Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
புதனின் ஆசியால் இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படப் போகுது...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 31 மார்ச் 2024 முதல் 06 ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை தொடர்பான பிரச்சனைகள் இந்த வாரத்தில் தீரும். இருப்பினும் வியாபாரிகள் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரம் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் அதிக வேலைப்பளு இருக்கும், ஆனால் உங்கள் கடின உழைப்பால் உங்கள் அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இருந்தாலும், தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக சிந்தனை மற்றும் கவலை காரணமாக ஆரோக்கியம் மோசமடையக்கூடும். பணிச்சுமை அதிகரிப்பதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அது வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் நீண்ட பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சிறு விஷயங்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பதவி உயர்வைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். குறுக்குவழி வழிகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் இந்த வாரம் நல்ல பலனைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவீர்கள். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மறக்கமுடியாததாக இருக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் நிறைந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் துணையுடன் சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். வணிகர்கள் சில முக்கிய வணிக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் அது கடினமாகிவிடும். வேலை தேடிக்கொண்டிருந்தால், உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். பண விஷயத்தில் இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆரோக்கியமாக இருக்க யோகா மற்றும் தியானத்தை தினமும் மேற்கொள்ள வேண்டும். மேலும் தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருங்கள். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலனைத் தரும். தொழிலதிபர்கள் மிகப்பெரிய நிதி நன்மைகளை பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுடன், விரும்பிய இடமாற்றத்தையும் பெறலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் தாம்பத்ய வாழ்க்கை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே வேறுபாடுகள் அதிகரிக்கும். இந்த வாரத்தில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உறவில் அன்பையும் இனிமையையும் பராமரிக்க முயற்சிக்க வேண்டும். பேசி பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். வணிகர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். முக்கிய வணிக முடிவுகளை எடுக்க இந்த வாரம் நல்லதல்ல. மனதளவில் இந்த வாரம் சவாலானதாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்த தொழிலதிபர்கள் பழைய முதலீடுகளால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். வார இறுதியில் சில வேலை தொடர்பான நல்ல செய்திகளை பெறலாம். பணம் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொண்டால் உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும். வார இறுதியில் வாழ்க்கைத் துணையுடன் பயணத்தை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் மறக்க முடியாததாக இருக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனரீதியாக வலுவாக இருப்பீர்கள். உங்கள் சிறிய முடிவுகளை கூட மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். வாரம் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள், அதன் தாக்கம் உங்கள் வேலையிலும் தெரியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் சகவாசம் கிடைக்கும். வேலையை மாற்ற விரும்பினால் நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். மாணவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் சீரான முறையில் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கலாம். இந்த வாரத்தில் அதிக வேலைப்பளு காரணமாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் சுமாராக இருக்கும். உங்கள் செலவுகளைக் கண்காணிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் உங்கள் பட்ஜெட்டை கெடுத்துவிடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications











