Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
உங்க கை பெருவிரலில் இந்த மாதிரி இருக்கா? அப்ப நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்...
Phoenix Eye On Your Thumb In Tamil: ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூறும் பல ஜோதிட முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஒருவரது கையில் உள்ள ரேகைகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்து கூறும் கைரேகை ஜோதிடம். நமது கைகளானது நிறைய ஆன்மீக மற்றும் குறியீட்டு அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. கைகளின் வடிவம், அமைப்பு, கைகளில் உள்ள அடையாளங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
கைரேகையானது ஒருவரது வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் புரிந்து கொள்ள உதவுகிறது. நிறைய பேர் இதை மூடநம்பிக்கையாக நினைக்கலாம். ஆனால் கையில் உள்ள ரேகைகளானது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருக்கும். அதனால் தான் கைரேகை ஒருவரது தனிமனித அடையாளமாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட கையின் பெருவிரலில் 'பீனிக்ஸ் கண்' என்று அழைக்கப்படும் ஒரு அரிய வடிவம் உள்ளது என்பது தெரியுமா? இந்த பீனிக்ஸ் கண்ணை ஒடினின் கண் என்றும் அழைப்பர். இந்த பீனிக்ஸ் கண் அடையாளம் கட்டை விரலில் இருக்கும். அதுவும் இந்த அடையாளமானது இரண்டு கோடுகள் ஒன்றாக வந்து கண் போன்ற வடிவத்தில் காணப்படும்.
இந்த பீனிக்ஸ் கண் அடையாளம் அனைவரிடத்திலும் இருக்காது. அதிர்ஷ்டசாலிகளின் கையில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. சொல்லப்போனால் இந்த அடையாளத்தைக் கொண்டிருப்பவரிடம் ஒருசில சக்திகள் அல்லது ஸ்பெஷலான விஷயம் இருக்குமாம். இப்போது அது என்னவென்பதைக் காண்போம்.
செழிப்பான வாழ்க்கை
கையின் பெருவிரலில் பீனிக்ஸ் கண் அடையாளத்தைக் கொண்டிருப்பவர்கள் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களிடம் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது. இவர்களிடம் பணம் அதிகம் சேரும்.
அதிக உள்ளுணர்வு
பீனிக்ஸ் கண் அடையாளத்தைக் கொண்டிருப்பவர்கள் அதிக அளவிலான உள்ளுணர்வைக் கொண்டிருப்பார்கள். அதாவது அவர்களுக்கு நடக்கப் போவதை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் இருக்கும். தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருப்பார்கள் மற்றும் தெய்வீக வழிகாட்டுதலை அதிகம் நம்புவார்கள்.
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
கை பெருவிரலில் பீனிக்ஸ் கண் அடையாளத்தைக் கொண்ட நபர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த அடையாளத்தைக் கொண்டவர்கள் தங்கள் துணையை கச்சிதமாக தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
மிகவும் புத்திசாலி
கட்டைவிரலில் பீனிக்ஸ் கண் அடையாளத்தைக் கொண்டிருப்பவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் உயர்ந்த அறிவாற்றல் வாழ்க்கையில் இவர்கள் விரும்பும் அனைத்தையும் அடைய உதவும்.
நல்ல ஆரோக்கியம்
கை பெருவிரலில் உள்ள பீனிக்ஸ் கண் அடையாளம் உடையாமல் திடமான கோடுகளுடன் இருந்தால், அந்நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியமான உடலுடன், சிறப்பாக செயல்படுவார்கள். ஒருவேளை கோடு உடைந்தால், அந்நபரின் ஆரோக்கியம் மோசமாக இருக்கும். விரைவில் உடல் பலவீனமாகிவிடும்.



Click it and Unblock the Notifications