உங்க ராசியை சொல்லுங்க.. உங்களுக்கு எந்த வயசுல அதிர்ஷ்ட கதவு திறக்கும்-ன்னு சொல்றோம்..

வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண ஒவ்வொருவரும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி கஷ்டப்பட்டு வேலை செய்யும் அனைவருக்குமே உடனே அதற்கான பலன் கிடைத்துவிடுவதில்லை. ஒருசிலருக்கு உடனே நல்ல பலன் கிடைத்துவிடலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு அப்படி கிடைப்பதில்லை. இதற்கு கிரக நிலைகளும், ஒருவரது ராசியும் தான் காரணம்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது அதிர்ஷ்டமானது அந்நபரின் ராசியைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது. நீங்கள் உங்கள் ராசிப்படி எந்த வயதில் உங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

What Age Your Luck Will Shine As Per Zodiac Signs In Tamil

மேஷம்

ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசிக்காரர்களுக்கு 16 வயதில் முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதன் பின் 22 வயதில் அதிர்ஷ்டமானது பிரகாசிக்கும். மூன்றாவதாக 28 வயதில் பிரகாசிக்கும். இந்த வயதுகளில் முன்னேற்றத்தைக் காண முயற்சிகளை மேற்கொள்ளத் தவறினால், 32 மற்றும் 36 வயதில் அதிர்ஷ்ட கதவு திறக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமானது 25 வயதில் பிரகாசிக்கும். இந்த வயதில் இவர்கள் எந்த ஒரு முயற்சிகளை மேற்கொண்டாலும் வெற்றி பெறுவார்கள். அதன் பின் 28, 36 மற்றும் 42 வயதுகளில் அதிர்ஷ்ட கதவு தட்டும்.

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்களுக்கு 22 வயதில் முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதன் பின் 32 வயதிலும், அதற்கு அடுத்ததாக 35, 36 மற்றும் 42 வயதுகளில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் 16, 22, 24, 25 மற்றும் 28 ஆகிய வயதுகளில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வாழ்வில் நிறைய முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் இவர்களது வாழ்க்கையின் இரண்டாவது பாதி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசியைச் சேர்ந்தவர்களுக்கு முதலில் 22 வயதில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். அதன் பின் 28 மற்றும் 32 வயதுகளில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இருப்பினும் 25 வயதில் இருந்தே இவர்களுக்கு வாழ்க்கையில் பல சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். தங்களின் திறனை இவர்கள் முழுமையாக பயன்படுத்தினால், வாழ்க்கையில் நினைத்துப் பார்த்திராத அளவில் உயரத்தை அடைவார்கள்.

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசியைச் சேர்ந்தவர்களுக்கு 32 வயதில் தான் முதல் அதிர்ஷ்டம் அடிக்கும். ஆனால் அதற்கு முன் 16, 22, 25 ஆகிய வயதுகளில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். கடைசியாக இவர்களுக்கு 36 வயதில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இதைப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறலாம்.

துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்களுக்கு 17 மற்றும் 22 வயதுகளில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் சிறப்பான பலனைப் பெறுவார்கள். கூடுதலாக இவர்களுக்கு 32, 33, 35 ஆகிய வயதுகளிலும் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களைக் காண்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்களுக்கு 28 வயதில் எதிர்பாராத அளவில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் கூரையை பிய்த்துக் கொண்டு வாழ்க்கையில் பண மழை பொழியும். கூடுதலாக இவர்களுக்கு 22, 24, 32 ஆகிய வயதுகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் 16 மற்றும் 38 வயதுகளில் நினைத்துப் பார்க்காத அளவில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வாழ்வில் முன்னற்றத்தைக் காண்பார்கள். கூடுதலாக இவர்களுக்கு 22, 32 வயதுகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். மேலும் 28 முதல் 35 மற்றும் 42 முதல் 49 வயதுகளில் வாழ்க்கை சாதகமாக இருக்கும். மொத்தத்தில் 57 வயதிற்குள் இவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆனால் அதற்கு மேல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சவால்களை சந்திக்க நேரிடும்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசியைச் சேர்ந்தவர்களுக்கு 23 மற்றும் 24 வயதுகளில் முதன்முதலா அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதன் பின் 35 மற்றும் 36 வயதுகளில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வெற்றியையும், வளர்ச்சியையும் காண்பார்கள்.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்களுக்கு 33 மற்றும் 36 வயதில் தான் அதிரஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். மேலும் 28, 25 மற்றும் 42 ஆகிய வயதுகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

மீனம்

மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசியைச் சேர்ந்தவர்களுக்கு 16, 22, 28 மற்றும் 33 ஆகிய வயதுகளில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்படும். முக்கியமாக 18 மற்றும் 23 வயதுகளில் குறிப்பிடத்தக்க நற்பலன்களைப் பெறுவார்கள். இந்த வயதுகளில் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுத்தால், நிச்சயம் நல்ல பலனைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, November 11, 2023, 17:45 [IST]
Desktop Bottom Promotion