Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
கனவில் பேயை பார்ப்பது நல்லதா? கனவில் பேயை பார்ப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? ஷாக் ஆகாதீங்க...!
கனவுகள் எப்போதுமே நமக்கு மிகவும் ஸ்பெஷலானவைதான். சில நல்ல கனவுகள் நமக்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடும். நாம் நிஜ உலகில் வாழ முடியாத மகிழ்ச்சியான மற்றும் சாகசங்கள் நிறைந்த வாழ்வை கனவில் வாழக்கூடும். ஆனால் அனைத்து கனவுகளுமே மகிழ்ச்சியான கனவுகளாக இருக்குமென்று கூற முடியாது.
சில கனவுகள் நாம் வெறுக்கும் விஷயங்களையும், மிகவும் பயப்படும் விஷயங்களையும் கண் முன் நிறுத்துவதாக இருக்கும். அதில் மிகவும் முக்கியமான ஒன்று கனவில் பேய் வருவது. அதிலும் பேயை நினைத்து பயப்படுவர்களுக்கு இது மிகவும் மோசமான அனுபவமாக இருக்கும்.

நீங்கள் சமீபத்தில் உங்கள் கனவில் பேயை கண்டீர்களா? இது உங்களை பயமுறுத்துவதாக இருந்தாலும் நீங்கள் அதனை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் கனவு சாஸ்திரம் கனவில் பேயைப் பார்த்து அஞ்ச வேண்டியதில்லை என்று கூறுகிறது, எனவே பீதி அடைய வேண்டாம். ஆவி தொடர்பான கனவுகள் மிகவும் பொதுவானவை மற்றும் உங்களை தொந்தரவு செய்யக்கூடிய சில சிக்கல்களை அவை குறிப்பிடுகின்றன. கனவுகளில் பேய்களைப் பார்ப்பதன் அர்த்தம் மற்றும் அத்தகைய கனவுகள் எதைக் குறிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
கனவில் பேய்களைப் பார்ப்பதன் ஆன்மீக அர்த்தம்
பேய் கனவுகள் எப்போதாவது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம், அது உங்களுக்கு தெரிந்ததாகவோ அல்லது தெரியாததாகவோ இருக்கலாம். கனவில் வரும் பேய்கள் நீங்கள் மரணம் பற்றி கவலைப்படுகிறீர்கள் மற்றும் பயப்படுகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் ஆழ்மனது உங்கள் கனவில் ஒரு பேயைக் காட்டுவதன் உங்களின் நோய் பற்றி எச்சரிக்க முயற்சி செய்யலாம். இதற்கான பிற அர்த்தங்கள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
குற்ற உணர்வு மற்றும் வருத்தம்
நீங்கள் கடந்த காலத்தில் செய்த செயலுக்காகவோ அல்லது பேசிய வார்த்தைகளுக்காக வருந்துகிறீர்களா, ஆனால் அதனை வெளியே சொல்லாமல் இருக்கிறீர்களா? பேய் கனவுகள் உங்கள் எண்ணங்களைத் தொடர்ந்து கடந்த கால தவறுகளுக்கு வருத்தம் அல்லது உங்களின் குற்ற உணர்வைக் குறிக்கலாம். ஆன்மாக்கள் நீங்கள் நிஜத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.
கடந்த காலத்தில் சிக்கியிருத்தல்
பேய் கனவுகள் கடந்த காலத்தை விட்டுவிடுவதற்கான நேரம் என்ற செய்தியை அடிக்கடி தெரிவிக்கின்றன. தேவையான திருத்தங்களைச் செய்த பிறகு உங்களுடனும் மற்றவர்களுடனும் சமரசம் செய்யுங்கள். கடந்த கால தவறுகள் மற்றும் வருத்தங்களில் இருந்து நீங்கள் எவ்வளவு விரைவாக வெளிவருகிறீர்களோ, அவ்வளவு விரைவாக பேய் கனவுகள் மறைந்துவிடும்.
பிடித்தவர்களை இழந்த துக்கம்
ஒருவேளை நீங்கள் சமீபத்தில் இழந்த உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவருக்காக ஏங்குகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். பேய் கனவுகள் திருத்தம் செய்ய அல்லது விடைபெறுவதற்கான உங்கள் விருப்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். உங்கள் இழப்பைச் சமாளிக்கவும், அதிலிருந்து வெளிவருவதற்கான அவசியத்தையும் உங்கள் மனம் பேய் கனவுகள் மூலம் வெளிப்படுத்தலாம்.
நோக்கம் இல்லாமல் இருப்பது
நீங்கள் தோற்றுவிட்டதாக உணர்கிறீர்களா அல்லது வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இல்லை என்று நினைக்கிறீர்களா? இந்த சூழலில் நீங்கள் பேயை பற்றிய கனவு கண்டால், நீங்கள் ஊக்கமில்லாமல் அல்லது கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆவிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவோ அல்லது கையாள முடியாததாகவோ தோன்றும் அம்சங்களைக் குறிக்கின்றன. உங்கள் கொள்கைகள் மற்றும் உங்களுக்கு வழிகாட்டும் உணர்வை வழங்கும் விஷயங்களுடன் உங்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான வழிகளைத் தேடுங்கள்.



Click it and Unblock the Notifications
