Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த 3 வகை கழுத்தில் உங்களோடது எந்த வகைனு சொல்லுங்க? உங்களுக்குள் இருக்கும் ரகசியத்தை நாங்க சொல்றோம்..!
தங்களுடைய ஆளுமை என்ன தங்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். ஆளுமை சோதனைகள் உங்களைப் பற்றி ரகசியங்கள், உங்கள் விருப்பு வெறுப்புகள், உங்களின் எண்ணங்கள், உங்கள் உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் உங்கள் புத்திசாலித்தனம் போன்றவற்றை கண்டறியும் ஒரு சிறந்த கருவியாகும்.
இந்த சோதனைகள் உங்கள் உளவியல் மற்றும் உணர்ச்சி மற்றும் பகுத்தறிவு சிந்தனை செயல்முறைகளை ஆழமாக ஆராய அறிவியல்ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்களைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்வதும் உண்மையாக இருப்பதும் வெற்றிக்கு இன்றியமையாதது. பெரும்பாலும் நாம் என்ன செய்கிறோம் என்பதை விட, நமது ஆர்வம் என்ன, என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் நம்மை பற்றி ரகசியங்களையும், ஆளுமையைப் பற்றியும் தெரியப்படுத்தும். நமது கை, விரல், மூக்கு மற்றும் கண்கள் போல நமது கழுத்தின் வடிவமும் நம்முடைய ஆளுமையைப் பற்றி பல ரகசியங்களை வெளிப்படுத்தும்.
நீளமான கழுத்து உள்ளவர்களின் ஆளுமை
நீளமான கழுத்து கொண்டவர்கள் ஒரு தன்னிச்சையான ஆளுமை கொண்டவர்கள். அவர்கள் பொதுவாக தங்கள் சொந்த தேவைகளை கவனித்துக்கொள்வதில் 'தன்னால் முடியும்' என்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேறு யாரையும் சார்ந்திருப்பதை விரும்புவதில்லை. அவர்கள் யாரிடமும் எளிதில் உதவி கேட்க மாட்டார்கள். அவர்கள் எதையும் தனியாக சமாளிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று வெகுசிலர் மட்டுமே இருப்பார்கள், அவர்களின் சமூக வட்டம் மிகவும் சிறியதாகும்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் காதல் உட்பட அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.அவர்கள் தங்கள் துணைக்கென எல்லைகளை அமைத்து அதற்குள் இருக்க அறிவுறுத்துவார்கள். அவர்கள் புதிய வாய்ப்புகளை அரிதாகவே பெறுவார்கள், அதற்கு காரணம் அவர்களின் வெளிப்படையற்ற மனநிலைதான்.
நடுத்தரமான கழுத்து உள்ளவர்களின் ஆளுமை
நடுத்தர நீளமான கழுத்து கொண்டவர்கள் ஒரு நடுநிலையான ஆளுமை கொண்டவர்கள். அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சமநிலையை வைத்திருக்க விரும்புகிறார்கள். கடினமான சூழ்நிலைகளைக் கையாள்வதிலும், மோதல்களைத் தீர்ப்பதிலும் அவர்கள் சிறந்தவராக இருக்கலாம். அனைத்து தருணங்களிலும் அமைதியை பராமரிப்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.
குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் கூட, அவர்கள் மிகவும் தீவிரமான சூடான விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்கள். ஒரு ஆக்கப்பூர்வமான முடிவை அடைய ஒரு பிரச்சினையை விவாதிப்பதை நீங்கள் காணலாம். அவர்கள் பொதுவாக நேரடியானவர் மற்றும் தங்களுக்கான நேரத்தை பெறுவதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.
மற்றவர்களிடம் உதவி கேட்க அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். எங்கே, எப்போது, எப்படி பேச வேண்டும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களால் ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாத போது அவர்கள் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள்.
குறுகிய கழுத்து கொண்டவர்களின் ஆளுமை
குட்டையான கழுத்து கொண்டவர்கள் நேர்மை, அக்கறை, விசுவாசம் மற்றும் உதவிகரம் போன்ற ஆளுமைப் பண்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் நீண்ட காலத்திற்கு நம்பகமான மற்றும் உறுதியான நபர்களாக இருப்பார்கள். அனைத்து கடினமான சூழ்நிலைகளிலும் தங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பார்கள். மோசமான காலங்களில் துணையாக இருப்பார்கள்.
அவர்கள் எளிதாக நண்பர்களையோ உறவுகளையோ உருவாக்க மாட்டார்கள், ஆனால் அவ்வாறு செய்து விட்டால், அவர்கள் முழு மனதுடன் அதில் இருப்பார்கள். சில சமயங்களில், எல்லோரிடமும் பழகும் போது அவர்கள் தங்களைப் பற்றி சிந்திப்பதையே மறந்து விடுவார்கள். அனைவருக்கும் ஆதரவாக இருப்பதையே தங்களின் இலட்சியமாக கொண்டிருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
