Latest Updates
-
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம்
பட்டாசு வாங்க போறீங்களா? அப்ப இந்த மாதிரியான பட்டாசை பார்த்து செக் பண்ணி வாங்குங்க..
Green Crackers In Tamil: இந்தியாவில் இந்துக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. தீப ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகை வரப் போகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்களின் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்துக் கொண்டிருப்போம். அதோடு புதிய ஆடைகளை வாங்க பல கடைகளை ஏறி இறங்குவோம். முக்கியமாக பட்டாசுகளை வாங்குவோம். பட்டாசுகளின்றி தீபாவளி முழுமையடையாது.
ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையன்று வெடிக்கும் பட்டாசுகளால் நிலைமை இன்னும் மோசமாகும். இப்படி மாசடைந்த காற்றினை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனையால் சிரமப்பட வேண்டியிருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் நிறைய பேர் தீபாவளி நாளில் பட்டாசுகளை வெடிக்க பிடித்தும், அவற்றை வெடிக்காமல் உள்ளனர்.

ஆனால் சுற்றுச்சூழல் அதிகம் மாசடையாமலும், ஒலி மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும் பசுமை பட்டாசுகள் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் விற்கப்படுகின்றன என்பது தெரியுமா? இந்த பசுமை பட்டாசுகள் அதிக ஒலியை எழுப்பாது மற்றும் காற்றினை அதிகமாக மாசுபடுத்தாது. நீங்கள் சுற்றுச்சூழல் விரும்பியாக இருந்தால், இந்த மாதிரியான பட்டாசுகளை வாங்கி வெடித்து தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
சரி, பசுமை பட்டாசுகள் எப்படி இருக்கும், அந்த பசுமை பட்டாசுகளில் எந்த மாதிரியான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, பசுமை பட்டாசுகளை எப்படி கண்டறிவது என்பன போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் இருக்கும். இப்போது அவற்றிற்கான விடைகளைக் காண்போம்.
பசுமை பட்டாசுகள் என்றால் என்ன?
பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. ஏனெனில் இவை குறைவாக மாசுப்படுத்தும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வழக்கமான பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது, இந்த பசுமை பட்டாசுகள் குறைவாகவே மாசுபாட்டை ஏற்படுத்தும். இந்த பசுமை பட்டாசுகளில் பேரியம் போன்ற பொருட்கள் இல்லை. இதுவே இதற்கு பச்சை நிறத்தை அளிக்கிறது. பேரியம் என்பது ஒரு உலோக ஆக்ஸைடு. இது காற்றை மாசுபடுத்தும் மற்றும் அதிக ஒலியை உண்டாக்கும்.
பச்சை பட்டாசுகளை வெடிக்கும் போது, அது நீராவியை வெளியிடுகிறது. இதன் விளைவாக தூசியின் அளவு குறைகிறது. மேலும் வழக்கமான பட்டாசுகள் 160 டெசிபல் ஒலியை உருவாக்குகின்றன. ஆனால் பசுமை பட்டாசுகள் 110 முதல் 125 டெசிபல் ஒலியையே உருவாக்குகின்றன. அதாவது வழக்கமான பட்டாசுகளை விட 30 சதவீதம் குறைவான ஒலியை உருவாக்குகின்றன.
பசுமை பட்டாசுகள் எப்படி கண்டறிவது?
பசுமை பட்டாசுகளின் பாக்கெட்டில் பச்சை நிறத்தில் CSIR-NEERI மற்றும் PESO லோகோ மற்றும் அவற்றின் QR குறியீடுகளைக் கொண்டிருக்கும். இவற்றைக் கொண்டு எளிதில் கண்டறியலாம். மேலும் பசுமை பட்டாசுகளில் மூன்று வகைகள் உள்ளன. அவை:
1. SWAS - இது தூசியைக் குறைக்க வெடிக்கும் போது நீராவியை வெளியிடும். மேலும் இது 30 சதவீதத்திற்கும் குறைவான அளவில் துகள்களை வெளியிடும் மற்றும் இதில் சல்பர் அல்லது பொட்டாசியம் நைட்ரேட் போன்ற எதுவும் இருக்காது.
2. STAR - இதில் பொட்டாசியம் நைட்ரேட் அல்லது சல்பர் போன்றவை இல்லை. அதோடு இது குறைவான துகள்களை வெளியிடுகிறது மற்றும் இது வெளியிடும் சப்தமும் குறைவாகவே இருக்கும்.
3. SAFAL - இதில் 50 முதல் 60 சதவீதத்திற்கும் குறைவாக அலுமினியமும், மக்னீசியம் அதிகமாகவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இது வழக்கமான பட்டாசுகுளை விட குறைவான அளவிலேயே ஒலியை உருவாக்கும்.



Click it and Unblock the Notifications