Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்னெ தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!' -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
ஆடி மாத ராசிபலன் 2026: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும்
உங்க கையில் இந்த ஆங்கில எழுத்தின் அடையாளம் இருந்தால் நீங்க ஆளப்பிறந்தவர்களாக இருப்பீர்களாம்...!
கைரேகை என்பது எப்போதும் நமக்குள் சுவாரஸ்யத்தை தூண்டும் ஒரு விஷயமாகும். நம் கையில் இருக்கும் அனைத்து ரேகைகள் மற்றும் கோடுகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சில அரிதான சந்தர்ப்பங்களில் நமது கைகளில் சில எழுத்துக்களின் அடையாளங்கள் இருக்கும். அதில் முக்கியமான ஒரு எழுத்து M.
உங்கள் கையிலிருக்கும் 'எம்' வடிவ சின்னத்தை கவனித்திருக்கிறீர்களா? இது ஒரு சீரற்ற மடிப்பு போல் தோன்றலாம், ஆனால் இந்த மர்மமான சின்னம் பல முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. உங்கள் கையிலிருக்கும் M வடிவ சின்னத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

'M' சின்னத்தின் ரகசியம்
M வடிவ சின்னம் 'சிமியன் கோடு' அல்லது 'பணக் கோடு' என்று குறிப்பிடப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த வித்தியாசமான அடையாளமானது உள்ளங்கையில் பல்வேறு வடிவங்களிலும் இடங்களிலும் அடிக்கடி தோன்றும். அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள, முதலில் 'M' அடையாளத்தின் பல்வேறு மாறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
'M' அடையாளங்களின் வகைகள்
கிளாசிக் 'M' சின்னம்
மிகவும் பொதுவான 'M' அடையாளம் மூன்று கோடுகள் வெட்டுவதால், உள்ளங்கையின் மையத்தில் ஒரு 'M' வடிவத்தை உருவாக்குகிறது. இது கிளாசிக் 'M' அடையாளம், மேலும் இது செல்வம் மற்றும் நிதி வெற்றிக்கான ஒரு நபரின் திறனைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது.
தலைகீழான 'M' சின்னம்
சில சமயங்களில், 'M' அடையாளம் தலைகீழான 'M' ஆகத் தோன்றுகிறது. இந்த வகை M உள்ளவர்கள் வாழ்க்கையில் நிதி சவால்கள் அல்லது பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கிறது.
உடைந்த 'M' சின்னம்
மற்றொரு வகை, ஒரு வரியில் குறுக்கீடு கொண்ட 'M' அடையாளம். இது நிதி வெற்றியை அடைவதில் தடைகள் அல்லது ஒருவரின் வாழ்க்கைப் பாதையில் மாற்றத்தைக் குறிக்கலாம்.
உங்கள் 'M' அடையாளம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?
உங்கள் உள்ளங்கையில் உள்ள 'M' அடையாளம் இருக்கும் நிலையும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது இதயக் கோடு, தலைக் கோடு அல்லது வாழ்க்கைக் கோட்டில் தோன்றலாம். M சின்னம் இருக்கும் நிலையைப் பொறுத்து அதன் அர்த்தம் என்னவென்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.
இதய ரேகையில் 'M'
இதய ரேகையில் 'M' அடையாளம் தோன்றினால், அது காதலுக்கும் பணத்துக்கும் இடையே வலுவான தொடர்பைக் குறிக்கிறது. இந்த நபர் உணர்ச்சி மற்றும் அன்பான உறவுகள் மூலம் வெற்றியைக் காணலாம்.
தலைமை ரேகையில் 'M'
'M' அடையாளம் தலைமை ரேகையில் இருந்தால், அது நிதி விஷயங்களில் புத்திசாலித்தனத்தையும் ஞானத்தையும் குறிக்கிறது. இந்த நபர்கள் நல்ல நிதி முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.
ஆயுள் ரேகையில் 'M'
ஆயுள் ரேகையில் இருக்கும் 'M' அடையாளம் சமநிலையான மற்றும் வளமான வாழ்க்கையை சுட்டிக்காட்டுகிறது. இது நல்ல ஆரோக்கியம் மற்றும் இணக்கமான திருமண வாழ்க்கையைக் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
