Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சீன மக்களிடம் உள்ள சில விசித்திரமான பழக்கவழக்கங்கள்!
Weird Chinese Traditions: சீன பழமையின் தலைநகரமாக கருதப்படுகிறது. சீன மக்கள் எப்பொழுதும் வித்தியாசமான கலாச்சாரங்களை பின்பற்றக் கூடியவர்கள். இயற்கை காட்சிகள், பல ஆண்டு மரபுகள், தொழில் நுட்பம் என பல விஷயங்கள் சீனாவில் பொதிந்து கிடக்கிறது.
அதிக மக்கள் தொகைக் கொண்ட சீன நகரத்தில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை தவறாமல் செய்கின்றனர். அந்த வகையில் சீனர்கள் பின்பற்றும் சில முக்கியமான பழக்க வழக்கங்களை பற்றித் தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

இறந்தவர்களை திருமணம் செய்தல்
இறந்தவர்களை திருமணம் செய்தல் என்பது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. அதிலும் சீனர்கள் இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். சிலர் இறுதிச் சடங்கின் போது சடங்கில் தங்கள் திருமணத்தையும் செய்து கொள்கின்றனர். சீன மக்களிடையே இந்த வித்தியாசமான வழக்க முறை உள்ளது.
ஃபேஸ்கினிஸ்
சீனர்கள் வெள்ளையாக இருப்பதை விரும்பக் கூடியவர்கள். எவ்வளவு வெள்ளையாக இருக்கிறோமோ அவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று நினைக்கக் கூடியவர்கள். எனவே தான் மோசமான வெயிலில் இருந்து தங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள நிறைய அழகு பராமரிப்பு முறைகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். இதில் ஃபேஸ்கினிஸ் என்பது தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள செய்யும் முறையாகும்.
உடல் செயல்பாடுகள்
"உள்ளத்தை விட உடல் செயல்பாடுகள் சிறந்தது" என்று சீன பழமொழி கூறுகிறது. சீனர்கள் burping, spitting, and breaking wind போன்ற செயல்பாடுகளை செய்யக் கூடியவர்கள். அது அவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடும் என நினைக்கின்றனர்.
ஆர்ப்பாட்டம் இல்லாத குடும்பங்கள்
குடும்பத்தில் அவர்கள் தங்கள் அன்பைக் காட்ட ஆடம்பரத்தை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக குடும்ப நபர்களுக்கிடையே பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். கட்டுப்பிடிப்பது, முத்தமிடுவது பொதுவானது. தாய்மார்கள், மகன்கள், தந்தைகள் மற்றும் மகள்கள் அனைவரும் கன்னத்தில் முத்தமிடுவதன் மூலமோ அல்லது கட்டிப்பிடிப்பதன் மூலமோ தங்கள் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். சீனர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
சாப்ஸ்டிக்ஸ்
சீனாவில் கத்தி போன்ற கருவிகளுக்கு பதிலாக அவர்கள் சாப்பிடுவதற்கு சாப்ஸ்டிக் என்ற முறையை பின்பற்றுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் இந்த சாப்ஸ்டிக் கொண்டு தான் தங்கள் உணவை எடுத்துக் கொள்கின்றனர். அந்த சாப்ஸ்டிக்கை ஒரு கிண்ணத்தில் நிமிர்ந்த நிலையில் வைக்க கூடாது. அப்படி நிமிர்ந்த நிலையில் வைத்தால் அது மோசமான அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
விசித்திரமான உணவுகள்
சீனர்கள் எப்பொழுதும் விசித்திரமான உணவுகளை எடுத்துக் கொள்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். பறக்கிறது, ஓடுறது, தாவுவது என எல்லாவற்றையும் சாப்பிடக் கூடியவர்கள் சீனர்கள். சீன நாட்டின் கிழக்குப் பகுதிகளில், கன்னிப் பையன்களின் சிறுநீரில் வேகவைத்த முட்டைகளை உண்பது ஒரு சுவையான உணவாகக் கருதப்படுகிறது. இப்படி பல வித்தியாசமான உணவுகளை சீனர்கள் சாப்பிடுகிறார்கள்.
சீனாவில் உள்ள தேநீர்
சீனர்கள் தேநீரை அதிகம் விரும்பி அருந்துகின்றனர். தேநீர் குடிப்பது அவர்கள் நீர்த் தாகத்தை போக்கும் என நினைக்கின்றனர். எனவே இயற்கையான மூலிகைகள் அடங்கிய தேநீரை அவர்கள் அருந்துகின்றனர்.
பரிசுகளை ஏற்கும் முன் மறுத்தல்
நம் நாடு மாதிரி சீனர்கள் பரிசுகளை கொடுத்த உடன் அதை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அதை வேண்டாம் என்று பல முறை மறுத்த பிறகு தான் அந்த பரிசுகளை அவர்கள் வாங்குவார்கள். எனவே சீனர்கள் பரிசு கொடுக்கும் நடைமுறையில் இதை பின்பற்றி வருகின்றனர்.
எப்பொழுதும் குடை பிடிப்பார்கள்
சீன மக்கள் குறிப்பாக சீன பெண்கள் எப்பொழுதும் குடை பிடிப்பார்கள். வெயிலினால் அவர்கள் சருமம் கருத்துப் போவதை அவர்கள் விரும்புவதில்லை. எனவே சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க அவர்கள் குடை பிடிப்பார்கள்.
மேஜையில் படுத்து உறங்குதல்
சீனர்கள் வேலை பார்க்கும் சமயத்தில் ஒரு சிறிய குட்டி தூக்கம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் அப்படியே மேஜையில் படுத்து ஒரு குட்டி தூக்கத்தை போடுகிறார்கள். இந்த சிறிய ஓய்வு அவர்களை புத்துணர்ச்சியாக வைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
இரவு நேரத்தில் குளித்தல்
சீனர்கள் நம்மளை மாதிரி பகல் நேரத்தில் குளிக்க மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் இரவு நேர குளியலை விரும்புகின்றனர். அவர்கள் காலை சோர்வை போக்க வேண்டும் என நினைப்பதில்லை. மேலும் இரவில் குளித்தால் மறுபடியும் காலையில் குளிக்க வேண்டாம் என நினைக்கின்றனர்.
காபிக்கு பதிலாக சோயா பீன்ஸ் மில்க்
சீனர்கள் பால் மற்றும் காபிக்கு பதிலாக சோயா பீன்ஸ் மில்க்கை குடிக்கின்றனர். சோயா பீன்ஸ் மில்க் இயற்கையானது மற்றும் சுவையானது. காலையில் தினமும் இந்த சோயா பீன்ஸ் மில்க்கை குடிக்கின்றனர். வீட்டுக்கு வீடு இந்த சோயா பீன்ஸ் பால் இயந்திரமும் வைத்திருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications











