Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வினோதமான அலுவலக கலாச்சாரம் உலக நாடுகள்... ஆபிஸில் என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்க...!
ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென தனித்துவமான அலுவலக நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளில் சில வித்தியாசமானவை மற்றும் உலகின் சில பகுதிகளில் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென தனித்துவமான அலுவலக நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளில் சில வித்தியாசமானவை மற்றும் உலகின் சில பகுதிகளில் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம், ஆனால் ஒரு வணிகம் வெற்றிபெறுவதற்கு அவை முற்றிலும் அவசியமானவையாக இருக்கலாம்.

உலகமயமாக்கல் முன்னேறும்போது, பல்வேறு வகையான வேலை கலாச்சாரங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. உலகமயமாக்கல் கலாச்சாரங்களுக்கிடையில் அதிக தொடர்புகளுக்கு வழிவகுப்பதால், பிற நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது அந்த நாட்டின் அலுவலக கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் விசித்திரமான அலுவலக கலாச்சாரங்களைப் பற்றி பார்க்கலாம்.

இஸ்ரேல்
இஸ்ரேலில் வேலை வாரம் ஞாயிறு - வியாழன் வரை இயங்குகிறது, இதனால் குடிமக்கள் யூதர்களின் புனித நாளான சப்பாத்தை வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்தில் இருந்து சனிக்கிழமை மாலை வரை சுதந்திரமாக அனுசரிக்கலாம். இஸ்ரேலிய வேலை வாரம் 43 மணிநேரம் ஆகும். தொழில்நுட்பம் போன்ற சில இஸ்ரேலிய தொழில்களில் உள்ள வல்லுநர்கள் தங்கள் சர்வதேச சகாக்களுடன் தொடர்பில் இருக்க மேற்கத்திய அட்டவணையை ஏற்றுக்கொண்டனர், ஆனால் இது பொதுவாக விதிக்கு மாறாக விதிவிலக்காகும்.

பிரான்ஸ்
பிரெஞ்சுத் தொழிலாளர்கள் வேலை உரிமைச் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள், இது வேலை நேரங்களுக்குப் பிறகு வரும் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்க பிரெஞ்சு பணியாளர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அதிக வேலைப்பளுவில் இருந்து ஊழியர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது அமெரிக்காவில் மட்டுமே நாம் கனவு காணக்கூடிய ஒன்று, ஆனால் பிரான்சில், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை உறுதிப்படுத்த இது அவசியமான வழிமுறையாக கருதப்படுகிறது.

ஜப்பான்
ரேடியோ டைசோ என்பது ஜப்பானில் பொதுவாக பின்பற்றப்படும் 15 நிமிட உடற்பயிற்சி முறையாகும். ஜப்பானின் தேசிய வானொலியில் (NHK) நாள் முழுவதும் வொர்க்அவுட்டுடன் வரும் ஸ்டெப்ஸ் மற்றும் இசை ஒலிபரப்பப்படுவதால் இது அதன் பெயரைப் பெற்றது. பல நிறுவனங்களின் ஊழியர்கள் ஒவ்வொரு காலையிலும் ஒரு குழுவாக ரேடியோ டைசோவைச் செய்கிறார்கள். மன உறுதியை வளர்க்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், குழு உறுப்பினர்களிடையே ஒற்றுமை உணர்வை உருவாக்கவும் ஒன்றாக உடற்பயிற்சி செய்ய நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கின்றன.

ஐஸ்லாந்து
கர்ப்பகால விடுமுறையில் இங்கு பாலின சமத்துவம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு ஐஸ்லாந்து தம்பதிகள் பெற்றோராகும் போது ஒவ்வொரு பெற்றோருக்கும் மூன்று மாதங்கள் பெற்றோர் விடுப்பு கிடைக்கும். பின்னர் தம்பதியருக்கு பகிர்ந்து கொள்ள கூடுதலாக மூன்று மாதங்கள் விடுமுறை கிடைக்கும். ஒவ்வொரு பெற்றோரும் விடுமுறையில் இருக்கும்போது தனது சம்பளத்தில் 80 சதவீதத்தை பெறுகிறார்கள். குழந்தை பராமரிப்பு திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் குழந்தையுடன் பிணைப்பை உருவாக்கவதற்கும் பெற்றோர் இருவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வணிக நடைமுறையில் கடவுள் நம்பிக்கை மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுக்கு மரியாதைக்குரிய இடம் உள்ளது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அல்லது எந்த முஸ்லீம் நாட்டிலும் வணிகம் செய்யும் போது, பிரார்த்தனை நேரங்கள் கட்டாயம் மதிக்கப்பட வேண்டும். பிரார்த்தனை நேரத்தில் எந்தவித மீட்டிங்கோ, வேலையோ இருக்காது.

அயர்லாந்து
அயர்லாந்து வேலை நேரத்திற்கு பிறகு பிறகு வேலையிலிருந்து துண்டிக்கப்படுவதை உறுதி செய்கிறது. வேலை நேரத்திற்குப் பிறகு ஆஃப்லைனில் இருக்க ஊழியர்களுக்கு உரிமை உண்டு, வேலை நேரத்திற்கு பிறகு வேலை கொடுத்தால் முதலாளிகள் தண்டிக்கப்படலாம்.



Click it and Unblock the Notifications