிப்படுத்துவதோடு, ஆளுமைப் பற்றிய உண்மைகளையும் வெளிப்படுத்தும்.
நாம் நினைப்பது போல நகத்தின் வடிவம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்திலான நகத்தைக் கொண்டுள்ளார்கள். உங்கள் நகத்தின் வடிவம் மற்றும் நிறம் உங்களைப் பற்றி உங்களுக்கேத் தெரியாத பல ரகசியங்களை கூறும். இந்த பதிவில் நகத்தின் வடிவம் உங்களைப் பற்றி கூறும் ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

செங்குத்தாக நீளமாக இருக்கும் நகம்
உங்களுக்கு இந்த வடிவ நகம் இருந்தால், உங்கள் வலது மூளை நன்றாக செயல்படலாம், மேலும் நீங்கள் மிகவும் கற்பனை திறன் கொண்டவர். நீங்கள் அனைத்து விஷயத்திலும் உன்னிப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படக்கூடியவர்களாக இருப்பீர்கள், எனவே நீங்கள் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அகலமான நகம்
உங்கள் இடது மூளை மிகவும் நன்றாக வேலை செய்யலாம், மேலும் நீங்கள் மிகவும் பேச்சாற்றல் மிக்கவராக இருப்பீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள், மேலும் நீங்கள் நேர்மையானவர் மற்றும் தெளிவானவர் என்ற எண்ணத்தை மக்களுக்குத் தருகிறது. இருப்பினும், நீங்கள் பொறுமையற்றவராகவும், குறுகிய மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பீர்கள், எனவே சில சமயங்களில் கொஞ்சம் சுயக்கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது. அவர்கள் மூளை சொல்வதை விட தங்கள் இதயங்கள் சொல்வதை அதிகம் கேட்கும் நபர்களாக இருப்பார்கள்.
வட்டமான அல்லது முட்டை வடிவ நகம்
நீங்கள் விரும்பிய வழியில் அனைத்து விஷயங்களையும் செய்யும் மகிழ்ச்சியான அதிர்ஷ்டசாலி நீங்கள். நீங்கள் மிகவும் நேசமானவர், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் போதெல்லாம், நீங்கள் எப்போதும் அவர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பிரகாசமான ஆளுமை பலரால் விரும்பப்படுகிறது, ஆனால் நீங்கள் மிகவும் அலட்சியமான நபர் என்று மற்றவர்கள் நினைக்கலாம். எனவே உங்கள் நண்பர்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சதுர வடிவ நகம்
நீங்கள் இந்த வடிவ நகம் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் விடாமுயற்சியும், தைரியமும் கொண்டவர். பல ஆண்கள் இந்த வகையின் கீழ் வருவார்கள். உங்கள் சீரியஸான குணம் ஒரு நல்ல விஷயம், ஆனால் உங்களின் கடினமான தன்மை மற்றும் எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மை உங்களின் குறைபாடுகளாக இருக்கும். உங்களின் பிடிவாதத்தை குறைத்துக் கொண்டால் நீங்கள் அனைவருக்கும் பிடிவாதமானவர்களாக இருப்பீர்கள்.
முக்கோண நகம்
நீங்கள் முக்கோண வடிவ நகம் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் எப்போதும் புதியதாக சிந்திப்பீர்கள், மற்றவர்கள் தவறவிடுகிற விஷயங்களை நன்றாக கவனிப்பவர்கள். தலைகீழ் முக்கோண நகத்தைக் கொண்டவர்கள் கொஞ்சம் அழுத்தமானவராக இருக்கலாம், அதே சமயம் நிமிர்ந்த முக்கோண வகைகள் அதிக உணர்திறன் கொண்டவர்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ள அலட்சியமான நபர்களை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
பாதாம் வடிவ நகம்
இந்த வடிவ நகத்தைக் கொண்டவர்கள் வலிமையான கற்பனைத்திறனைக் கொண்டவர்கள். நீங்கள் அன்பாகவும் எப்போதும் மக்களுடன் நேர்மையாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் கண்ணியமாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறீர்கள், ஆனால் குறைவான பொறுமைக் கொண்டவர்கள், மேலும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டிர்கள்.
கத்தி வடிவ கூர்மையான நகம்
உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கத் தயங்காத வகை நீங்கள். அது உங்கள் இலட்சியங்களை நோக்கி முன்னேற உதவும் ஒன்றாக இருக்கும் வரை, நீங்கள் விரும்பாத ஒன்றாக இருந்தாலும் அதைச் செய்வீர்கள். இருப்பினும், நீங்கள் ஒத்துழைப்பதில் கொஞ்சம் கடினமானவர்களாக இருக்கிறீர்கள். மிகவும் மெதுவாக செயல்படும் மற்றும் புதிதாக பழகுபவர்களுடன் பழகும்போது நீங்கள் பொறுமையிழந்து விடுவீர்கள்.



Click it and Unblock the Notifications
